BSNL-ல் உழைப்பு சுரண்டலை ஒழிப்போம்-26.02.2014 ஆர்ப்பாட்டம்<<<Click Here>>>
Tuesday 25 February 2014
Friday 21 February 2014
வெண்மணி நினைவாலய திறப்பு விழா
25 ஆயிரம் பேரைத் திரட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு
தஞ்சாவூர்:வெண்மணி நினைவாலயத் திறப்பு விழாவிற்கு, 25 ஆயிரம் பேரைத் திரட்டுவது என விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 16ம் தேதி தஞ்சையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஜி.மணி, எஸ்.திருநாவுக்கரசு, வி.அமிர்தலிங்கம், கே.பக்கிரிசாமி உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
மனிதர்களாக வாழ வேண்டும், உரிமை வேண்டுமென செங்கொடியின் கீழ் அணிதிரண்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது நிலப்பிரபுக்கள் கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். குண்டர்களின் தாக்குதல், பொய்வழக்குகள், சிறை தண்டணையை விவசாயக்கூலிகள் சந்தித்தனர். போராடிய முன்னணித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் போராட்ட அலையை அடக்க முடியாததால், 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கீழ்வெண்மணி கிராமத்தில் ஒரு சிறு குடிசைக்குள் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 44 பேரை தீயிட்டு கொளுத்தினார்கள். ரத்த வெறிபிடித்த நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும்!உரிமைக்காக, செங்கொடியைக் காப்பதற்காகப் போராடி பலியான 44 தோழர்களின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணி கிராமத்தில் சி.ஐ.டி.யு வின் முன் முயற்சியால் எழுப்பப்பட்டுள்ளது. மார்ச் 9ல் வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழா நாகை மாவட்டம் வெண்மணியில் நடைபெறுகின்றது. சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் திறந்து வைக்கிறார். சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ தலைமையேற்கிறார்.25000 விவசாயத் தொழிலாளர்களை திரட்டி கீழ்வேளூரில் இருந்து ஊர்வலமாக கொடிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி திறப்பு விழாவில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வெண்மணியில் உயிரோடு எரிக்கப்பட்ட 44 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் 44 புதிய கிராம கிளை அமைப்புகளை நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது, மாவட்டங்கள்தோறும் விழாவினை விளம்பரப்படுத்துவது, கிராமம் கிராமமாக சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து விவசாயத் தொழிலாளர்களை திரட்டுவது, என மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது. இம்முடிவினை சிறப்போடு நிறைவேற்றிட வேண்டுமென மாவட்டக்குழு இடைக்குழு கிளை நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.
Saturday 15 February 2014
சுற்றறிக்கை எண்:116
தேங்கியுள்ள பிரச்சனைகளுக்காக பொது செயலாளர் நிர்வாகத்துடன் சந்திப்பு.<<<CLICK HERE>>>
Friday 14 February 2014
ஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா
திருவாரூர், பிப். 13 -
பிஎஸ்என்எல்இயு அமைப்புடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களின் அமைப்பு தினம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்றது.சங்கத்தின் கொடியை கே.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்தார்.
பிஎஸ்என்எல்இயு நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.நெப்போலியன் வாழ்த்துரை வழங்கினார். ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள் டி.தாமரைச்செல்வன் மற்றும் எம்.பழனியப்பன், ஆர்.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.பிஎஸ்என்எல் நிர்வாகம் அடிப்படை ஊழியர்களை கடுமையாக வேலைவாங்கிக்கொண்டு குறைந்த ஊதியம் கொடுப்பதை கண்டித்தும் குறைந்தபட்சமாக மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. குருமூர்த்தி நன்றி கூறினார்.
Thursday 13 February 2014
Monday 10 February 2014
வறுமைக்கோடு என்றால்...?
