Wednesday 31 December 2014

14th - ALL INDIA BSNL TOURNAMENT MHARASTRA CIRCLE

Sangi - 2014 Gold Medal Overal Taitil "SRTONG MEN OF BSNL 2014"
போட்டியில் வெற்றி பெற்ற தோழர் விமல்ராஜா மன்னை அவர்களுக்கு BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

Tuesday 30 December 2014

2015- புத்தாண்டு வாழ்த்துகள்.


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 



எதிர்வரும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகளையும், மேன்மைகளையும் கொண்டு வரும் ஆண்டாக அமையட்டும்!

விடிந்து விடும் 
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்

வாழ்வோம் 
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்

புதுமை தரும் 
என்ற நம்பிக்கையில் தான்
புத்தாண்டு என்கிறோம்

நல் புதுமைகள் தந்திட
எங்கும் அமைதி தவழ்ந்திட
மேன்மேலும் உலகம் செழித்திட
மானுடம் என்றும் தழைத்திட
பூத்திடுவாய் புத்தாண்டே!!!


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!- சுற்றறிக்கை எண்:14

நமது பிரதான கோரிக்கையான முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் நடைபெற இருந்து மாநில செயலரின் உண்ணா விரத போராடமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. போராட்ட களம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும், பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.<<<Click Here>>>

BSNL பாதுகாப்பு இயக்க புகைப்படங்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் BSNL பாதுகாப்பு இயக்கங்களின் சில புகைப்படங்கள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்: 13

காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காதே!!!!! டிசம்பர் 29 ஆர்ப்பாட்டத்தில் சக்தியாக கலந்துக் கொள்வோம்.<<<Click Here>>>

மத்திய சங்க செய்திகள்

ஒரு சில முக்கிய நிகழ்வுகள் உள்ளடக்கிய மத்திய சங்கத்தின் செய்திகள்<<<Click Here>>>

Saturday 27 December 2014

யூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம்

யூனியன் பேங்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-12-2014 இல் இருந்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது .இது 31-12-2015 வரை அமலில் இருக்கும் MOU படிக்க<<<Click Here>>>

30.12.2014 அன்று தூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்…

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினைக் கைவிட கோரி<<<Click Here>>>

Wednesday 24 December 2014

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

"கிறிஸ்து பிறப்பை  நாம் அனைவரும்  கொண்டாடுவோம்"






தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
தஞ்சைBSNLEU மாவட்ட செயலர்




வேலூர் சிறப்புக் கூட்டம்

வேலூரில் நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டம்<<<Click Here>>>

Thursday 18 December 2014

30.12.2014 தஞ்சையில் மாவட்ட செயற்குழு கூட்டம்

BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் 30.12.2014(செவ்வாய் கிழமை) அன்று பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹால் BSNLEU அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும். அனைத்து கிளைச் செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.

ஆய்படு பொருள்:-

1.மாநில செயற்குழு முடிவுகள்
2.கையெழுத்து இயக்கம்
3.நவம்பர்-27 வேலைநிறுத்தம்
4.இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்



தோழமையுடன்
(தெ.சுப்ரமணியன்)
BSNLEUமாவட்ட செயலர்
தஞ்சை 

சுற்றறிக்கை எண்:10

சென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்<<<Click Here>>>

2015ஆம் ஆண்டுக்கான TH- RH பட்டியல்

2015ஆம் ஆண்டுக்கான TH-RH பட்டியலை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.<<<Click Here>>>

Wednesday 17 December 2014

AIBDPA மாநில மாநாடு

ஓய்வூதியர்களின் நலன் காக்கும் அமைப்பான AIBDPA சங்கத்தின் 3ஆவது தமிழ் மாநில மாநாடு வேலூரில் தோழர் பரமசிவம் நினைவரங்கில் 16.12.2014 முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் பொது அரங்கில் BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு சிறப்புரையாற்றினார். மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பாரத பிரதமருக்கு மனு BSNLஐ பாதுகாப்போம்- இந்திய நாட்டை பாதுகாப்போம்

மாற்றி அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் மாதிரி மனு- இந்த மனுவில் கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து நடத்த அன்புடன் வேண்டுகிறோம்.<<<Click Here>>>

Tuesday 16 December 2014

BSNLEU-பட்டுக்கோட்டை கிளை மாநாடு


13.12.2014  அன்று நடைப்பெற்ற பட்டுக்கோட்டை கிளை மாநாடு,பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் கிளை தலைவர் தோழர் க.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.மாநாட்டில் மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட செயலர் மற்றும் கிளைச் செயலர்களும் சிறப்புரையாற்றினார்கள்

"பட்டுக்கோட்டை கிளை மாநாட்டில் 21-பேர் கலந்துகொண்டது சிறப்பு அம்சமாகும்."

