Tuesday 30 September 2014

பணி நிறைவு விழா இன்று 30.09.2014

பணி நிறைவு விழா

தோழர் அவர்கள் தன்னுடைய பணியை முழுமையாக இந்த தொலைபேசி இலாக்காவில் 41- ஆண்டுகள் சிறப்பாக திரன்பட செயல்பட்டு மகிழ்ச்சியோடு பணி நிறைவு பெறுகிறார்.

தோழர் அவர்கள் தன்னுடைய பணி காலம் 
19.06.1974 மயிலாடுதுறையில் அன்று இலாக்காவில் காலடி பாதம்  வைத்து DOT காலத்தில் பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் தோழர் R.பக்கிரிசாமி அவர்கள்.இன்று 30.09.2014 திருவாரூரில் பணி நிறைவு பெரும்பொழுது BSNLEU சங்கத்தில் முன்ணோடியாக  தன்னை உயர்த்தி மகிழ்ச்சியுடன் பணி நிறைவு பெருகிறார். தோழர்  R.பக்கிரிசாமி அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் BSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

R.பக்கிரிசாமி TSO





தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

ஆர்ப்பாட்டம்

இன்று 30.09.2014திருவாரூரில்BSNLEU ஆர்ப்பாட்டம்


இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்


30.09.2014 இரண்டு மணி நேர வேலை

 நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் 



அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள BSNLEU சங்க ஊழியர்கள் அனைவரும் அகில இந்திய சங்க அறைகூவலுக்கு இனங்க 30- அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி காலை 11.00 மணி முதல் 1.00மணி வரை 2-மணி நேர வேலை நிறுத்தத்தை வெற்றிபெறசெய்வோம்

தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம்
தஞ்சை

போஸ்டர்

மாநில மாநாடு போஸ்டர்<<<Click Here>>>

Saturday 27 September 2014

சுற்றறிக்கை எண்:172

30.09.2014 இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்<<<Click Here>>>

Thursday 25 September 2014

மங்கள்யான் வெற்றி!!!!!!

மங்கள்யான் வெற்றிக்கு உழைத்திட்ட அடிமட்ட தொழிலாளர்கள் முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் வரை அனைவரையும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மனமார வாழ்த்துகிறது. பாராட்டுகிறது.<<<Click Here>>>

Sunday 21 September 2014

சுற்றறிக்கை எண்:171

BSNL மூடலா? <<<Click Here>>>

பெருந்திரள் தர்ணா - 23/09/2014

தர்ணா போராட்டத்திற்கான 30 அம்ச கோரிக்கைகள் மற்றும் தமிழ் மாநில கூட்டுப் போராட்டக்குழு வேண்டுகோள்<<<Click Here>>>

Saturday 20 September 2014

உறுதியான போராட்டத்தால் உத்தரவாதமான வேலை

உறுதியான போராட்டத்தால் உத்தரவாதமான வேலை - தீக்கதிர் செய்தி<<<Click Here>>>

ஒப்பந்த ஊழியர் போராட்டம் வெற்றி

ஒப்பந்த ஊழியர் போராட்டம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை ஒட்டி இந்தூரிலிருந்து தோழர் பிரகாஷ் சர்மா நமது பொதுச் செயலருக்கு கொடுக்கப்பட்ட SMS..... Respected Comrade, Hats off and Red Salute to Tamilnadu Comrades for their Exemplary Victory on Contract Workers Issue. This proves that Struggle Path always ends on Destination Success.... Regards, Prakash Sharma, Indore.

ஆர்ப்பரித்த அலைகடலால்…………. அமோக வெற்றி!!!!!!

காலவரையற்ற உண்ணா நோன்பும், ஒரு நாள் வேலை நிறுத்தமும், பெருந்திரள் உண்ணாநோன்பும் -மகத்தான வெற்றி<<<Click Here>>>

Wednesday 17 September 2014

பெருந்திரள் உண்ணாவிரத காட்சிகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட வேலூர் மாவட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி16-9-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்  நடைபெற்ற பெருந்திரள் உண்ணாவிரத காட்சிகள்






 தோழமையுடன்
BSNLEU தஞ்சை மாவட்டம்

Tuesday 16 September 2014

தந்தை பெரியார் அவர்களுக்கு136 வது பிறந்தநாள்வாழ்த்துக்கள்.... செப்டம்பர் 17.09.2014







மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்!