என்.பகத்சிங்
என்.பகத்சிங்
அண்மையில் குஜராத் அரசின் இணையதளத்தில் வறுமைக்கோடு குறித்த செய்திஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நாள்ஒன்றுக்கு ரூ.10.80க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்றும், நகரங்களில் மாத சராசரி வரு மானம் ரூ.501 வரை உள்ளவர்களும் கிராமங்களில் மாத சராசரி வருமானம் ரூ.324 வரைஉள்ளவர்களும் அந்தோதயா யோஜனா திட்டத்தின்கீழ் பயனடைவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு 2012ல் அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கான வரையறை கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.32 சம்பாதிப்பவர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.38 என்றும் வரையறுத்துள்ளது. இரண்டு கணக்கீடுகளுமே பொய்யான அளவீடு என்பதுதான் உண்மையிலும் உண்மை.வறுமை என்றால் வயிற்றுப் பசியைத் தீர்க்க முடியாமல் இருக்கும் நிலை என்று பொதுவாக அறியப்பட்டாலும், ஐ.நா.சபையும், உலக வங்கியும் வறுமைக்கு உலகளாகிய விளக்கங்கள் தருகின்றன. ஒவ்வொரு ஆணுக்கும் தினசரி 2,500 கலோரிகள் சக்தி கொடுக்கும் உணவு அவசியத் தேவை, பெண்களுக்கு 2000 கலோரிகள் தேவை. இந்தளவுக்கு கலோரிகள் கொடுக்கும் உணவு, சுத்தமான தண்ணீர், உடை, உறை விடம், அடிப்படை மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் ஆகியவை இல்லாதவர்கள். வறுமையில் வாடுபவர்கள் என்பது எல்லோரும் ஒப்புக் கொள்ளும் வரையறை.
வறுமைக்கோடு வரையறைகள்
வறுமைக்கோட்டுக்கான அளவீடு முதன் முதலில் 1878ல் தாதாபாய் நவ்ரோஜியால் அறிமுகமானது. “ இந்தியாவில் வறுமையும், பிரிட்டிஷ் ஆட்சியும்“ என்ற தனது அறிக் கையில் வறுமைக்கோடு பற்றி தெளிவாக முன்வைத்துள்ளார். 1876-77ஆம் ஆண்டில் விலைவாசியின் அடிப்படையில் கூலித் தொழிலாளர் பயணம் செய்யும்போதும், ஓய்வில் இருக்கும் போதும் ஒரு நபருக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.16லிருந்து ரூ.35வரை வருமானம் கிடைக்காவிட்டால் அவரை வறியவர் என்று கணக்கிட்டிருந்தார் தாதாபாய்.1939ல் வறுமையை கணக்கிடுவதற்கு காங்கிரஸ் கட்சி நேரு தலைமையில் குழு அமைத்தது. அக்குழுவின் செயலாளர் கே.டி.ஷா அளித்த அறிக்கையில் வறுமைக் கோட்டின் அளவீடாக ஒரு மாதத்திற்கு தனிநபர் வருமானம் ரூ.15லிருந்து 20 வரை மதிப்பிட்டிருந்தார். வயது வந்த தொழிலாளி ஒருவருக்கு 2,400லிருந்து 2,800 கலோரி வரை கிடைத்தால்தான் அவர் வறுமையிலிருந்து தப்பித்தவர் என கருத வேண்டுமென அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சுதந்திர இந்தியாவில்
1960-61ல் பிதம்பர்பந்த் தலைமையிலான திட்டக்கமிஷன் வறுமைக்கோட்டை தனிநபர் வருமானம் கிராமப்புறங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.20 என்றும் நகர்ப்புறங்களில் ரூ.25 என்றும் நிர்ணயம் செய்தது. அதாவது இரண்டாம் உலகப்போரின் போதும் அதனை தொடர்ந்து வந்த பணவீக்கங்களுக்கு பிறகும் வறுமைக்கோட்டை அதே அளவில் (22 ஆண்டுகளுக்கு பிறகும்) முடிவு செய்திருந்தார்கள். இந்த கணக்கீட்டிலிருந்தே காங்கிரஸ் அரசின் வறுமைக்கோடு ஏமாற்று அளவீடுகளை நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
