Thursday, 30 July 2015

31.07.2015 பணிநிறைவு பெரும் தோழர்களுக்கு தஞ்சை BSNLEU மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

வாழ்த்துகிறோம் 

ஜூலை -2015 பணிநிறைவு  பெறுபவர்கள் 
தோழர்.G.கண்ணன்.TM ,தஞ்சை
தோழர்.KR.முருகானந்தம் .Sr.TS(OR),மன்னார்குடி
தோழர்.KR.பாஸ்கரன் . S.TG.M, மன்னார்குடி
தோழர்.P.மூர்த்தி .TSO, திருவாரூர்
தோழர்.S.பழனிவேலு .TM, மன்னார்குடி
தோழர்.மனோகரன்.JTO, தஞ்சை  

அனைவரின்  பணிநிறைவு  காலம் சிறக்க BSNLEU மாவட்டசங்கம்  மனதார வாழ்த்துகிறது.

தோழமையுடன் 
BSNLEU தஞ்சை மாவட்டசங்கம்


Wednesday, 29 July 2015

பெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்

சுற்றறிக்கை எண் 53ல் குறிப்பிடப்பட்டுள்ள 28.07.2015 அன்று நடைபெற்ற கேடர் பெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள் (MINUTES) வெளியிடப்பட்டுள்ளது.<<<Click here>>>

Tuesday, 28 July 2015

சுற்றறிக்கை எண்:53

மாபெரும் வெற்றி<<<Click Here>>>

கேடர் பெயர் மாற்றம்,

இன்று நடைபெற்ற கேடர் பெயர் மாற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு கேடர்களின் பெயர்கள் மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது . 1) Regular Mazdoor - Telecom Assistant. ரெகுலர் மஸ்தூர் - டெலிகாம் அசிஸ்டன்ட் . 2) Telecom Mechanic - Telecom Technician டெலிகாம் மெக்கானிக் - டெலிகாம் டெக்னிசியன்  3) TTAs - Junior


Breakthrough reached in the change of designations issue.
CHQ congratulates the entire Non-Executive employees. The long pending issue of 'Change of Designations' is settled in today's meeting. Finally, the break through is reached.

Details of the settlement:-
1)  Regular Mazdoor                -  Telecom Assistant.
2)  Telecom Mechanic             -  Telecom Technician
3)  TTAs                                      -  Junior Engineer.
4)  Sr.TOAs in NE11 &
              NE12 pay scales        -  Office Superintendent. 
5) Other Sr.TOAs                      -  Office Associate.





சகாப்தம் மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்

இந்திய விண்வெளியின் நாயகன் என்றழைக்கப்படும் நமதுமுன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று ஷில்லாங்கில் INDIAN INSTITUTE OF MANAGEMENT மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 84 ஆவது வயதில் காலமானார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த அஞ்சலியை  BSNLEU தஞ்சை  மாவட்டசங்கம் தெரிவித்துகொள்கிறது  .<<<Click Here>>>

Friday, 24 July 2015

செப்டம்பர் -2 ஒரு நாள் அடையாள பொதுவான வேலை நிறுத்தம் BSNL மற்றும் அனைத்து சங்கங்களும்

மாபெரும்  வேலை நிறுத்தம் 2 -செப்டம்பர் -2015 அன்று BSNL   மற்றும்  அனைத்து சங்கங்களும்   ஒன்று இணைந்து  வேலை நிறுத்தம் நடைபெறும் அனைத்து தோழர்களும், தோழியர்களும், தவறாமல்கலந்து கொள்ளும்படிகேட்டுக்கொள்கிறோம் BSNLEU  மாவட்டசங்கம் 


Efforts are on to organise a joint campaign for the
 2nd September General Strike.

Serious efforts are being taken to organise a joint campaign programme, at the National level, to make the 2nd September General Strike a success in BSNL. An all Union / Association meeting is being held at New Delhi on 27.07.2015. Convener, Forum of Unions and Associations has issued the notification for the meeting <<< Click Here>>>

Wednesday, 22 July 2015

சுற்றறிக்கை எண்:52

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகங்கள்<<<Click Here>>>

Monday, 20 July 2015

ஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15,000/- கோரி 29.07.2015ல் பேரணி

தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச கூலியை 15,000 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி தமிழகத்தில் 7 மையங்களில் பேரணி<<<Click Here>>>