- தோழர் ஈ.வெ.ரா




Photo: தமிழச்சி (Tamizachi)

பொதுச் செயலர் CMDக்கு கடிதம்

140 வேலூர் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிகோரி CMDக்கு கடிதம்<<<Click Here>>>

காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…

காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து திரளாக தோழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.<<<Click Here>>>

மிக சிறப்பு வாய்ந்த பாடகி எம்.எஸ்.சுப்புலெஷ்சுமி அம்மா 16.09.2014இன்று 98-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அவர்கள் மறைந்தாலும் அவர்களுடையநினைவுகள் மறைவதில்லை


கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற சொல்லை அறிமுகம் படுத்தியவர் அறிஞர் அண்ணா இன்று பிறந்தநாள் 15.09.2014

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின்ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியாகுடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

பேரறிஞர் அண்ணா


தத்துவம்

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்"
"கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்"







பதவியில்
பெப்ரவரி, 1967 – 3 பெப்ரவரி 1969
பிரதமர்இந்திரா காந்தி
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்எம். பக்தவச்சலம்
பின்வந்தவர்வி. ஆர். நெடுஞ்செழியன்(தற்காலிகம்)

பதவியில்
1962 – 1967
குடியரசுத் தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பிரதமர்ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி

பதவியில்
1967 – 1969
தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்எஸ். வி. நடேச முதலியார்
தொகுதிகாஞ்சிபுரம்
பதவியில்
1957 – 1962
ஆளுநர்ஏ. ஜே. ஜான்,
பக்காலா வெங்கட்ட ராஜமன்னார்,
பீஷ்ணுராம் மெதி
முன்னவர்தெய்வசிகாமணி
பின்வந்தவர்எஸ். வி. நடேச முதலியார்

பிறப்புசெப்டம்பர் 151909
காஞ்சிபுரம்தமிழ்நாடு,பிரித்தானிய இந்தியா
இறப்புபெப்ரவரி 31969(அகவை 59)
சென்னைதமிழ்நாடு,இந்தியா
வாழ்க்கைத்
துணை
இராணி அண்ணாதுரை
பிள்ளைகள்யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்
தொழில்அரசியல்வாதி

காலவரையற்ற உண்ணாவிரதம்

15.09.2014 அன்று காலை 10 மணிக்கு BSNL ஊழியர் சங்க மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் முன்னிலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.<<<Click Here>>>

Monday 15 September 2014

Friday 12 September 2014

சுற்றறிக்கை எண்:169

பொறுப்பதிற்கில்லை தோழா! பொங்கி எழுவோம்!<<<Click Here>>>

Thursday 11 September 2014

மகாகவி பாரதியார் நினைவு நாள் இன்று 11.09.2014

 
மகாகவி பாரதியார் 

இன்று பாரதியார் நினைவு நாள் அவர் புகழ் பரவட்டும்...
செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)


தமிழ் மாநில மாநாடு

தமிழ் மாநில மாநாடுஅக்டோபர் 11 முதல் 13 வரை திருச்சியில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிப்பு இன்று
            வெளியிடப்பட்டுள்ளது.<<<Click Here>>>

தமிழ் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 27.09.2014 அன்று நடைபெற இருக்கிறது - நோட்டீஸ்<<<Click Here>>>

Wednesday 10 September 2014

காலவரையற்ற உண்ணாவிரதம்

15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - போஸ்டர்<<<Click Here>>>

நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

நீதிமன்ற தடையையும் மீறி நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்<<<Click Here>>>

Saturday 6 September 2014

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்! நண்பர்கள் 
அனைவருக்கும் பொன் ஒனம் தினத்தின்
 நல்வாழ்த்துக்கள்


மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை... கேரள மற்றும் குமரி மாவட்ட மக்கள் வசந்த கால விழாவாக ஒணம் ... பண்டிகை கொண்டாடபடிகின்றது: BSNLEU ஓணம் வாழ்த்துக்கள் ...

ஆண்டுதோறும் தன் மக்கள் மகிழ்வுடன் வாழும் நிலை காண, அதே நாளில் மகாபலி சக்கரவர்த்தி ஓண பண்டிகை தினத்தன்று தன் மக்கள் மத்தியில் எழுந்தருளும் புனித திருநாளான ஓணத்திருநாளில் மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியில் ஒருவருக்கொருவர் இணக்கமாக துணையாக இணைந்து வாழும் ஓணத்திருவிழா அமைவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இந்நன்நாளில், மகாபலி மன்னனை மனதில் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகிறோம்.



அத்தப்பூ கோலம்

இந்த பத்து நாட்களும் விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு வீட்டினை அலங்கரக்கின்றனர். திருவோண நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவு பாதர்த்தங்களுடன் உற்சகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து,  படகு போட்டி, போன்ற பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

தோழமையுடம்
BSNLEU மாவட்ட சங்கம்/தஞ்சை

காலவரையற்ற உண்ணாவிரதம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட வேலூர் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதம்.<<<Click Here>>>

Friday 5 September 2014

வாழ்க புகழ்

தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்,
கப்பல் ஓட்டிய தமிழன் திரு வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள்,
அன்னை தெரசா நினைவு நாள்  இவர்களுடைய புகழ்  பரவட்டும்.... மற்றும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்



Monday 1 September 2014

15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சனை - 15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ்<<<Click Here>>>