Tuesday, 28 January 2014

சுற்றறிக்கை எண்:110

 மாநில செயலக முடிவுகள்<<<Click Here>>>

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல்

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது •
 மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை. • தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24 • 
மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை. • 
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு:பிப்ரவரி28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.

Saturday, 25 January 2014

இனிய குடியரசு தினவிழா வாழ்த்துக்கள்

 அனைவருக்கும் இனிய 65-வதுகுடியரசு தினவிழா வாழ்த்துக்கள்

சுற்றறிக்கை எண்:109

சுற்றறிக்கை எண்:109 செய்திகள் <<<Click Here>>>

MTNL, BSNL likely to offer free roaming plans from Jan 26

 MTNL and BSNL are likely to launch new roaming plans from January 26 that will offer their subscribers free calls, sources said      State-owned telecom firms  and  are likely to launch new  plans from January 26 that will offer their subscribers free calls, sources said."MTNL has plans to make roaming free for its customers on its network in Delhi and Mumbai without any additional charge," said an official source.He added, however, that BSNL will also have a roaming plan for free calls, but its customers may have to shell out Re 1 a day to avail of the facility.
 
  The schemes are likely to be in place from January 26.
 
          Several private telecom operators already offer plans under which, for a monthly or daily fee starting Rs 5, people get all incoming calls without roaming charges.MTNL has operations in Delhi and Mumbai only, while BSNL has operations across country except in these two circle.MTNL's Mumbai customer will not have to pay any extra charge when they travel to Delhi, and same scheme will apply for its Delhi customers.Further details of PSUs plans could not be ascertained. Source said that Telecom Minister Kapil Sibal is likely to announce this scheme within couple of days.  "Minister (Sibal) had asked the PSUs in November to come up with free roaming scheme. Though MTNL made it free, BSNL will levy charge so that it can bear cost. Customers availing scheme will enjoy local tariff wherever they travel," the source said.As per latest the data released by telecom regulator Trai, 9.78 crore  subscribers while MTNL has 35.75 lakh customers on its network.
             <நன்றி :-BUSINESS STANDARD>
ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம்


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, அடுத்த மாதம் 10ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்க என்எல்சி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. நெய்வேலியில் தொமுச தலைவர் திருமாவளவன் தலைமையில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொமுச, ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், தொவிமு, யுடியுசி தொழிற்சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து இதுவரை 11 சுற்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் இதுவரை அமல்படுத்த வில்லை.இது தொடர்பாக மீண்டும் வரும் பிப்ரவரி 11ம் தேதி சமரச அதிகாரி முன்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில், 10ம் தேதியே வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அளிப்பது, ஒட்டு மொத்த தொழிலாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இந்த முறை பணி நிரந்தரத்தில் எவ்வித சமரசமும் இல்லாமல் எங்களது போராட்டம் தொடரும், அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து தொழிற்சங்கங்களும் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Thursday, 23 January 2014

Reserve bank announcement


ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும்; ஏப்ரல் 1ந் தேதிக்கு பிறகு வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்
புதுடெல்லி,கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.ஆண்டு எண் கடந்த 2005–ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால், 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.ரிசர்வ் வங்கி அறிவிப்பு இந்நிலையில், புழக்கத்தில் உள்ள, ஆண்டு எண் அச்சிடப்படாத அனைத்து வகை ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதன்படி, 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூ.500, ரூ.1,000 உள்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும், வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு வாபஸ் பெறப்படுகின்றன.
Use Standard Mobile Phones: சிறுவன் கையில் இருந்த 700 ரூபாய் செல்போன் வெடித்தது; கேம் விளையாடியபோது விபரிதம்
இந்தூர்,: மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டடம் பாக்லி கிராமத்தை சேர்ந்த சிறுவன் அர்யான் சிவாடே. அவன் தனது தந்தையின் செல்போனில் கேம் விளையாடியுள்ளான். அப்போது செல்போனில் சார்ஜ் ஏறியுள்ளது. இருந்தாலும் சிறுவன் கேம் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக போன் வெடித்துவிட்டது. இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான். அவனது முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.அவனது கையை மருத்துவர்கள் பாதுகாத்துவிட்டனர். சிறுவனில் ஆள்காட்டி விரல் துண்டிக்கப்படாலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாங்கள் எங்களால் முடிந்த வரை அவரது விரலை துண்டிக்காமல் இருக்க முயற்சி செய்வோம். ஆனால் தேவைபட்டால் அதனை நாங்கள் செய்யவேண்டியதிருக்கும் என்று மருத்துவர் அஷிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவனது தந்தை பேசுகையில் மகேஷ் சந்திரா சிவாடே தனக்கு எந்த நிறுவனம் இதனை தயாரித்தது என்று தெரியாது என்று கூறியுள்ளார்.  நான் இந்த போனை லோக்கல் மார்க்கெட்டில் ரூ. 700க்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் அர்யானுக்கு ரூ. 50 ஆயிரம் வரையில் மருத்துவ செலவு ஆகியுள்ளது. ஒரு ஐபோன் வாங்கும் பணம் அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.  சார்ஜ் ஏறிகொண்டிருந்த போது கேம் விளையாடியதால் பேட்ரி கோளாறு காரணமாக வெடித்துள்ளது என்று தொழிற்நுட்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 17 January 2014