புதிய நிர்வாகிகள் தேர்வு  பட்டியல்:-

தலைவர்:D.அசோகன்.TM-PTK

துணை தலைவர்:M.கலைச்செல்வி.Sr.SS-PTK
துணை தலைவர்:R.சுந்தரராஜன்.TM-PTK


செயலர்:K.பன்னீர்செல்வம்.SS(O)-PTK

துணை செயலர்:A.மருதவாணன்.TM-PTK
துணை செயலர்:K.கரிகாலன்.TTA-PTK

பொருளர்:K.மாலா.Sr.TOA-PTK

துணை பொருளர்:L.ராமச்சந்திரன்.TM-PTK


மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் தஞ்சை மாவட்டBSNLEU-சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.

தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU
மாவட்ட செயலர் தஞ்சை

கையெழுத்து இயக்கத்திற்கான நோட்டீஸ் மாதிரி

பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்திற்கு செல்லும் போது வெளியிடுவதற்கான ஒரு மாதிரி நோட்டீஸ்<<<Click Here>>>

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து

தமிழகத்தில், குறிப்பாக திருச்சி, குடந்தை ஆகிய மாவட்டங்களில் சிம் கார்ட் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என மாவட்ட சங்கங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது மத்திய சங்கம் BSNL இயக்குனருக்கு எழுதிய கடிதத்தின் நகல்<<<Click Here>>>

Sunday 14 December 2014

சுற்றறிக்கை எண்: 9

மத்திய சங்க செய்திகள்<<<Click Here>>>

மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது

BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் நடைபெற உள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.<<<Click Here>>>

Friday 12 December 2014

11.12.2014 ஆர்ப்பாட்டம்

11.12.2014 அன்று தமிழ் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதிலிருந்து சில காட்சிகள்<<<Click Here>>>

ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை

ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை

“தான் பரம தரித்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித நிலையை அறியவோ, உணரவோ முடியாது. ஒருவன் பொருளாதார நலன்களைப் பெற்றாலன்றி அவனுடைய மனித உரிமைகளை மேற்கொண்டு வாழ இயலாது” – டாக்டர் அம்பேத்கர்.இந்திய நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் எண்ணிக்கை 10,42,81,034 ஆகும். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 7,94,697 (2011) இவர்களில் பெரும் பகுதியானவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
பத்து கோடிக்கு மேற்பட்ட இம்மக்கள் குறித்து அரசும், அதிகார வர்க்கமும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் விடு தலை பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும்கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் இம்மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இம்மக்கள் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் இதுகாறும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளே!நிலப்பிரபுக்கள், மேல் சாதிஆதிக்க வெறியர்கள், காண்ட்ராக்டர்களால் இம்மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானாலும், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை யினராலேயே மிக அதிகமான ஒடுக்கு முறைகளுக்கும், கொடுமைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.
உயிர் வாழும் உரிமை மனிதஉரிமைகளில் எல்லாம் முதன்மையான தும் மிகவும் புனிதமானதும் ஆகும். உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம்போல் உயிருடன் இருப்பது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன்மானத்து டன் உயிர் வாழ்வது என்றே பொருள்படும். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் “சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்“ ஆகும். இதை இந்தியஅரசியலமைப்புச் சட்டமும் உறுதிசெய்கிறது. பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர்.
இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை.பின்னர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி துவங்கி 2005 வரை `மக்களிடமிருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக்கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.’பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன.பழங்குடி மக்கள் காட்டை தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாக பயன்படுத்த ஆரம்பித்தது. 1854ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வனக்கொள்கை இதை வெளிப்படுத்தியது. “இந்திய வனச்சட் டம் 1927” மூலம் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது.
இத்தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத் தையும் சீர்குலைத்து சின்னாபின்ன மாக்கிவிட்டது.ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டது; காடுகளிலிருந்து அவர்கள் விரட் டப்பட்டனர். தாங்கள் தெய்வமாக வணங்கி பாதுகாத்த வனம் அழிக்கப்படுவது கண்டு கிளர்ந்தெழுந்த மக்களை ஒடுக்க 1871ல் குற்றப் பழங்குடியினர் சட்டம் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது (Criminal Tribe Act) இச்சட்டத்தின் கீழ் 150 ஆதிவாசி குழுக்க ளைக் குற்றவாளிகளாக்கி பட்டியலிட்டது. சென்னை மாகாண குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911ம் ஆண்டு இயற்றப்பட்டது. 87 இனக் குழுக்களும் 3 கேங்குகளும் இதில் பட்டியலிடப்பட்டன. இனக்குழுக்களைக் குற்றவாளிகளாக்குவது பிரிட்டிஷ் ஆட்சி யில்தான் நடந்தேறியது. பரம்பரையையே குற்றவாளிகளாக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றது.
குறிப்பாக முத்துராமலிங்க தேவர், பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி னர். 1952ம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஆனால், இதற்குப் பதிலாக “வழக்கமாக குற்றத்தை மீறுவோர் தடுப்புச் சட்டம் (Habitual Offenders Restriction Act) என்ற பெயரில் 1959ம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி முன்னாள் குற்றம்பரம்பரையினரைப் பிடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர் கள் என்ற காரணத்தைக் கற்பித்து பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு, குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப் படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது, குடும்பத்துப் பெண்கள் அதிகாரிகளுக்கு இரையாக்கப்படுவது. உயிர் பறி போகும் காவல்நிலைய மரணங்கள் போன்ற கொடூரமான நடவடிக்கையில் காவல்துறையினரும், வனத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை பிடிபட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் காவல்துறையால் அவர் கைது செய்யப்படுவார். மீளவே முடியாது.
இவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா இல் லையா என்பதைவிட இவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பதே குற்றம் சுமத்த வும், கைது செய்யவும் போதுமானதாய் இருக்கிறது. குறிப்பாக குறவர், இருளர், கல் ஒட்டர் போன்ற சமூகத்தினர் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின் றனர். அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாக குற்றவாளிகள் என முத்திரை குத்தி கொல்லவும் முடியும். இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு, பொருளாதார மேம்பாட் டுக்கு எதுவும் செய்யாதவர்கள், குற்றம்சுமத்த மட்டும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். மற்றவர்களை குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தங்க ளைக் குற்றமற்றவர்களாகவும், நீதிமான் களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, ஆதிவாசி மக்கள் பெரும்பகுதியானவர்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்ததாகும். மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறுமாநிலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஆதிவாசிகளுக்கு நிலம் வழங்க வில்லை. மாறாக, நிலம் வெளியேற்றம்தான் நடைபெற்றுள்ளது. நிலவெளியேற்றத்தை மேலும் தீவிரமாகவும், சட்டப்பூர்வ மாகவும் செய்யும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற் றும் மறு குடியமர்த்தல் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு மேலும் பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டுள் ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல், அந்நிய கம்பெனிகளுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப் படுகின்றனர்.
வன உரிமைச் சட்டம் 2006
“பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள் (காடு களின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 “ டிசம்பர் 13, 2006 அன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் அரசிதழில் வெளி யிடப்பட்டு சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல் படுத்தினால் வனநிலங்களில் பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு அந்நிலத்தின் மீது உரிமைகள் வழங்கப் படும். வனத்தில் விளையும் வன சிறு மகசூல் சேகரிப்பது, விற்பது மக்களின் உரிமையாகும்.
வேட்டையாடுவதைத் தவிர பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமே இயற்றப்பட்டாலும், அதைத் தருவதற்கு அதிகாரிகள் மறுக்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டு காலத்தில் சட்டம் எந்த லட்சணத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட விபரங்கள் அம்பலப்படுத்துகிறது.இச்சட்டப்படி 2014 ஏப்ரல் 30வரை உரிமை கோரி வரப் பெற்ற மனுக்கள் 37,61,250 இந்த மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு பட்டா மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டது 14, 35, 113 மட்டுமே. பெரும் பகுதியான மனுக்கள் தகுதியற்றது எனக்கூறி அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப் படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்! ஆம்! சென்னை உயர்நீதி மன்றத் தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி, சட்டம் அமல்படுததப்படாமலேயே உள்ளது.
வழக்கை விரைந்து முடிக்கவும் அரசு தரப்பில் எந்த முயற்சியும் இல்லை.ஆதிவாசி மக்கள் வன சிறு மகசூல் சேகரிப்பதையும், ஆடுகள் மேய்ப் பதையும், வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். ஒப்பந்தக்காரர்களிடம் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு விரோதமாக பழங் குடியினர் அல்லாதார் சேகரித்து விற்பனை செய்கின்றனர். போராட்டங்களின் மூலம் சில மலைகளில் ஆதிவாசி மக்கள்சேகரித்து விற்றாலும் அதற்கு கட்டுப்படி யான விலை கிடைப்பதில்லை. மாநில அரசுகள் வன சிறு மகசூல்களுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதுடன், கொள் முதல் செய்வது, சந்தை உத்தரவாதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டியல்படுத்துதலும்- இனச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளும் :
பழங்குடியினர் பட்டியல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்தப் பிரச்சனைகள் நீடிக்கின்றன. ஒரு மாநிலத்தின் பழங்குடி பட்டியலில் இருப்பவர் வேறொரு மாநிலத்தில் வேறுபட்டியலில் வைக்கப்பட் டுள்ளார். ஒரு மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில் பழங்குடியாக இருப்பவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்றால் ஏற்க மறுக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் நரிக்குறவர், ஈரோடு மாவட்ட மலையாளி குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரி வினர், புலையன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை 1980 முதல் வற்புறுத்தப்பட்டு வருகிறது.
இந்திய பதிவாளர் துறையும், மத்திய அரசும் சிறுசிறு காரணங்களைக் காட்டி, திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதனால், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் பழங்குடியினருக்குரிய உரிமை களையும் சலுகைகளையும் பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். பல தலைமுறைகள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் குறித்த பிரச்சனை யைக் கவனிப்பதற்கென்று தேசிய அள வில் தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.மற்றொன்று, ஏற்கனவே பட்டியலில் உள்ள பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காலங் கடத்துவது, மனுக்களை திருப்பி அனுப்புவது, வருடக்கணக்கில் அலைய விடுவது போன்ற தந்திரங்களைக் கையாளுகின்றனர்.
பழங்குடி சான்றிதழ் கோருபவர்கள் அனைவருமே போலிகள்என்ற முறையில் இந்தப் பிரச்சனைஅணுகப்படுவதே அடிப்படைப்பிரச்சனை. இந்த சோதனைகளையெல் லாம் கடந்து சான்றிதழ் பெற்று அரசுப்பணியில் அமர்ந்துவிட்டால் மெய்த் தன்மைஅறிதல் என்ற பெயரில் வாழ்நாள் முழு வதும் விசாரணையை எதிர்கொள்வதுடன், அவமானத்துக்கும் உள்ளாக நேரிடுகிறது. ‘ஏன் பழங்குடி சமூகத்தில் பிறந்தோம்’என்றே நோகின்றனர்.
எனவே, சான்றிதழ் பெறும் வழி முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். மானிடவியல் பயின்றவர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். 2014 மார்ச் மாதம் வரை சுமார் 2,00,000 சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் குறிப் பிட்ட காலவரையறை தீர்மானித்து சான் றிதழ் வழங்க வேண்டும்.
அரசின் நிதி ஒதுக்கீடுகளும் – திட்டங்களும்
அரசியல் சாசனத்தில் குறிப்பிட் டுள்ளபடி “பழங்குடிகளின் நலுனுக் கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்“ என்ற கடமை யை நிறைவேற்றும் வகையில் 1979ம் ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு 2007ம் ஆண்டு “பழங்குடியினர் துணைத் திட்டம்” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்கள் தொகை சதவீதத்திற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. வலுவான போராட்டங்கள், தொடர் வற்புறுத்தல் களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிதி முழுமையாக செலவழிக்கப்படாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.
திட்டங்களும் அதிகாரிகளின் அக்கறை யின்மை, முறைகேடு, ஊழல் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் மக்களி டையே கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.ஆதிவாசி மக்கள் இன குழுக்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கான பிரச்சனைகள் அதிகம் என்பதை அனைவரும் அறிவர். ஒரு சில முக்கிய பிரச்சனைகள் மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை, உரிமை யற்றவர்கள் ஆகியவற்றின் மொத்த உருவமாகவும், இதில் முதலிடத்திலும் ஆதிவாசிகள் இருந்து வருகின்றனர். எனவே, ஆதிவாசி மக்களை விழிப்படையச் செய் வோம். அவர்களுக்கு `உணர்த்துவதே’ அடிப்படை பணி. அவர்களைக் காணும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாமல் நம்மால் ஆனதைச் செய்வோம்!

Thursday 11 December 2014

Forum ஆர்ப்பாட்டம்

Forum அறைகூவலுக்கிணங்க சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் இன்று (11.12.2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.<<<Click Here>>>

இன்று தஞ்சையில் Forum ஆர்ப்பாட்டம்

Forum அறைகூவலுக்கிணங்க தஞ்சை CTMX அலுவலகத்தின் முன்பு இன்று (11.12.2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து சங்க தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டனர்.





போராடுவோம்!                                                                           வெற்றிபெறுவோம்!


தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

மகாகவியின் பிறந்தநாள்.

மகாகவி பாரதியார் பிறந்தநாள் இன்று 11.012.2014
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழில் இருக்கும் ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை செய்திருக்கும் அற்புதம் இது.
புகைப்படம்: இன்று பாரதியார் பிறந்த நாள் ! 
பாரதியார் பிறந்த நாளை ஒட்டி பாரதியார் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களை வெளியிட வேண்டும்  என்று மதுரை பாரதியார் பேரவை மத்திய அரசிடம் 6  மாதத்திற்கு முன்னால் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு மத்திய அரசு  " பாரதியால் நமது தேசத்தில் எந்தவொரு சிறப்புநிகழ்வோ, திருப்புமுனையோ  ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. . ஆகவே  சிறப்பு நாணயம் வெளியிட அவருக்கு எந்த அருகதையும் இல்லை" என்று பதில்  அளித்திருந்தது. என்ன திமிர் இந்த மத்திய அரசுக்கு ! 

ரவீந்திரநாத் தாகூருக்கு நிகரான கவிஞன் அவன். தாகூருக்கு நாணயம் மட்டும் அல்ல, ரூபாய் நோட்டு, தபால் தலை என்றெல்லாம் வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு. ஆனால் பாரதியாருக்கு ஒன்றும் இல்லை. ஏன் இந்த நிலை. அவன் தமிழில் பாடினான் என்பதற்காகவா.. அன்றைய நாளில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளால் புறம் தள்ளப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்த தமிழை, தோண்டி எடுத்து வெளியில் கொண்டு வந்து போட்டான் என்பதற்காகவா.. பாரதி மேல் நமக்கு பெரிய கருத்து வேறுபாடு இருக்கிறான் , இந்த நாட்டை அவன் தன் பாடல்களில் 'ஆரிய தேசம்'என்று குறிப்பிட்டு இருக்கிறான். தன்னை பார்ப்பனன் என்று நெஞ்சின்  ஒரு ஓரத்தில் கொண்டாடியிருக்கிறான். இருந்தாலும் அவன் ஓரளவில்  பார்ப்பனியத்தை எதிர்த்து இருக்கிறான். தாழ்த்தப்பட்ட   சிறுவர்களுக்கு பூணூல் அணிவித்து மகிழ்ந்து இருக்கிறான். இந்த விஷயத்தில் அவன் தனது பூணூலை அறுத்து எறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் அவன் பார்ப்பனர்களை எதிர்த்து இருக்கிறான். இந்த விஷயங்களால் அவனை பார்ப்பனர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்றும் பார்ப்பனர்கள் தமது பிள்ளைகளுக்கு 'பாரதி' என்ற பெயரை சூட்டுவதிலை . இன்றளவும் அத்தனை வஞ்சம் வைத்து இருக்கிறார்கள் கவி பாரதி மேல் . பாரதி இறந்து அவனது சவஊர்வலம் தெருவில் வந்தபோது தங்கள் வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும்  அடைத்துக்  கொண்டு விட்டார்கள் மயிலாப்பூர் பார்ப்பனர்கள். அந்த மகா கவியின்  இறுதி யாத்திரையில் அவர்கள் கலந்துக் கொள்ளவேயில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் மக்கள் அவனை பின் தொடர்ந்துப் போனார்கள். அவன் முகத்தில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட அங்கே மக்கள் இல்லை. இப்படியாக அவன் கதை முடிந்தது.  நாம் தான் பாரதி என்கிற பெயரை நமது பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் வைத்து அழகு பார்க்கிறோம். அந்த அளவில் பாரதியை நாம் தமிழனாக ஏற்றுக் கொள்வோம். மத்திய அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்போம் !
இந்த வரிகளைப் பாருங்கள் :
வெள்ளை மலர்மிசை வேதக் 
கருப்பொரு ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன் .
 ‘எள்ளத்தனைப் பொழுதும் 
பயனின்றி இராதெந்தன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்….’ 
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம் சக்தி, ஓம்
நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி .
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்!

தோழர் K.G.போஸ் நினைவு நாள்- டிசம்ப்ர் 11

தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி தோழர் K.G.போஸின் நினைவு நாள் டிசம்பர் 11<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:08

தலை நகர் செய்திகள்<<<Click Here>>>

Wednesday 10 December 2014

பிரதமருக்கு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கத்திற்கான மனு.

BSNLஐ பாதுகாக்க பாரதபிரதமருக்கு அனுப்ப உள்ள இந்த படிவத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் பொதுமக்கள் 50 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். இதற்கான துவக்க நிகழ்ச்சி 11.12.2014 அன்று அனைத்து மாவட்டங்களிலும் FORUM சார்பாக நடத்திட வேண்டும்.<<<Click Here>>>

Special CL BSNLEU

GRANT OF SPL-CL FOR BSNLEU TNC CEC MTG 17TH DEC.14<<<Click Here>>>

Monday 8 December 2014

தமிழ் மாநில FORUM கூட்டம்

தமிழ் மாநில Forum கூட்டம் 05.12.2014 அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்...<<<Click Here>>>

Saturday 6 December 2014

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்!

அண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்!
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழு…”
-இந்தியாவின் தன்னிகரற்ற அறிவுச் சுடர், ஏழைப் பங்காளன், தீண்டாமை எனும் கொடுந் தீயிலிருந்து தன் மக்களை ஒரு தாயாய் நின்று காத்த தலைவன் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புகட்டிய உணர்வு இது!
இன்று அண்ணலின் 121-வது பிறந்த நாள்! அவர் வரலாற்றை ஒரு முறை படிப்பவர்கள், சாதிய பேதங்களுக்கப்பால் புதிதாய் பிறந்ததாய் உணர்வார்கள்!
மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் அவர், இளம் வயதில்பட்ட துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், சாதி இந்துக்கள் எனும் பெயரில் அப்படியொரு அடக்குமுறை நிகழ்ந்த காலம் அது.
டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
அந்த நிகழ்வு அவர் மனதில் மிகப் பெரிய வைராக்கியமாக உருவெடுத்தது. தனக்கு மட்டுமல்ல, ஒரு பெரிய கூட்டத்துக்காக தாம் போராட வேண்டிய கடமை இருப்பதாக மனதில் வரித்துக் கொண்டு, தன் சிந்தனை முழுவதையும் அதிலேயே செலுத்தினார் அண்ணல்.
நிகரற்ற கல்வி மேதை
இந்தியாவில் டாக்டர் அம்பேத்கருக்கு நிகரான கல்வியாளர் யாருமில்லை. பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

1917-ல் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் தனது பிஎச்டி படிப்பை மேற்கொண்டார். ஆனால் பரோடா அரசின் உதவித் தொகை நின்றதால், நாடு திரும்ப நேர்ந்தது. ஆனால் அம்பேத்கருக்காக அந்த கல்வி நிறுவனம் ஒரு சிறப்புச் சலுகை தந்தது. அவர் மீண்டும் வந்து ஆய்வைத் தொடங்க அனுமதித்தது.


