Monday 15 January 2018

சோப்பு, டவல் - ரொக்கம் -சம்பளத்துடன் பட்டுவாடா

சோப்பு, டவல், டம்ளர்,பேணா, டைரி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களுக்கு பதில், "ரொக்கமாக" நம் முயற்சியால், ஆண்டிற்கு ரூ. 500  வழங்கப்பட்டு வந்தது. பல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், கால மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநில கவுன்சிலில் கோரிக்கை வைத்திருந்தோம். 

நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, 2017 ஆகஸ்டில் அதற்கான உத்தரவு வெளியாகியது. Group C & D இரு பிரிவிற்கும், ஒரே மாதிரி ரூ.750.00 வழங்க கோரிய நமது கோரிக்கையும் அதில் ஏற்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த மாத சம்பளத்துடன், ரூ. 750.00 வழங்கப்படும்

Wednesday 10 January 2018

நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


வருந்துகிறோம்!

தோழர். மனோஜ்  
ஒப்பந்தத் தொழிலாளி, கன்னியாகுமரி  

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL இணைப்பகத்தில் கேபிள் ஜாயிண்டராக கடந்த 23 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் வராத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு விட்டதாக செய்தி அறிகிறோம்.

மறைந்த தோழர் மனோஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு 

நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday 1 January 2018

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம்


தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும், 27.12.2017 மாலை முதல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம்முன்பும் காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தின. 28.12.2017 அன்று மாநில தலைமை பொதுமேலாளர் அழைத்து மாநில நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை கூறி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு இடையே நமது மாநில சங்கங்கள் சென்னையில் உள்ள Dy.CLC(C) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அப்போது அவரும் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் TNTCWU மாநில சங்கத்திடம் கலந்தாலோசித்து BSNLEU வின் மாநில செயலகம் கூடி இந்த போராட்டத்தை தற்போது விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2018க்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில் 02.01.2018 முதல் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகள் சென்னை தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை பொது மேலாளரை சந்தித்து இந்த முடிவுகளை தெரிவித்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது தல மட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.