27.01.2014 TTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்

 27.01.2014 TTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்<<<Click Here>>>

பரிவு அடிப்படையில் பணி நியமனம்

பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது.இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது 
i )உடல் ஊனமுற்ற மகன் / மகள். 
(ii) பெற்றோர் இருவரையும் இழந்த மகன் / மகள். 
(iii)
வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர். 
(iv)
அரசாங்க ஓய்வூதியம் வராத இறந்தவரின் வாரிசு
  பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நமது BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் .

BSNLஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மத்தியச் செயற்குழு கூட்டம்

BSNLஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மத்தியச் செயற்குழு கூட்டம்


தேதி:18.01.2014 முதல் 19.01.2014 வரை
இடம்:ஒடிஷா (மண்டலம் தொலைபேசி பயிற்ச்சி அறை புவனேஷ்வர்)

பார்க்க படிக்க<<<Click Here>>>

5% IDA increased w.e.f. 01.01.2014

IDA 5% உயர்வு 01.01.2014 முதல் <<<Click Here>>>

Thursday, 16 January 2014

சுற்றறிக்கை எண்:108

 BSNL-ன் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களும்....<<<Click Here>>>

Wednesday, 15 January 2014

சுற்றறிக்கை எண்:107

 கேடர் பெயர் மாற்றம் மற்றும் NEPP பதவி உயர்வுகளில் மாற்றம்.                       <<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:106

BSNL நிறுவனத்திற்கு 6724 கோடி ரூபாய்<<<Click Here>>>

Monday, 13 January 2014

இஸ்லாமிய தோழர்கள்,தோழியர்கள் அனைவருக்கும் நம் இனிய மிலாது அன் நபி வாழ்த்துக்கள்...

இனிய "மிலாது அன் நபி பெருநாள்" வாழ்த்துக்கள்

"நபி பிறந்த நாளை"இஸ்லாமியர்கள் மற்றும் அனைவரும் கொண்டாடுவோம்

Saturday, 11 January 2014

அனைவருக்கும் இனிய தமிழ் தை புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

மார்கழி தை இனைக்கும் இன்நாள்
                  நல் உறவுகளை ஒன்றினைக்கும்
                                நன் நாளாக கொண்டாட
                                          இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.......

வான் பொழிந்து சூரியஒளி அளித்து
              மண்சுமக்க கரும்பு இனிக்க  இயற்கை தந்த பரிசு
                                       புன்னகை மட்டுமே பெரிசு
                                                 இல்லம் தோரும் பொங்கட்டும் பொங்கலில் இருந்து
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.......

உழவரின் உன்னத திருநாள்
                       மடியை கசக்கினாலும் உதிரத்தை உணவாக்கும் 
                                           பசுவுக்கு பரிவுடன் உழவர் தின நல் வாழ்த்துக்கள்......


தமிழினம் ஒன்றுபட பொங்குக பொங்கல்


                                             வாழ்த்துக்களுடன்.....
                        தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்


Friday, 10 January 2014

ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைத் திருப்பித் தர அமைச்சரவைக்குழுக் கூட்டம் முடிவு

MTNL for 4G SPECTRUM SURRENDER
ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைத் திருப்பித் தர
அமைச்சரவைக்குழுக் கூட்டம் முடிவு
9.1.2014 அன்று நிதிஅமைச்சர் திரு. ப. சிதமபரம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில், BSNL மற்றும் MTSNL நிறுவனங்களின் புத்தாக்கத்திற்குப் பயன்படும் என்பதால், BSNLக்கு ரூ.6724.51 கோடியும் MTNLக்கு ரூ. 4533.97 கோடியும் திருப்பித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.


பார்க்க படிக்க<<<Click Here>>>

1961 - கோவா விடுதலையான நாள்

டிசம்பர் 19, 1961 - கோவா விடுதலையான நாள்

இன்றைய கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் சுமார் 450 ஆண்டுகளாக இருந்தது. இடையில் 1812-1815 காலகட்டத்தில் பிரிட்டிஸாரால் கைப்பற்றப்பட்டது. 1961-ல் இதே நாளில்தான் இந்தியாவோடு இணைந்தது.