ஏமாற்று வேலை
1979ல் வறுமையை கணக்கிட திட்டக்கமிஷன் நியமித்த பணிக்குழு, தேசிய மாதிரிகணக்கீட்டுத்துறையின் புள்ளிவிவர அடிப் படையில், நாளொன்றுக்கு ஒரு தனிநபருக்கு கிராமப்புறங்களில் 2,400 கலோரிகளும், நகர்ப்புறங்களில் 2,100 கலோரிகளும் தேவைப்படுவ தாக குறிப்பிட்டது. அத்துடன் 1973 - 74 விலைவாசியின் அடிப்படையில் ஒரு நாளைக்கு கிராமப்புறங்களில் நபர் ஒருவருக்கு ரூ.49 நகர்ப்புறங்களில் ரூ.56 தேவை என்று முடிவுசெய்தது. அதாவது 1979ஆம் ஆண்டு வறு மையை கணக்கிட 1973-74 ஆம் ஆண்டு விலைவாசியை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இன்னொரு ஏமாற்று வேலையாகும். இதிலிருந்து 1973-74ஆம் ஆண்டின் விலைவாசிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் விலை வாசி குறியீட்டு எண், பணவீக்கத்தின் அளவுபோன்ற அடிப்படையில் வறுமையின் அள வீடு நிர்ணயிக்கப்படுகிறது.அதுபோல 1973-1993 வரை தேசியமாதிரி கணக்கீட்டின் ஆய்வு முடிவுகளுக்கும், தேசிய கணக்கியல் புள்ளி விபரங்களின் (NAS) முடிவுகளுக்கும், இடையிலான வேறுபாட்டை கொண்டு திட்டக்கமிஷன் வறுமை யில் உள்ளவர்களின் எண்ணிக்கையை சமன்படுத்தி (Adjust)வந்தது. அதாவது தேசிய மாதிரி ஆய்வில் மக்கள் பொருட்களை நுகரும் அளவு மதிப்பிடப்படும். அதேபோல தேசிய கணக்கியல் துறை நாட்டின் மொத்தநுகர்வை கணக்கிடுகிறது. இந்த இரு துறை களின் கணக்கீடு முறைகளில் எதில் நுகரும் அளவு குறைவாக உள்ளதோ, அந்தளவுக்கு மற்றொரு துறையின் அளவையும் வெட்டி சுருக்கி, இரண்டு துறை புள்ளிவிபரங்களையும் ஒரே அளவினதாகவே பார்த்துக் கொள்கிறது மைய அரசு. இத்தகைய பொய்யான, பூடக புள்ளிவிபரம் கொண்டே வறுமைக்கோடு தீர்மானிக்கப்படுகிறது.
வறுமையின் அளவீடு குறைப்பு
1993 - 94ல் தேசிய மாதிரி ஆய்வைவிட கணக்கியல் துறையின் மதிப்பீடுகள் குறைவாக இருந்ததால் நாட்டின் வறுமை சத வீதம் கணிசமாக குறைந்துவிட்டதாக கணக் கிட்டது. அதாவது 1987-88ம் ஆண்டு 25சதவீதமாக இருந்த வறுமை 1993-94ல் 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் புதிய தாராளமய கொள் கைகள் தீவிரமாக அமலான காலமாகும். 1994ல் திட்டக்குழு தலைவராக இருந்த திருமது தண்டவதே இந்த மோசடி கணக் கீடுகளை அம்பலப்படுத்தி இந்த போலியான மோசடி வழிமுறையை தூக்கி எறிந்தார்.
கமிட்டிகளின் அறிக்கைகள்
2001-02ல் அர்ஜூன் சென்குப்தா தலை மையிலான மரபுசாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக வருமானம் ஈட்டி வறுமையில் உழல்வதாக தெரிவித்தது. என்.சி.சக்சேனா தலைமையிலான குழுவோ இந்தியாவில் 60சதவீதம் மக்கள் வறுமையில் இருப்பதாக தெரிவிக்கிறது. 2004-2005ல் சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டிவறுமைக்கோட்டின் அளவை தனிநபர் வருமானம் மாதம் ஒன்றுக்கு கிராமப்புறங் களில் ரூ.356.30, நகர்ப்புறங்களில் 538.60 என நிர்ணயித்தது. இது 1878ல் தாதாபாய் நவ் ரோஜியின் மதிப்பீட்டிலிருந்து 188 மடங்காகும்.
இடைப்பட்ட 127 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் ஆண்டுக்கு 5சதவீதத்திற்கும் மேல்இருக்கும், விலைவாசியும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதன்படி கணக்கிட்டால் 2004-05ல் டெண்டுல்கர் கமிட்டியின் அள வீடு பெரும் மோசடியாகும். தாதாபாய் வார்த்தை களில் சொல்வதானால் இந்த வருமானத்தைக் கொண்டு ஒருவர் உயிர்வாழவே முடியாது. இந்தக் கமிட்டி இன்னொரு மோசடியையும் செய்துள்ளது. அதாவது இந்தியாவின் பெரும்பாலான மக்கள் 1700 கலோரிக்கும் குறைவாகத்தான் உணவு உட்கொள்கிறார்கள். அதனால் முந்தைய கணக்கீடான 2100-2400 கலோரிகள் மிக அதிகம் என்று வறுமையின் அளவை கிராமப்புறங்களுக்கு 1999கலோரி என்றும் நகர்புறங்களுக்கு 1770 கலோரி என்றும் குறைத்து வரையறை செய்தது. இதனால் 2004-05ல் 37.2 சதவீதமாக இருந்த நாட்டின் வறுமை 2009-10ல் 29.8 சதவீதமாக குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2011-12ல் மேலும் குறைந்தது 27.88 சதமாக உள்ளதாக மைய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தாராளமயத்தின் விளைவுகள்
உலகமயமாக்கலுக்குப்பிறகுதான் இந்த வறுமைக்கோடு குறித்த கணக்கு அதிகளவு முக்கியத்துவம் பெறுகிறது காரணம் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியின் அளவை இத்தகைய கணக்கெடுப்புகள் தீர்மானிக்கின்றன. தாராளமய கொள்கைகளில் வறுமை ஒழிப்பு திட்டங் களுக்கு நிதி ஒதுக்கிய விபரங்கள் தெரிவிக்கப் பட்டால்தான். உலகநிதி மூலதனம் அந்நிய முதலீடுகளை இங்கு அனுமதிக்கும் என்றஏற்பாடுகள் புதிய தாராளமயக் கொள்கை களில் இருப்பதால்தான், இந்த பொய்யான, பூடக புள்ளிவிபரங்களை வைத்து குஜராத் அரசும், மைய அரசும் வறுமைக்கோட்டை அளவீடு செய்கின்றன. உண்மையில் வறுமை குறித்த அக்கறை இவர்களுக்கு இல்லை. அந்நிய முதலீடுகள் இங்கே நுழைந்தால் ஏற்படும் பாதிப்புகள் தனிக்கதை.
மருத்துவ அறிவியலின்படி
ஓய்வில் இருக்கும் ஒருவருக்கு உட லின் வளர்சிதை மாற்றத்திற்கே 1,220 கலோரிதேவைப்படுகிறது. 10 வயது முதல் 17வயதுள்ள சிறார்களுக்கு சராசரியாக 2,450கலோரியும், 10வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு 1,360 கலோரியும், கருத்தரிக்கும் பெண்களுக்கு சராசரியைவிட 350 கலோரிகள் அதிகமாகவும், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு சராசரியை விட 600 கலோரிகள் அதிகமாகவும் தேவைப்படும். மருத்துவ அறிவியலின்படி உண்மை இவ்வாறிருக்க வறுமைக்கோடு பற்றி காங்கிரசும், பாஜகவும் உண்மைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவது, உலக கார்ப்பரேட்களையும் நிதிமூலதனத்தையும், உலக வங்கியையும் திருப்திபடுத்தலாம். ஆனால் இந்தியாவின் ஏழை, எளிய மக்களை திருப்திபடுத்தாது. மட்டுமல்லாமல் ஏகடியம் செய்வதாகவும் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான பதிலை இந்திய மக்கள் நிச்சயம் இவர்களுக்கு வழங்குவார்கள்.
Sunday 9 February 2014
Saturday 8 February 2014
தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் ரத்த தானம்
புதுச்சேரி,பிப்.7-
புதுச்சேரியில் பிஎஸ் என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 15வது ஆண்டு அமைப்பு தினத்தை முன் னிட்டு அரசு பொதுமருத்து வமனையில் ரத்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற் றது.
