Monday 30 November 2015

கண்ணீர் அஞ்சலி

கிருஷ்ணகிரி-தோழர்.E.கனேசன் இயற்கை எய்தினார்<<<Click Here>>>

Thursday 26 November 2015

Saturday 21 November 2015

சுற்றறிக்கை எண்:79

7ஆவது ஊதியக் குழு பரிந்துரையும் சில செய்திகளும்<<<Click Here>>>

Wednesday 18 November 2015

சுற்றறிக்கை எண்:77

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு BSNL ஊழியர் சங்கம் உதவி<<<Click Here>>>

Tuesday 17 November 2015

மனித நேயத்துடன் உதவிட மாநில சங்க வேண்டுகோள்

சமீபத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, உடைமைகளைஇழந்துதவிப்பதைஅனைவரும்அறிவோம்.  கிட்டத்தட்ட 40க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .

மனித நேயத்துடன், துயர் துடைக்க,நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு விரைந்து அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . 

கிளைச் சங்கங்கள் உடனடியாக இந்த பணியை செய்திட வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிகிறேன். 


தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU

Monday 16 November 2015

சுற்றறிக்கை எண்:76

மாநில அளவில் WORKS COMMITTEE மற்றும் இதர செய்திகள்<<<Click Here>>>

Monday 9 November 2015

தஞ்சை மாவட்டசங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள் . . .

 தீபாவளி நல்வாழ்த்துக்கள் . . .



தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU

மத்திய சங்க செய்திகள்

இந்த மாத GPF மற்றும் Festival Advanceபட்டுவாடாவிற்குதேவையான நிதியை உடனடியாக வழங்க, GM (CA ) அவர்களை 04.11.2015 அன்று, நேரில் சந்தித்து நமது பொது செயலர்,தோழர். P . அபிமன்யூ வலியுறித்தியுள்ளார்.

விடுபட்ட Casual Labourers தோழர்களை நிரந்தர படுத்த வலியுறுத்தி, BSNLEU - BSNLCCWF சங்கங்கள் சார்பாக கூட்டாக, நமது தலைவர்கள் CMD ஐ, 04.11.2015 அன்று நேரில் சந்தித்து வலியுறித்தியுள்னர்.

பதவிகள் பெயர் மாற்ற உத்தரவை விரைந்து வெளியிட, 04.11.2015 அன்று GM (Restg) அவர்களை நேரில் சந்தித்து நமது பொது செயலர் வலியுறித்தியுள்ளார். 
குறிப்பாக TTA தோழர்களுக்கு JE பெயர் வழங்க தேவையான ஆவணங்கள், ஆதாரங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார். 
அதே போல்,  NE11சம்பள விகிதத்திற்கு கிழ் உள்ள  Sr.TOA தோழர்களின் பெயர் மாற்றத்திலும் சிறு அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, 03.11.2015 அன்று CMD அவர்களையும் சந்தித்து இதே கோரிக்கையை முன் வைத்தார். CMD சாதக முடிவு எடுப்பதாக உறுதி கூறி உள்ளார்.

திரு.ராகேஷ் குமார் மிட்டல் புதிய Director (CM ) ஆக நியமிக்க பட்டுள்ளார். BSNL புத்தாக்கத்திற்கு, இந்த நியமனம் உதவும் என நாம் நம்புகிறோம்.

NEPP பதவி உயர்வில், 01.10.2000 முதல் 01.10.2004 வரை வழங்கபட்ட TM , TTA போன்ற பதவி அடிப்படையிலான பதவி உயர்வை, NEPP பதவி உயர்வாக கருத கூடாது என  வலியுறுத்தி மனிதவள இயக்குனருக்கு 03.11.2015 அன்று  நமது மத்திய சங்கம் கடிதம் மீண்டும் எழுதியுள்ளது. 

JAO ஆளெடுப்பு விதியில் நாம் கடுமையாக வலியுறுத்தி வந்த சேவை காலம் குறைப்பு கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 
ஆம், 30.10.2015 அன்று வெளியிடப்பட்ட, திருத்த விதிகளில், 10 வருட சேவை காலம் என்பது 5 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம், 5 வருடம் Gr .C சேவை முடித்த தோழர்கள் JAO இலாக்கா போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

BSNL கேபிள்களை நாடு முழுவதும் NHAI, PWD, EB போன்ற அரசு நிறுவனங்கள் சேத படுத்துவதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் SC / ST / OBC பிரிவுகளில் காலியாக உள்ள TTA நேரடி நியமன   பணியிடங்களை நிரப்ப கார்ப்ரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. SC - 25, ST - 77, OBC 45 என மொத்தம் 147 இடங்கள் உள்ளது. 
தமிழ் மாநிலத்தில் காலி இடங்கள் இல்லை. ஆனால், சென்னை தொலைபேசி மாநில செங்கல்பட்டு மாவட்டத்தில் OBC பிரிவில் 4 இடங்கள் உள்ளது. 




தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU 

BSNL OFFERS DIWALI SPECIAL










Friday 6 November 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் ஆர்ப்பாட்டம் 07.11.2015

*** போனஸ் ஆர்ப்பாட்டம்***
TNTCWU தஞ்சை மாவட்டம் 

தோழர்களே ! தோழியர்களே !
ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் ஆர்ப்பாட்டம் 07.11.2015 அன்று காலை 10.00 மணியளவில் பாலாஜி நகர் GM அலுவலகம் முன்பு நடைபெறும் அணைத்து தோழர்களும் தோழியர்களும்  தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன் 
TNTCWU BSNLEU
ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் 
தஞ்சை 

மோடி பற்றி மூடிஸ்

மத்திய அரசின் நிராகரிப்பும் மூடீஸின் உறுதிப்பாடும்<<<Click Here>>>

Tuesday 3 November 2015

சுற்றறிக்கை எண்:73

கேடர் பெயர் மாற்றமும் சில மத்திய சங்க செய்திகளும்<<<Click Here>>>

Monday 2 November 2015

மத்திய சங்க செய்திகள்


ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஒப்பந்ததாரர் மூலம் அடையாள அட்டை, EPF அட்டை, ESI மருத்துவ அட்டை போன்றவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, டில்லி தலைமையகம், அனைத்து மாநில பொது மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா வங்கி அல்லது காசோலை மூலம் தான் செய்ய பட வேண்டும் என வலியுறுத்தி, மாநில நிர்வாகங்களுக்கு கார்பரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், ஊழியர் பிரிதிநிதி சங்கம் சார்பாக பங்கு பெறுவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை நிர்வாகம் பிறப்பித்தது. இதை நமது மத்திய சங்கம் கடுமையாக எதிர்த்தது . நமது எதிர்ப்புக்கு அடி பனிந்து விதிகளை தளர்த்தி 23.10.2015 அன்று கார்ப்ரேட் நிர்வாகம் மறுஉத்தரவு வெளியிட்டுள்ளது. 

TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும் கார்ப்ரேட்அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

கருணை அடிப்படையிலான பனி நியமன விண்ணப்பங்களை பரிசிலிக்கும் போது , இலாக்கா பனி விபத்துகளால் உயிர் நீத்த தோழர்களின் விண்ணப்பங்களை புள்ளி அடிப்படையில் நிராகரிக்க கூடாது என மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 


தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU