சிறப்பு மிகு பட்டுக்கோட்டை மாவட்ட மாநாடு
அன்பாந்த தோழர்களே,
நமது BSNL ஊழியர் சங்கம் 7-வது மாவட்ட மாநாடு 2014 ஜுலை-26
பட்டுக்கோட்டை இராமச்சந்திரா திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.அந்த
மாநாட்டினை மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் தலைமையேற்று நடத்தினார்.
அன்று நிகழ்ச்சியில்தேசியக்கொடியை மாவட்ட பொருளர் தோழர்.S.N.செல்வராஜ் ஏற்றிவைக்க.மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா BSNLEU அவர்கள்
நமது சங்கக்கொடியினை அதிர்வேட்டுக்கள் முழங்க பலத்தகோஷ்ங்களுக்கிடையே
ஏற்றிவைத்தனர்.கிளைச் செயலர் தோழர் D.அசோகன்
அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் கிளை பொருளாளர் தோழியர் M.கலைச்செல்வி அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாநில உதவிச் செயலர்தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் BSNLEUஅவர்கள் மாநாட்டை முறையாக துவக்கிவைத்து
சிறப்புறையில் நமது சங்கத்தின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.அதற்க்கு பின்னர்
பேசிய மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா BSNLEU
அவர்கள் நமது BSNL வளர்ச்சியை பற்றியும், நாம் செய்த சாதனைகள் பற்றியும்,நிர்வாகத்திற்க்கு பல கோரிக்கைகளை முன் வைத்ததையும்,ஒப்பந்ததொழிலாளர்கள் பிரச்சனைகளையும் விளக்கிபேசினார்.பின்னர்
தோழர்.R.புண்ணியமூர்த்தி,தலைவர்,தஞ்சைகோட்டம்,காப்பீட்டு ஊழியர்சங்கம்,
தோழர்.P.பக்கிரிசாமி(AIBDPA)தலைவர்,
தோழர்.T.பன்னீர்செல்வம்,மாவட்டச்செயலர்(NFTEBSNL),
தோழர்.N.வீரபாண்டியன்,மாநிலச்செயலர்,AIBSNLEA,
தோழர்.K.பழனியப்பன்,மாவட்டச் செயலர்,SNEA(I), திரு.S.விஜயகுமார்,DGM(CFA)தஞ்சை. திருமதி.S.சந்திரகுமாரி,DGM(CM) தஞ்சை. திரு.M.மாரியப்பன்,DGM(Fin)தஞ்சை.
தோழர்.N..ஜெயராமன்,SDE(DSA-OSS)3G CO-ORD தஞ்சை.
தோழர்S.C.ராஜேஸ்வரன்,மாவட்டச் செயலர், SNATTA தஞ்சை.
ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி விளக்கி பேசினார்கள்.
தோழர்.P.பக்கிரிசாமி(AIBDPA)தலைவர்,
தோழர்.T.பன்னீர்செல்வம்,மாவட்டச்செயலர்(NFTEBSNL),
தோழர்.N.வீரபாண்டியன்,மாநிலச்செயலர்,AIBSNLEA,
தோழர்.K.பழனியப்பன்,மாவட்டச் செயலர்,SNEA(I), திரு.S.விஜயகுமார்,DGM(CFA)தஞ்சை. திருமதி.S.சந்திரகுமாரி,DGM(CM) தஞ்சை. திரு.M.மாரியப்பன்,DGM(Fin)தஞ்சை.
தோழர்.N..ஜெயராமன்,SDE(DSA-OSS)3G CO-ORD தஞ்சை.
தோழர்S.C.ராஜேஸ்வரன்,மாவட்டச் செயலர், SNATTA தஞ்சை.
ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி விளக்கி பேசினார்கள்.
தீர்மானங்களை மாநாட்டில்
நிறைவேற்றிய பின்னர்,நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட தலைவராக தோழர் A.இருதயராஜ், மாவட்ட செயலாளராக தோழர் D.சுப்ரமணியன்,மாவட்ட பொருளாளராக தோழர் R.ரமணன் ஆகியோரை
உள்ளடக்கிய நிர்வாகிகள் ஏகமனதாகதேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் பணி ஒய்வு
பாராட்டு விழா மாவட்ட பொருளாளர் தோழர்.S.N.செல்வராஜ் BSNLEU அவர்களுக்கும்,மாவட்ட
உதவி தலைவர் BSNLEUதோழர் M.பழனியப்பன் அவர்களுக்கும்பணி
ஒய்வு பாராட்டு விழா நம் மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா BSNLEU அவர்கள் வாழ்த்தி பொன்னாடை போற்றி கவுரவைத்தார்கள்.
இந்த மாநாட்டை கிளை தலைவர் K.பன்னீர்செல்வம், வரவேற்புக்குழு,அவர்கள் நன்றியுரை
கூறி நிறைவு செய்தார்.
இந்த சிறப்பு மிகு மாநாட்டில் நிரந்தர ஊழியர்கள்,ஒப்பந்த தொழிலாளர்கள்,என
150க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.மிக அற்புதமான மாவட்டச் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கிளைச் சங்கத்தையும்
தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டியது. புதிய மாவட்ட நிர்வாகிகள் நமது
சங்கத்தை மென்மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல தமிழ் மாநிலச் சங்கம் தனது
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
வாழ்த்துகளுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்.....
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்.....
No comments:
Post a Comment