Tuesday 17 October 2017
Monday 16 October 2017
Tuesday 10 October 2017
Monday 9 October 2017
ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய் 7000- போனஸ்சாக வழங்கப்பட வேண்டும் என்ற நமது
கோரிக்கையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக ரூபாய்.3750- மட்டும் கொடுத்த ஒப்பந்தகாரரை மீத தொகையை வழங்க வற்புறுத்தியும், அதை பெற்று தரும்படி நிர்வாகத்தை
வலியுறுத்தியும் 09-10-2017 மாலை
தஞ்சை மாரீஸ் கார்னர் தொலைபேசியகத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓன்றுபட்டு போராடினால் வெற்றி
நிச்சயம்=மாவட்டச் செயலாளர், BSNLEU, TNTCWU தஞ்சாவூர் மாவட்டம்
Saturday 7 October 2017
தோழமையுடன் வரவேற்கிறோம்!!
சொந்த வேலை நிமித்தம் காரணமாக தமது 3 மாத கால வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் நமது மாநில தலைவர் தோழர்
.எஸ்.செல்லப்பா அவர்களை தோழமையுடன் வரவேற்கிறோம்!!
BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
அனைத்து BSNL ஊழியர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின் முடிவுகள் விபரம்
1)இனி அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின்
சங்கங்கள் /கூட்டமைப்புகள் “ALL UNIONS and ASSOCIATIONS OF BSNL” என்ற பதாகையின் கீழ்செயல்பட்டு,பொதுப்பிரச்சனைகளான
சம்பள உடன்பாடு , துணைடவர் நிறுவனம் அமைவதை தடுப்பது போன்ற
பிரச்சனைகளுக்காக போராடும்.
2)அனைத்து பொதுச்செயலர்கள் விரைவில்
நிர்வாகத்திற்கு போராட்ட அறைகூவலை ஒன்றுபட்டு வெளியிடுவார்கள்.
3)கீழ்க்கண்ட பிரச்சனைகள் உடனடி
தீர்வுக்காக போராட்ட கோரிக்கையாக கண்டறியப்பட்டுள்ளன.
01-01-2017 முதல் சம்பள மாற்றம் மற்றும் 2
வது ஊதிய உடன்பாட்டில் தீர்க்கபடாமல் உள்ள நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால
பலன்கள், துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து
நிறுத்துவது
4) கீழ்க்கண்ட போராட்ட திட்டங்கள்
முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அ)16-10-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆ)16-11-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு மனிதசங்கிலி இயக்கம்
இ)15-11-2017 அன்று பாராளுமன்ற
உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்
ஈ)12 & 13-12-2017
தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.
உ)காலவரையற்ற வேலை நிறுத்தம்- தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.
5) அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று
நடைபெறும்.
போராட்ட ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Subscribe to:
Posts (Atom)