1947-ல்இந்தியா பிரிட்டிஸாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்குப் பிறகும் போர்ச்சு கல் நாடு இந்தியாவில், தான் பிடித்து வைத்திருந்த பகுதிகளிலிருந்து வெளி யேற மறுத்தது.

அதனால், இந்தியா 1961 டிசம்பர் 12-ல் ஆபரேஷன் விஜய்எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. கோவா,டாமன் மற்றும் டையூவை போர்ச்சு கீசியர்களின் பிடியில் இருந்து மீட்டது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. டாமன் மற்றும் டையூ இரண்டும் யூனியன் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.
360 கோடி ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த கடினப் பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6 சதவீதப் பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது

சுற்றுலாதான் கோவாவின் முக்கியமான தொழில். இந்தி யாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 12 சதவீதம் பேர் விரும்பி கோவாவுக்குச் செல்கின்றனர். 2004-ல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனராம். இவர்களில் 4லட்சம் பேர் வெளிநாட்டினர்.


Thursday, 9 January 2014

20.01.2014 அன்று போன் மெக்கானிக் பயிற்ச்சி வகுப்புகள் RGMTTC சென்னையில் நடைபெறுகிறது


போன் மெக்கானிக் பயிற்ச்சி வகுப்புகள்  20.01.2014

பயிற்ச்சி வகுப்புகள் துவக்கம் 


     தேதி :    20.01.2014 (திங்கள் முதல்)
     காலம்: 4-வாரங்கள்
     இடம்:    மீனம்பாக்கம்(RGMTTC)சென்னை-16

போன் மெக்கானிக் பயிற்ச்சி பெறும் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்  மனமார்ந்த வாழ்த்துக்களை தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

Wednesday, 8 January 2014

தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்

 உழைக்கும் போராளிக்கு உன்மையாக உழைக்கும் எழுச்சியுள்ள எங்கள் அன்பு தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்

நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ப.அபிமன்யு அவர்களின் பணிநிறைவுப் பாராட்டுவிழா புகைப்படம்-1  பார்க்க:<<<Click Here>>>, புகைப்படம்-2<<<Click Here>>>
07-01-2014 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் பொதுச் செயலர் பாசமிகு அன்புதோழர் ,ப.அபிமன்யு அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவும் மிக சிறப்பாக நடைப் பெற்றது நமது தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட  அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
கருத்தரங்கத்தின் பேசிய திரு.A.N.ராய் இயக்குனர்(மனிதவளம்) அவர்கள் ஆங்கிலத்தில் உரை ஆற்றினார்  அதை நமது பொதுச் செயலாளர் தோழர் ப.அபி அவர்கள் தமிழில் எடுத்துரைத்தார்

கருத்தரங்கத்தின் உருக்கமாக பேசிய BSNLEU அகில இந்திய பொதுச் செயலாளர் ப.அபி அவர்கள்


  நடைபெற்ற கருத்தரங்கத்தில் நமது பி. எஸ். என். எல்  நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் திரு A N .ராய் , இயக்குனர் (மனித வளம் ), திரு அஸ்ரப்கான், தலைமை பொது மேலாளர் , தமிழகம் , பாலசுப்ரமணியம் , பொது மேலாளர் ,சென்னை வட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர் திரு A .N . ராய், இயக்குனர்( மனிதவள மேம்பாடு), அவர்கள் பேசிய போது பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வாடிக்கையாளர் அனைவர்க்கும் திருப்தியான சேவை செய்ய வேண்டியதின் அவசியத்தையும் நிறுவனத்தை மீட்டு எடுக்க வேலையின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் கூறினார் .

 நமது பொது செயலர் பேசும் போது வேலை கலாச்சாரம் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டி காட்டினார் .பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது பொது செயலரின் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற தொழிற் சங்க பணிகள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் V .A .N .நம்பூதிரி ,CITU அகில இந்திய தலைவர் A .K .பத்மநாபன் , தமிழ் மாநில  செயலர் செல்லப்பா ,சென்னை தொலைபேசி மாநில செயலர் கோவிந்தராஜன் ,P .சம்பத் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தோழர் M .முருகையா , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர்   SNEA கோபிநாதன் , வள்ளிநாயகம் (FNTO ),சேவா BSNL ரவீந்திரன் NFTE சங்க R .கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் நினைவு கூர்ந்தனர் .நமது பொது செயலர் தோழர் ப.அபி அவர்கள்  பயணித்த தடங்களில் நாம் அனைவரும் எலுச்சியுடன் பயணம் செய்வதே நாம் தோழர்அவர்களுக்கு  அளிக்கும் வாழ்த்து செய்தியாகும்  .

