27.11.2014 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்- தமிழக JAC முடிவு<<<Click Here>>>
Friday 31 October 2014
Wednesday 29 October 2014
சுற்றறிக்கை எண்:4
BSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்-FORUMமுடிவு<<<Click Here>>>
Monday 27 October 2014
அகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....
அகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....<<<Click Here>>>
Saturday 25 October 2014
அகில இந்திய மாநாடு
அகில இந்திய மாநாட்டிற்கு Special Casual Leave வழங்க மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.<<<Click Here>>>
ERP அமலாக்கம்
ERP அமலாக்கத்தை ஒரு மாத காலம் தள்ளிவைக்க அனைத்து சங்கங்களும் இணைந்து தலைமைப் பொது மேலாளருக்கு கடிதம்<<<Click Here>>>
Sunday 19 October 2014
தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தீபாவளி…………
இது தீபங்களின் விழா நாள்…………
தீமைகளின் எரி நாள்……….
நன்மைகளின் திரு நாள்………….
உறவுகளின் ஒரு நாள்………..
சந்தோசத்தின் மழை நாள்……..
இன்பத்தின் சாரல்கள்
பொழியும் பொது நாள்…………
இனிமைகளின் மொட்டுக்கள்
மலரும் நறுமண நாள்…………
…
தீபாவளி நல்வாழ்த்துகள்…..
தீமைகளின் எரி நாள்……….
நன்மைகளின் திரு நாள்………….
உறவுகளின் ஒரு நாள்………..
சந்தோசத்தின் மழை நாள்……..
இன்பத்தின் சாரல்கள்
பொழியும் பொது நாள்…………
இனிமைகளின் மொட்டுக்கள்
மலரும் நறுமண நாள்…………
…
தீபாவளி நல்வாழ்த்துகள்…..
வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.
கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.
காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.
கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.
காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Saturday 18 October 2014
Friday 17 October 2014
Thursday 16 October 2014
சுற்றறிக்கை எண் 2
16.10.2014 அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம், NOKIA நிறுவன மூடலை கண்டித்தும், போராடும் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நடத்தப்பட வேண்டும்.<<<Click Here>>>
Wednesday 15 October 2014
சுற்றறிக்கை எண்:01
போராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு ஆதரவாக 16.10.2014 அன்று ஆர்ப்பாட்டம்- தமிழ் மாநில மாநாடு அறைகூவல்<<<Click Here>>>
Tuesday 14 October 2014
7வது மாநில மாநாடு நிகழ்வுகள்
BSNL ஊழியர் சங்கத்தின் 7ஆவது தமிழ் மாநில மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நியூ டைமண்ட் மஹாலில் 2014, அக்டோபர் 11 முதல் 13 வரை சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்துக் கொண்ட அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் புதிய நிர்வாகிகள்தேர்வில் 7 ஆவது மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரையும் மனதார தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது.
தோழமையுடன்
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம்
புதிய நிர்வாகிகள்
7 ஆவது மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள்<<<Click Here>>>
தகுதி ஆய்வு தகவல்கள்
மாநில மாநாட்டில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் தகுதி ஆய்வு தகவல்கள்<<<Click Here>>>
மாநில மாநாட்டில் பொது அரங்கு
மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் நடைபெற்ற பொது அரங்கப் பதிவுகள்<<<Click Here>>
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு
மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு தங்களுக்கான ஓர் அமர்வை ஒருங்கிணைத்தது.<<<Click Here>>>
தொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்
அறிக்கையின் மீதான கலந்துரையாடல் மாநாட்டின் மூன்றாம் நாளிலும் தொடர்ந்து நடைபெற்றது.<<<Click Here>>>
Monday 13 October 2014
செயல்பாட்டறிக்கையின் மீதான கலந்துரையாடல்
செயல்பாட்டறிக்கையின் மீதான தொடரும் கலந்துரையாடலின் காட்சிப் பதிவுகள்<<<Click Here>>>
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தலும் அறிக்கையின் மீதான விவாதங்களின் முதல் பகுதிக்கான காட்சிப் பதிவுகளும்<<<Click Here>>>
எங்கெங்கு காணினும் சக்தி என,,,,
எங்கெங்கு காணினும் சக்தி என மாநாட்டில் அலைகடலெனத் திரண்ட உறுப்பினர்களின் சில பகுதிகள்<<<Click Here>>>