நாடு திரும்பிய பின் அம்பேத்கர் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார். பரோடா
பரோடா சமஸ்தானத்தில் பாதுகாப்புச் செயலர் பதவியை அவருக்கு அளித்தார்கள். ஆனால் அங்கு நிலவிய தீண்டாமைக் கொடுமை அவரை பணியாற்ற விடவில்லை.

சீக்கிரமே பதவியை உதறினார். தன் அன்றாட வாழ்க்கைக்காக பல வேலைகளைச் செய்தார். டாக்டர் பட்டம், இரு முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு மாபெரும் கல்வியாளர், ஒரு கணக்கெழுத்தராகக் கூட பணியாற்றினார். ஆனால் அப்படியும் கூட அந்த வேலைகள் நிலைக்கவில்லை. இவர் ஒரு ‘மகர்’ என்று தெரிந்த பிறகு அத்தனை வாடிக்கையாளர்களும் ஓடிப் போனார்கள்.
மும்பையின் சைடன்ஹாம் கல்லூரியில் அண்ணலுக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது. மாணவர்களுடன் அவர் ஓரளவுக்கு அனுசரித்துப் போய்விட்டார். ஆனால் சக பேராசிரியர்கள் காட்டிய தீண்டாமை துவேஷத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இத்தனை கஷ்டங்களையும் தாண்டி, அவர் மீண்டும் பிரிட்டன் சென்றார். பசி, பட்டினியைப் பொருட்படுத்தாமல் படித்து லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பிஎச்டி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் வென்றார்.
சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டம் வென்றவர். ஆய்வுகள் மேற்கொண்டு அதிலும் டாக்டர் பட்டம் பெற்றார் அம்பேத்கர்.
1926-ல் ‘பிராமணர்கள் இந்தியாவை எப்படி பாழ்படுத்தினார்கள்’ என்ற ஒரு பிரசுரத்துக்காக பிராமணரல்லாத மூன்று தலைவர்கள் மீது சில பிராமணர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அந்த மூன்று தலைவர்களுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வென்று காட்டியவர் அம்பேத்கர்.

எதையும் எதிர்கொண்ட களப் போராளி

யாருக்கும் அஞ்சாதவராக, தன் கொள்கையில் உறுதி மிக்கவராக வாழ்ந்த தலைவர் அம்பேத்கர். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.
வெறும் உபதேசத்தை நம்புபவரல்ல அவர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணலின் சௌதார் குளப் போராட்டமும் ஆலய நுழைவுப் போராட்டங்களும் அவர் எத்தகைய தீரமான களப் போராளி என்பதற்கு சான்றுகள்.
பசுவின் நெய்யை பயன்படுத்தியதற்காக, ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது, தானும் களத்திலிருந்து அந்தக் கொடுமையை அனுபவித்தவர்.
காந்தியை விமர்சித்த நேர்மையாளர்
காந்தியடிகளை முகத்துக்கு நேரே விமர்சித்த ஒரே தலைவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே.
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். அவரது வாதத்தை ஏற்று ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இன்னொரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இதனை காந்தியடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலித்துகளை தனியாகப் பிரிக்க வேண்டாம் என அவர் எதிர்த்தார்.

கண்ணெதிரில் தம் இன மக்கள் உரிமை பறிக்கப்படுகிறதே என்ற கோபத்தில், “தலித் என்பவனுக்கு நீங்களாக எந்த உரிமையும் தரமாட்டீர்கள். கிடைக்கும் உரிமையையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியாது… அப்படித்தானே,” என்றார் அம்பேத்கர் கோபத்துடன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் போதும் என வலியுறுத்தி காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்போது அம்பேத்கரை பாரதத்தின் புதல்வர் என்றார் காந்தியடிகள். அப்போது அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள்:
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அப்படி ஒன்றில்லை. நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி. யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது. ஆனால் எங்கள் மக்களுக்கு தனி அந்தஸ்து கிடைப்பதை உங்களால் ஏற்க முடியவில்லை. என்றாலும் உண்ணாவிரதமிருந்து நீங்கள் சாவதை விரும்பவில்லை. நான் வருகிறேன்…”
1931-ல் காந்தியடிகளுக்கு இந்த தேசத்திலிருந்த செல்வாக்கைப் புரிந்தவர்கள், மீண்டும் ஒருமுறை மேற்கண்ட வரிகளைப் படித்துப் பாருங்கள்! அம்பேத்கரின் அதிகபட்ச நேர்மைதான், அவரது இந்த விமர்சனத்துக்குக் காரணம்.
காந்தியின் உண்ணாவிரதத்துக்காக மட்டும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளவில்லை அம்பேத்கர். இந்த உண்ணாவிரதத்தால், உயர்சாதிக்காரர்கள் தலித் மக்களை கூண்டோடு படுகொலை செய்யும் அளவுக்கு வன்மத்தோடு வெறியாட்டம் போட ஆரம்பித்திருந்தனர். வேறு வழியின்றி, உரிமையை பகிரங்கமாக விட்டுக் கொடுத்து, அந்த வலியுடன் பொருமிச் சொன்ன வார்த்தைகள் இவை!
பாபா சாகேப் அம்பேத்கரின் Who is the Shudras? (The Untouchables: A Thesis on the Origins of Untouchability) ஒவ்வொரு சூத்திரன் மட்டுமல்ல, உயர்சாதிப் பெருமை பீற்றிக் கொள்பவரும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.

