Thursday 3 July 2014

வருந்துகிறோம்

 வருந்துகிறோம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் காட்டுமிராண்டிகளால் கும்பலாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அந்த சகோதரிக்கு தஞ்சைமாவட்டச்சங்கம் அஞ்சலியை செலுத்துகிறது. அதே போல அவரை இழந்து துடிக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்கு எதிராக, டெல்லியிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்ட எழுச்சியை நம்மால் பார்க்க முடிந்தது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக நாமும் வலுவாக குரல் கொடுப்பதுதான் மறைந்த அந்த சகோதரிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 

No comments:

Post a Comment