இந்நிகழ்ச்சிக்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.முருகையன் ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிஐடியு பிரதேச செயலாளர் வே.கு.நிலவழ கன் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் மாவட்ட உதவித் தலைவர் என்.கொளஞ்சியப் பன், மாவட்டச் செயலா ளர் எ.சுப்பரமணியன், தொலைத் தொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் சி. குமார்,தமிழ் மாநில அமைப்புச் செயலர் எஸ். உஷா,மாவட்டச் செயலா ளர் பி.மகாலிங்கம் உள்ளிட் டோர் வாழ்த்திப்பேசினர்.
முன்னதாகபிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்துபிஎஸ் என்எல் ஊழியர்கள், ஒப் பந்த ஊழியர்கள் ஊர்வல மாகச் சென்று ரத்தத்தை தானமாக வழங்கினர்.
Thursday 6 February 2014
பிப். 12,13ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பர்
சென்னை, பிப்.5-
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வலியுறுத்தி பிப் 12, 13ம் தேதி களில் நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள்.சென்னையில் புதனன்று (பிப்.5) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறியதாவது:
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வலியுறுத்தி பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் ஊழியர்களும் ஈடுபட உள்ளனர்.50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். பென்ஷன் உள்ளிட்ட அனைத்து நிதி பயன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தவேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஏ.ஜி. அலுவலகம், வருமானவரி, தபால் துறையில் உள்ள அனைத்து சங்கங்கள், சாஸ்திரி பவன் மற்றும் ராஜாஜி பவன் ஊழியர்கள் என அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாகவே மத்திய அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வேலைநிறுத்த போராட்டம் இம்மாதம் நடத்தப்படுகிறது. மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பாபா அணுமின் நிலையம், தூத்துக்குடி கனநீர் ஆலை, சிர்கோனியம், கல்பாக்கம் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து அணுசக்தி துறை பணியாளர்களும் பங்கேற்பார்கள்.
மத்திய அரசு பணியாளர்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தபால்துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சம்மேளனத் தலைவர் ஜே.ராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன தமிழ்நாடு மாநில செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஜெயசந்திரன், ராஜாஜி பவன் ஊழியர் சங்கசெயலாளர் பாலசுந்தரம், சாஸ்திரி பவன் ஊழியர் சங்க செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மதவெறி, ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக திருச்சி, கரூரில் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, பிப். 5 -
மக்கள் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுன்னிறுத்தும் கொள்கை களை விளக்கியும், பாஜக-வின் மதவெறி, காங்கிரஸின் ஊழல்முறைகேடுகளைக் கண்டித் தும் நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.அதனொரு பகுதியாக திருச்சியில் தென்னூர் அரசு மருத்துவமனை, சீனிவாச நகர், உய்யக்கொண்டான் திருமலை ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தென்னூர் பிரச்சார இயக்கத்திற்கு பகுதிச் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ‘பெல்’ சிஐடியு சங்கபொதுச்செயலாளர் ஆரோக் கியசாமி உரையாற்றினார். அரசு மருத்துவமனை அருகில்மாவட்டக்குழு உறுப்பினர் அன்வர் உசேன் சிறப்புரையாற்றினார். சீனிவாச நகர் பகுதியில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல இணைச்செயலாளர் ராஜமகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
இன்சூரன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜோன்ஸ், பன்னீர்செல்வம், பழனி, போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி சண்முகம், கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர்கள் தனலட்சுமி, எம்.எஸ்.கே.சக்தி, கிளைச்செயலாளர் அறிவுக்கரசி, வடிவேல், இருதயராஜ், ஆறுமுகம், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் :
கரூர் பேருந்து நிலையம், தாந்தோணிமலை, ராய னூர், லைட் ஹவுஸ் கார்னர்ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.வேலுசாமி, எஸ்.பி.ஜீவானந்தம், வி.சரவணன், ஆ.முருகேசன், எம்.தண்டபாணி மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் ஹோசிமின், முருகன், கணேஷ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.
Subscribe to:
Posts (Atom)