உண்மையான பெண்ணியவாதி

நேரத்தைக் கொல்ல பெண்ணியம் பேசியவர்களுக்கு மத்தியில், பெண்களின் உரிமைகளுக்கான வேலைகளைச் செய்து முடித்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக, சட்டத்தை வகுத்தபோதே பெண்களுக்கு சிறப்பு உரிமைகளைத் தருவதற்கான பிரிவுகளை அவர் ஏற்படுத்திவிட்டார்.
அரசியல், சமூகம், பொருளாதார தளங்களில் பெண்களுக்கு சம உரிமையை அவர் உறுதிப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உருவாக்கி சமூக ஏற்றத்தாழ்வு நீங்க வழி செய்தார். பிற்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீடுகளுக்கும் அவரே காரணமானார்.
பேசாப் பொருளை பேசியவர்
அம்பேத்கரின் துணிச்சல் அன்றைய இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. மதத்தின் பெயரில் நிகழ்த்தப்பட்ட அத்தனை கொடுமைகளையும் சாடியவர் அவர். இந்து மதத்தில் மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கு எதிரான விஷயங்களை அவரைப் போல வேறு யாராவது விமர்சித்திருப்பார்களா தெரியவில்லை!
பாகிஸ்தான் பிரிந்து செல்லட்டும் என்ற கருத்தை தைரியமாக முன்வைத்தவர் அவர் ஒருவர்தான். “எப்போது முஸ்லிம்கள் தனி நாடு விஷயத்தில் இத்தனை தீவிரமாக உள்ளார்களோ… அவர்களுக்கு பாகிஸ்தானை அங்கீகரித்துவிடலாம். நாளை முஸ்லிம் நாடுகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அன்றைக்கு இந்திய ராணுவத்தில் உள்ள முஸ்லிம்கள் உண்மையாகப் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு இந்தியாவும் அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கும். அவர்களை அங்கீகரித்து தனி நாடாக்குங்கள்”, என்று வெளிப்படையாகவே சொன்னவர்.
தூக்கமற்ற உழைப்பு…
ஒரு நாளில் நான்கு மணி நேரங்களைக் கூட தூக்கத்துக்கென்று ஒதுக்காத மனிதர் அவர். எப்போதும் எழுத்து, படிப்பு, தன் இன விடிவுக்கான சிந்தனையிலேயே அவர் காலம் கழிந்தது. இந்த தூக்கமற்ற உழைப்பே அவருக்கு நீரிழிவு நோயை பரிசாக அளித்தது.
அப்படியும் கூட அந்த மனிதர், தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. “என் இறுதிக் காலம் நெருங்குகிறது.. ஆனால் என் மக்களின் துயரங்களுக்கான இறுதிக் காலம் ரொம்ப தூரத்திலிருக்கிறதே… என்னால் எப்படி வேளைக்கு உண்டு, உறங்கி காலம் தள்ள முடியும்?” என்பது தன்னைக் கவனித்த மருத்துவரிடம் அவர் எழுப்பிய கேள்வி!
1954-ல் அவர் கண் பார்வையைப் பறித்தது நீரிழிவு. பார்வை போய்விட்டதெனக் கூறி பரிதாபம் தேடவில்லை அந்த மகாத்மா. இன விடியலுக்கான அரசியல் போரைத் தொடர்ந்தார். தன் மூச்சு நிற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட The Buddha and His Dhamma என்ற புத்தகத்தை எழுதி முடித்திருந்தார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல்வேறு பொருளாதாரத் தடைகளைக் கடந்து வெளிநாட்டில் படித்து, ஒரு மாபெரும் நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியதுடன் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக, விடிவெள்ளியாக இன்றும் திகழ்பவர் அம்பேதகர்.
“பாதாளம் வரை அழுத்த முயன்ற பல்லாயிரம் கரங்களை சுட்டுப்பொசுக்கி சுடர்விட்ட அறிவுச் சூரியன்.. பேரறிஞர்.. சாதியம் ஓய்வதில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு வடிவங்களில் கொடுமையைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கும் என்பதை கணித்து தீர்வெழுதிய மாமேதை” என்ற போற்றுதலுக்குரியவர் அம்பேத்கர்.
குலத்தால் தாழ்ந்தவன் என்ற சொல்லைப் போக்கும் மாமந்திரம் கல்விதான் என்ற பெரும் உண்மையை தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியவர் அம்பேத்கர். ‘கல்வி என்ற ஆயுதத்தை கைக்கொள்… உலகம் உன்னை உயர்த்தித் தொழும்’ என்ற அவர் சித்தாந்தம்தான் ஒரு இனத்தையே படிப்பின்பால் உந்தித் தள்ளியது.