Sunday, 19 July 2015

சுற்றறிக்கை எண்:51

ஊழியர் பிரச்சனைகள் மீது நடைபெற்ற பேச்சு வார்த்தை<<<Click Here>>>

Saturday, 18 July 2015

சுற்றறிக்கை எண்:50

FORUM கூட்ட முடிவுகளும், DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பும்<<<Click Here>>>

Thursday, 16 July 2015

புனித ரமலான் வாழ்த்துக்கள்.18.07.2015

அனைத்து இசுலாமியச் சகோதரர்களுக்கும்  சகோதிரிகளுக்கும்  இனிய "ஈகைத்திருநாளின் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்". 
ஒருவருடைய குணங்கள் அவர் சாப்பிடும் உணவு வகைகளை பொருத்தும் காணப்படும் என்பர். நாம் சாப்பிடும் உணவு அளவோடும், கட்டுப்பாடோடும் இருக்கவேண்டும் என்பதாக தெரிகிறது. உணவுக் கட்டுப்பாடு என்பது ஒருவருடைய பழக்கத்தில் வந்தால் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த 'கட்டுப்பாடு' வருவதற்கு, விரதமிருத்தல் அவசியமாகும்.


மொழி, இன, மத வேறுபாடின்றி இந்த 'விரதம்' இருக்கும் பழக்கம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய சமூகத்தினரால் கடைபிடிக்கப் பட்டு வருவது, 'ரமலான்' மாதமாகும். இந்த ரமலான் நோன்பிருந்து, நாளை புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை இன்ப்பதிவின் மூலம் தெரிவித்துக்  கொள்கிறோம் .

தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது 



Tuesday, 14 July 2015

திருத்துறைபூண்டியில் BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது

தஞ்சை BSNLEU   மாவட்ட செயற்குழு கூட்டம் திருத்துறைபூண்டியில்  மிக சிறப்பாக நடைபெற்றது 


நமது மாவட்ட  செயற்குழுவை    தோழர் .A .இருதயராஜ் அவர்கள். BSNLEU மாவட்டசங்க தலைவர்  துவக்கிவைத்தார்கள்.

சிறப்பு அழைப்பாளர்  தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர்  நமது  சங்ககொடியை   ஏற்றிவைத்து தொடக்க உரை ஆற்றினார்கள்.

வரவேற்ப்பு உரையை தோழர்.Dசுப்ரமணியன்அவர்கள்.BSNLEU  மாவட்ட  செயலர்  உரையாற்றினார்.

பின்னர் கிளை செயலர் மற்றும் மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்களுடைய உரையை எழுச்சிமிகு ஆற்றினார்கள் சங்கத்தின் வளர்சியைபற்றியும் நாட்டின் ஒற்றுமை பற்றியும்  கடைமைகள் பற்றியும் அனைவரும் தெளிவாக எடுத்துரைத்தனர். 

குறிப்பாக:
1.கிளை மட்ட பிரச்சனைகள் மற்றும்  பல  நமது சங்கத்தின் வழிகாட்டுதலுடன் தோழர்களை நமது சங்கத்திள் இணைப்பது இன்னும் பல முடிவுகள்   பற்றியும் 
2.தஞ்சையில் மாநிலசெயற்குழு நடத்துவது பற்றியும் 
3.வருகின்ற நமது சங்கத்தின் தேர்தல் பற்றியும் 
4.நாட்டில்  உள்ள நிகழ்வுகள் பற்றியும் 
மிக சிறப்பாகவும்  தெளிவாகவும்  எடுத்துரைத்தனர் 

சங்ககொடியை  தோழர்.A . பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU  மாநில செயலர்   ஏற்றிவைத்தார் 
சங்ககொடியை  தோழர்.D . சுப்ரமணியன்  அவர்கள்.BSNLEU  மாவட்ட  செயலர்   ஏற்றிவைத்தார் 










தோழர் .A .இருதயராஜ் அவர்கள். BSNLEU  மாவட்ட தலைவர் 
தோழர்.Dசுப்ரமணியன்அவர்கள்.BSNLEU  மாவட்ட  செயலர்  
தோழர்.A . பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU  மாநில செயலர் 