7வது தமிழ் மாநில மாநாடு
BSNL ஊழியர் சங்கத்தின் 7வது தமிழ் மாநில மாநாடு திருச்சி மாநகரத்தில் தோழர் R.உமாநாத் அரங்கில் இனிதே துவங்கியது<<<Click Here>>>
Thursday 9 October 2014
திருச்சி
BSNL ஊழியர் சங்கத்தின் 7ஆவது தமிழ் மாநில மாநாடு
BSNL
ஊழியர் சங்கத்தின் 7ஆவது தமிழ்
மாநில மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நியூ டைமண்ட் மஹாலில் 2014, அக்டோபர் 11 முதல் 13 வரை சீரும்
சிறப்புமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி காலை சரியாக பத்து மணிக்கு பொது அரங்க நிகழ்ச்சிகள் துவங்க
உள்ளது. பொது அரங்க நிகழ்ச்சிகளுக்கு அனைத்து தோழர்களையும்வருக வருக என தஞ்சை மாவட்டசங்கம் அன்புடன் வரவேற்கிறது. நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, பாராளுமன்ற
உறுப்பினர் தோழர் T.K.ரங்கராஜன், தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் தோழர் P.சம்பத், தமிழ் மாநில
தலைமை பொது மேலாளர் திரு G.V.ரெட்டி ITS மற்றும் மாநில செயலாளர் தோழர் S.செல்லப்பா ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
எனவே அனைவரும் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும்.
தோழமையுடன் தஞ்சை மாவட்ட சங்கம் BSNLEU
Sunday 5 October 2014
Friday 3 October 2014
01.10.2014 முதல் 6.9% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளதாக தெரிய வருகிறது
01.10.2014 முதல் 6.9% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளதாக தெரிய வருகிறது. மொத்தமாக இனிமேல் 98.2% IDA கிடைக்கும்.
Wednesday 1 October 2014
உலக முதியோர் தினம்: வயதான 'குழந்தைகளை' மதிப்போம்! 01.10.2014
முதியோர் தினம்
முதியோரைப் பாதுகாப்போம்!
இன்று (அக்.01) உலக முதியோர் தினம்.
கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.
அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
இந்த ஆண்டு உலக முதியோர் தினத்தின் நோக்கம், `வயதானவர்களின் உரிமைகள்' என்பதே.
உலக அளவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் என்பது மேலும் கவனிக்கப்பட வேண்டியது.
எனவே வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் உறுதி மேற்கொள்வோம்!
அனைவருக்கும் இனிய தசரா விழா நல் வாழ்த்துக்கள் 01.10.2014
தசரா விழா தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் புராணகதை ஒன்று உண்டி. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன் தான் பெற்ற தவத்தின் பயனாக வலிமை மிக்கவனாகி ஆணவத்தால் தன் அறிவுக்கண்ணை இழந்திருந்தான். ஒரு நாள் இவனது இருப்பிடம் வழியாக மகா மகத்துவம் பொருந்திய அகத்திய மாமுனிவர் செல்லும் போது அவரை மதிக்கத்தவறியதுடன் அவமரியாதையும் செய்தான், இதனால் அகத்தியர் மனம் நொந்து வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலைவாயாக என்று சாபம் கொடுத்தார், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய உடனுடம், சாப விமோசனமாக இறைவியின் கையால் உன் உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான். இதனால் பூமியில் தவம் புரியும் முனிவர்கள் முதல் தேவர்கள் வரை அனைவருக்கும் எல்லையில்லா துன்பம் கொடுத்து வந்தான், வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட , அன்னை பார்வதியை நோக்கி தவம் செய்யுங்கள் உங்களுக்கான தீர்வை அன்னை தருவாள் என்றார் சிவன். தேவர்களும் அன்னையை நோக்கி விடா முயற்சியுடன் கடும் தவம் புரிந்தனர். முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரண் ஒன்றை உருவாக்கி எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேள்வியை நடத்தும்படி கூறினாள். அவர்கள் நடத்திய வேள்வியில் பெண் குழந்தை ஒன்று தோன்றியது இந்த குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. 9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள். மகிஷாசூரனை அழித்த 10- ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாகவாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதல் மூன்று நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் மூன்று நாட்கள் அலைமகளாகவும் , இறுதியில் வரும் மூன்று நாட்கள் கலைமகளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை. மகிஷாசூரணை வதைத்ததால் அன்னை மகிஷாசூரமர்த்தினி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
Subscribe to:
Posts (Atom)