கற்பி – ஒன்று சேர் – கலகம் செய் என்பது அம்பேத்கரின் அடிப்படைத் தத்துவம்.

“வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்,” என்ற மாமேதை, பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தார்.
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை,” என்பதுதான் அண்ணலின் நம்பிக்கை.
தலித், மகர் என்ற வரையறைக்கப்பால், ஒவ்வொரு இளைஞனுக்கும் வழிகாட்டியாகத் திகழ்பவர் ‘பாரத் ரத்னா’ அண்ணல் அம்பேத்கர்!
குறிப்பு 1: அண்ணலின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பு. அம்பேத்கரை அப்படியே பிரதியெடுத்தமாதிரி, வாழ்ந்திருப்பார் மம்முட்டி.
குறிப்பு 2: சென்னையில் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம் ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது.

சுற்றறிக்கை எண்:7

BSNLஐ பாதுகாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைக்காக 19.12.2014 அன்று நடைபெற இருந்து பாராளுமன்றம் நோக்கிய பேரணி பிப்ரவரி 25,2015 எனவும் 03.02.2015 முதல் நடைபெற இருந்த காலைவரையற்ற வேலை நிறுத்தம் 2015, மார்ச் 17 முதல் எனவும் மாற்றப்பட்டுள்ளது.<<<Click Here>>>

Thursday 4 December 2014

IDA Rates from 01-01-2015



All India Consumer Price Index (IW) is based on weighted average of prices of consumer goods & services calculates on average for specified months of September, October & November 2014 issued by the Department of Labour Bureau by taking price changes for each item in the predetermined basket of goods.Now, as per All India Consumer Price Index Numbers for Industrial Workers - CPI(IW) issued by Department of Labour Bureau, CPI has not been increased any point for September & October 2014 months, which is to be taken for January 2015(01-01-2015) Industrial Dearness Allowance (IDA) rates.If there is an increase in AICPI index records for November 2014 for about 1 point, IDA rates will expect for an increase of 1.9% from present Industrial DA (IDA) rates and moves to 100.53, if there is a a drop of 4 points in AICPI will also result an increase of 1% from present rate of 98.1% for BSNL employees from 01.01.2015.
BSNL Expecting Industrial Dearness Allowance Rates from 01.01.2015
The expected increased IDA rates, if any for BSNL PSU employees from January 2015 will be confirmed after getting average price index number of November 2014 on 31-12-14, then after Department of Public Enterprises will issue the orders for increased IDA rates from 01.01.2015,

BSNL Offers "50MB Free 3G Mobile Internet Data" on TOPUP Recharge

BSNL ANNOUNCES 50MB FREE 3G MOBILE INTERNET DATA WITHOUT ANY STV ON RECHARGE WITH VOICE TOPUP, NEVER GIVEN BY ANY                                        

Great news…. how do you feel when anything, you get as a free gift after a general purchase…this is really like icing on the cake…coming to the point when you do TOP-UP/Recharge, you generally get Talktime or Data according to the Top-Up Voucher Value…This is routine.. Beyond routine is, what BSNL is going to provide that is, You are going to get a gift of an additional Free Mobile Internet Data of 50MB with out any STV recharge, to all the BSNL Prepaid Mobile Customers on every TOPUP/Recharge of Rs.100, 200 and above.
BSNL 50MB Free 3G Mobile Internet Data on TOPUP Recharge
Whatever, Wherever and Whenever, you are purchasing it whether it can be a pizza extra cheese is delicious, like wise in general all of us do get Recharge to our Mobile Phones, and at an average most of us do Top-Ups of around minimum Rs.100… So, whenever you do Top Up of Rs.100, 200 and above, you will get a free data gift of 50MB, but this Free Mobile Internet 3G DATA from BSNLto be consumed before 30 days from recharge.
With 50MB of data what you can do…you can daily a text chat on Whatsapp with your closed ones or even you can view your personal mails.. you can check your PNR status Online and even you can do Online Money Transactions, and even you can pay your utility bills Online. You can do a lot of things with 50MB which you get as a free from the most dependable operator BSNL, when you do recharge as Top-Up of denomination of Rs.100, 200 and above.

This newly introduced Free Mobile Data offer will certainly attract BSNL Mobile Users especially those who haven't activated and waiting for data offers in their Mobile. So when you go with a BSNL Top-Up don’t forget to utilize your 50MB Free BSNL Mobile Internet 3G DATA which will be available as a gift for you on every recharge. This newly launched offers will be applicable for all BSNL Prepaid Customers and this Free Mobile Data offer will be available from 6th December 2014. This is really an exciting offer from BSNL for Mobile customers, which never given by any.