வாழ்த்துகளுடன்.....
தஞ்சை BSNLEU மாவட்டசங்கம்

மத்திய சங்கம் செய்திகள்

மத்திய சங்கம் செய்திகள்:104 <<<Click Here>>>

தோழர் அபி பணி ஓய்வு பாராட்டு விழா தீக்கதிர் விளம்பரம்

தீக்கதிர் விளம்பரம்<<<Click Here>>>

Saturday, 4 January 2014

04.01.2014அன்று தஞ்சைமாவட்ட BSNLEU செயற்குழு கூட்டம் நடை பெற்றது

அன்புள்ள தோழர்களே  ! தோழியர்களே ! வணக்கம்


04.01.2014 அன்று தஞ்சை மாவட்ட BSNLEU செயற்குழு கூட்டம் தலைவர் தோழர் A.இருதயராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.


செயற்குழுவை தோழர் மா.பழனியப்பன். மாவட்ட துனை தலைவர் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட சங்க செயல்பாடு,கிளைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் மாநில சங்க செய்திகள் அகில இந்திய சங்க செய்திகளை விரிவாக பேசினார்.

செயற்குழுவில் கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட  24 தோழர்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள் விவாதத்திற்க்கு பிறகு மாவட்ட செயலர் தொகுப்பு உரை வழங்கினார்.

கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

* கிளைக் கூட்டங்கள் மாதா மாதம் நடத்தப்பட வேண்டும்.

* தொழிற்சங்க வகுப்பு நடத்தப்பட வேண்டும்.

*ஜனவரி 7-ல் சென்னையில் நடைப்பெறும் BSNL கன்வென்ஷனில் தஞ்சை மாவட்டத்திலிருந்து அனைத்து தோழர்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.

* CUSTOMER CARE -ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய பிளான் பற்றி தகுந்த  பயிற்ச்சி அளிக்க வேண்டும்.

*தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்டவர்களும் சரியான பராமரிப்பு இல்லாததால்  டவர்சிக்னல் கிடைபதில் தாமதம் ஏற்படுகிறது  இதை நிர்வாகத்தை வலியுருத்தி சரிசெய்ய வைப்பது.

*தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து CSC யிலும் வேலை நேரம் பற்றிய அறிவிப்பு பலகை வைப்பதற்க்கு நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கும்தெரியப்படுத்தவேண்டும்.

*ஒப்பந்த ஊழியர்களை புதிதாக சேர்பதை நிறுத்த வேண்டும்.

தோழர் மாவட்ட பொருளர் எஸ்.என்.செல்வராஜ் நன்றி கூறி முடித்து வைத்தார்.

                         


வாழ்த்துகளுடன்!
                                                                                                                 தோழமையுடன்
                                                                                                                    தெ.சுப்ரமணியன்
                                                                                          தஞ்சைBSNLEU மாவட்ட செயலர்

Friday, 3 January 2014

BSNL-லில் 29.12.2013 , 13-வது அகில இந்திய அளவிலான பளூ தூக்கும் போட்டி போப்பாலில் நடைப்பெற்றது

13th All INDIA WEIGHT-LIFTING AND POWER LIFTING BEST PHYSIGUE -CHAMPIONSHIP(M.P.)BHOPAL.BSNL-லில்  13-வது அகில இந்திய அளவிலான பளூ தூக்கும் போட்டி போபாலில் நடைப்பெற்றது அதில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  தோழர் எஸ்.விமல்ராஜா SA, மன்னார்குடி அவர்கள் முதலிடம் பிடித்துள்ளார். தோழர் எஸ்.விமல்ராஜா.SA, அவர்கள் மென் மேலும் வளர பலபரிசுகளை வெல்ல வேண்டும்மென்று தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்  மானதார பாராட்டுகிறது.


நமது BSNLEU சங்கத்தை சேர்ந்த தோழர் எஸ்.விமல்ராஜா  அவர்கள் திரு.எஸ்.விஜயகுமார்,DGM(CFA)அவர்கள்,திரு,எக்ஸ்.ஜான்ஸ்டீபன்தாஸ்,AGM(VIG),திருமதி.சி.பொன்னழகு,AGM(NWP) BSNL தஞ்சாவூர்.


வாழ்த்துகளுடன் மாவட்ட செயலர்
தெ.சுப்ரமணியன்

வீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாள்...

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள்...


பார்க்க<<<Click Here>>>

பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா புகைப்படம்

தோழர் P.அபிஅவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா <<<Click Here>>>

Wednesday, 1 January 2014

IDA உயர்வு

IDA increase is 5% from 01-01-2014.

01-01-2014 முதல் IDA உயர்வு 5% ஆக இருக்கும் 


It is learnt that the IDA increase, that has become due w.e.f. 01.01.2014 is 5%. With this IDA increase, the total IDA that has become payable from 01.01.2014 will be 90.5% (85.5% + 5 %).