 தோழர் .கரிகாலன்  அவர்கள். BSNLEU  கிளை செயலர்
தோழர் .நெப்போலியன்   அவர்கள். BSNLEU  கிளை செயலர்
 தோழர் .மாணிக்கம்   அவர்கள். BSNLEU  கிளை செயலர்
 தோழர் .பன்னீர்  அவர்கள். BSNLEU  கிளை செயலர்
தோழர் .சத்தியவானன் அவர்கள்.BSNLEU ஒப்பந்த உழியர் மாவட்ட செயலர்       
தோழர் .கரிகாலன்  அவர்கள்.BSNLEU  மாவட்ட அமைப்பு செயலர்       
தோழர். யாசின் BSNLEU  உதவி செயலர்       
தோழர் .ஜெயகுமார்   அவர்கள்.BSNLEU  கிளை செயலர்
 தோழர் .பன்னீர்  அவர்கள். BSNLEU  கிளை செயலர்
தோழர்.கர்ணன் அவர்கள்.BSNLEU  கிளை செயலர்      
தோழர்.நாகராஜன் அவர்கள்.BSNLEU   மாவட்ட துணை தலைவர்      
தோழர்.துரைராஜ்  அவர்கள்.BSNLEU  கிளை செயலர்      
தோழியர்.தினமணி  அவர்கள்.BSNLEU  மாவட்ட துணை தலைவர்      
தோழர்.KT .முருகையன் அவர்கள்.BSNLEU
தோழர்.ரமேஷ் அவர்கள்.BSNLEU  மாவட்டதுணை  செயலர் 
தோழர்.ரமணன் அவர்கள்.BSNLEU  மாவட்டபொருளாளர்
வாழ்த்துகளுடன் 
BSNLEUதஞ்சை மாவட்டம் 

கண்ணீர் அஞ்சலி

FNTOBEA சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் P.ஆண்டியப்பன் அவர்கள் 12.07.2015 அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். தோழர் ஆண்டியப்பன் அவர்கள் தந்தி பிரிவில் பணியாற்றினாலும் கூட ஊழியர் பிரச்சனைகளில் கவனம் கொண்டு தீர்ப்பதற்கு முயற்சி எடுத்தவர். தந்திப் பகுதியின் FNTO மாநிலச் செயலராக பல ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க தோழர். BSNL ஊழியர் சங்கத்துடன் இணைந்து செயலாற்ற FNTOBEA சங்கத்தை உருவாக்கி தனது இறுதி மூச்சு வரை இணைந்து செயலாற்றியவர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பல ஆண்டுகளுக்கு முன் செய்த பின்னரும் இயக்கப் பணியை விடாது ஆற்றிய அவரது உறுதி நம்மை வியக்க வைக்கிறது. தோழர் ஆண்டியப்பன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இயக்க தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் கண்ணீரோடு அஞ்சலியை செலுத்துகிறது.

Wednesday, 8 July 2015

தமிழ் மாநில தலைமைப் பொது மேலாளாருடன் சந்திப்பு…

மாநிலத் தலைவர் (AGS) தோழர் S.செல்லப்பா மற்றும் மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் ஆகியோர் இன்று (08.07.2015) தலைமைப் பொது மேலாளரை சந்தித்தனர். JTO காலிப்பணியிடங்களை உடனடியாக மறு கணக்கீடு செய்து கார்ப்பரேட் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நமது தலைவர்கள் கோரினர். JTO காலிப்பணியிடங்கள் மறுகணக்கீடு செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில் கார்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று தலைமைப் பொது மேலாளர் உறுதி கூறினார். எனினும் இதில் ஏற்பட்ட கால தாமதம் என்பது கவலைக்குறியது என குறிப்பிட்டோம். தலைமைப் பொது மேலாளர் அவர்கள் நமது உணர்வினை புரிந்துகொண்டு இப்பிரச்சனையில் விரைந்து  நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள BSNL சலுகைகள் சம்பந்தமாக மாவட்ட அளவில் செய்யவேண்டிய பணிகளை விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது.  மாவட்ட மட்டங்களில் நிர்வாகம் இதை விளம்பரப்படுத்துவதிலும் புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதிலும், நாகர்கோவில் நீங்கலாக எங்கும் வேகமாக செயல்படுவதில்லை என்ற ஆதங்கத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளோம். CGM அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.

National MNP successfully implemented.


It is certainly a proud moment for India that National Mobile Number Portability is implemented from 3rd July. The Department of Telecom has successfully rolled out the NMNP, involving 175 networks, across 22 circles. This allows customers to retain their mobile numbers, even if they move from one circle/state to another. Introduction of NMNP will surely increase customer satisfaction. BSNL has to improve it’s quality of service, to retain it’s customers. 

BSNL Launches SpeedPay Mobile Wallet: How Can You Use It?


