Saturday 29 July 2017

27.07.2017 வேலை நிறுத்தம் வெற்றி


வெற்றிகரமாய் நடைபெற்ற வேலை நிறுத்தம்.  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday 26 July 2017

பத்திரிக்கை செய்தி


பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூலை 27 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திட முடிவு செய்திருப்பதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊதியத் திருத்தம் கோரி, வரும் ஜூலை 27 அன்று பிஎஸ்என்எல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் குறித்தபேச்சுவார்த்தைகள் 2017 ஜனவரி 1 அன்றே தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் மூன்றாவது ஊதிய திருத்தக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அக்குழுவும்தன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி, அமைச்சரவைக்குழுவும் அதனை 2017ஜூலை 19 அன்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரையில் மிகவும் முக்கியமான ஒன்று, தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பதாகும்.இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியத் திருத்தத்திற்கு தகுதி அற்றவர்களாகிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றைய தினம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல, மாறாகஅரசாங்கமே காரணம் என்பதையும் அது அமல்படுத்திவரும் பிஎஸ்என்எல் விரோத கொள்கைகளே காரணம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை தன்னுடையமொபைல் வலை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்குஅரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட டெண்டர்களை அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்து வந்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்து வந்தது.
அரசாங்கமே தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வந்ததன் காரணமாகவே, மொபைல் வளர்ச்சியில் பிஎஸ்என்எல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, பிஎஸ்என்எல் அலுவலர்களும், ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎன்றால், பிஎஸ்என்எல் அலுவலர்கள் – ஊழியர்கள் போராட்டங்கள் தீவிரமாகும். இவ்வாறு பி.அபிமன்யு கூறியுள்ளார்

27.07.2017 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்.

நமது ஊதிய மாற்றத்திற்காக நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டம் 27.07.2017 அன்று 00.00 மணி முதல் 28.07.2017 அன்று 00.00 மணி வரை நடைபெறும். நமது தோழர்கள் வேலை நிறுத்த தினமான 27.07.2017 அன்று காலை சக்தியான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். ஊதிய மாற்றம் நமது உரிமை- 27.07.2017 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Friday 21 July 2017

வேலை நிறுத்தத்தை நோக்கி

3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். 
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.<<<Click here>>>

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Thursday 20 July 2017

25-07-2017 தஞ்சை செயற்க்குழு கூட்டம்

25-07-2017 காலை 10.00 மணிமுதல்  தஞ்சை  BSNLEU சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறும். மாநில உதவி செயலாளர் Com.M .BABU, கிருஷ்ணகிரி அவர்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்த விளக்க உரை  ஆற்ற உள்ளார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைத்து கிளைச்செயலாளர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.  

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday 12 July 2017

நெல்லை விரிவடைந்த மாநில செயற்குழுவிற்கு சிறப்பு தற்காலிக விடுப்பு

திருநெல்வேலியில் 15.07.2017 அன்று நடைபெறும் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழுவிற்கு தமிழ் மாநில நிர்வாகம் சிறப்பு தற்காலிக விடுப்பு அனுமதித்து வெளியிட்ட உத்தரவு <<<<Click here>>>
A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

13-07-2017 உண்ணாவிரதம்

13-07-2017 காலை 10.00 மணி முதல்  தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில்  BSNLEU, SNEA, SNATTA,  AIGETOA   சங்கங்கள் சார்பாக உண்ணாவிரதம்  நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BSNLEU--&--SNEA--&--SNATTA  தஞ்சை மாவட்டசங்கங்கள்



Friday 7 July 2017

GPF இந்த மாத பட்டுவாடா

GPF  இந்த மாதம் பட்டுவாடா குறித்து மாநில் நிர்வாகம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 01.07.2017க்கு பிறகு ESS மூலம் விண்ணப்பித்தவர்கள் ரத்து செய்து ஜூன் மாத GPF subscription/Advanceஐ கணக்கில் கொள்ளாமல் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஜுன் மாதம் விண்ணப்பித்தவர்கள் யாரும் ரத்து செய்து புதிதாக விண்ணப்பிக்க கூடாது. DOT ரிஜெக்ட் செய்வதை தவிர்க்கவும். 
.A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Tuesday 4 July 2017

NFTE தொடர் உண்ணாவிரதம் BSNLEU வாழ்த்து

ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணிசங்கங்கள் சார்பாக தொடர் உண்ணாவிரதம் இன்று ஜுலை 4ம் தேதி தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில்  நடைபெற்றது, 
தொடர் உண்ணாவிரத்தை BSNLEU  மாவட்டச் செயலாளர் தோழர்  A.இருதயராஜ் வாழ்த்தி பேசினார்.

Monday 3 July 2017

NFTE கூட்டணியின் போராட்டத்திற்கு BSNLEU ஆதரவு

ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணி  சங்கங்கள் சார்பாக தொடர் உண்ணாவிரதம் ஜுலை 3ம் தேதி தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது, 4 ம் தேதி தொடரவுள்ளது, அதற்கு BSNLEU தனது ஆதரவை  தெரிவித்துக் கொள்கிறது.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்