BSNL launches mobile wallet with cash withdrawal option.
BSNL launched a pre-paid card linked mobile wallet service, which would allow its customers to transfer money, pay for services as well as withdraw cash of up to Rs 1 lakh. The wallet service, Speed Pay, allows a customer to load money even if he does not have a bank account. The money loaded in the mobile wallet can be transferred to a bank account and even withdrawn at bank branches or at BSNL outlets. "Loading money into wallet from a bank account is an option. BSNL customers, who don't have bank accounts, can also load money by visiting any BSNL retail outlet and ask the retailer to recharge their mobile wallet account and pay for various services," BSNL Chairman and Managing Director Anupam Shrivastava said. <<<Click Here>>>



Tuesday, 7 July 2015

சுற்றறிக்கை எண்:49

ப்ராட் பேண்ட் சேவையை தனியாருக்கு தராதே!!!!<<<Click Here>>>

Sunday, 5 July 2015

டெலிகாம் கூட்டுறவு சோசைட்டி, சென்னை.

டெலிகாம் கூட்டுறவு சோசைட்டி, சென்னை. கடந்த15ஜூன் நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சாதாரண கடனுக்கான (O L ) வட்டியை 14.5%லிருந்து 16%சதமாக உயர்த்தியது உறுப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை / கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
     திடிர் வட்டி உயர்வு மிகுந்த சுமையை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
   இது முழுக்க முழுக்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாகும். 
சாதாரண கடனை 6 லட்சமாக உயர்த்தியதை காரணம் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல!!                                                                                        இந்த வட்டிஉயர்வை உடனடியாக கைவிட  வேண்டும்.                              தெ .சுப்ரமணியன்,மாவட்ட செயலர்.    

Friday, 3 July 2015

வெற்றிக்கு நரகமே வழி

சொர்க்கத்திற்கு செல்ல வழி

ஒன்று இருக்குமேயானால்.!
அது நரகத்தை கடந்து செல்லும்
வழியாகவே இருக்கும்.!
வெற்றியின் பாதையும்
தோல்வியை கடந்து
செல்லும் பாதையே.!!
சொர்க்கத்தை விரும்புவோர்கள்
நரகத்தை புறக்கணிக்க முயலாதீர்கள் 
அதை எதிர்கொள்ள முயலுங்கள்.!
வெற்றி உங்கள் வாசல் வரும். 

D.சுப்ரமணியன் 
மாவட்ட செயலர்   

பி.எஸ்.என்.எல். ‘வை-பை ’சேவை

தஞ்சை பெரியகோவிலில் பி.எஸ்.என்.எல். ‘வை-பைசேவை தொடக்கம் மாதத்திற்கு 3 முறை இலவசமாக பயன்படுத்தலாம்




தஞ்சை பெரியகோவிலில் பி.எஸ்.என்.எல்வை-பைசேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை மாதத்திற்கு 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

வை-பை வசதி

டிஜிட்டல் இந்தியா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக பி.எஸ்.என்.எல். வை-பை வசதியை பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொலி காட்சிமூலம் புதுடெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த வை-பை வசதி தஞ்சை பெரியகோவிலிலும் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த வசதியின் மூலம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருபவர்கள் அதிவேக வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பை பெறலாம். சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் அனைத்து பொதுமக்களும் தங்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போனில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்தலாம்.

தஞ்சை பெரியகோவிலுக்குள் எந்த இடத்தில் இருந்தும் பி.எஸ்.என்.எல். வைபை நெட்வொர்க்கில் இணைய முடியும். உபயோகிப்பாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை தங்கள் மொபைல் போனில் பெற்ற உடனேயே பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்த தொடங்கலாம்.

3
முறை இலவசம்

முதல் 30 நிமிடங்களுக்கான உபயோகம், கட்டணம் எதுவும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த இலவச உபயோகம் ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு மாதத்தில் 3 முறை வழங்கப்படும். 30 நிமிடங்களுக்கு மேல் உபயோகிக்க விரும்புபவர்கள் வை-பை சம்பவ இடத்திற்கு அருகில் கிடைக்கும் ரீசார்ஜ் கூப்பன்களை பயன்படுத்தியோ அல்லது ஆன்லைனில் தங்கள் கிரிடிட் கார்டை பயன்படுத்தியோ தொடர்ந்து வை-பை வசதியை பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 1800-425-5300 அல்லது 04362-272400 அல்லது 276700 என்ற எண்களையோ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ராஜூ தெரிவித்துள்ளார்.