Monday 30 January 2017

சென்னையில் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு

தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு சென்னை ஆனந்த வல்லி திருமண மண்டபத்தில் 07.02.2017 அன்று நடைபெற உள்ளது. அதில் மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் கிளை செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு வரும் போது  கிளை செயலாளர்கள், தங்கள் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக்  அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு அதே இடத்தில் 8வது அகில இந்திய மாநாட்டு பணிகளில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Saturday 28 January 2017

Contract workers March to Parliament on 22nd February, 2017 – Make it a grand success.


The BSNL Casual Contract Workers Federation (BSNLCCWF), is organising a March to the Parliament on 22nd February, 2017, to highlight the demands of the casual and contract workers. BSNLEU always remains in the forefront, in fighting against the injustices being meted out to the casual and contract workers. The 8th All India Conference of BSNLEU, held at Chennai, has given a call to the regular workers also to massively participate in this rally, and raise their voices in support of the demands of the casual and contract workers. The CHQ of BSNLEU has called upon the circle unions of BSNLEU, nearer to Delhi, to take special efforts to mobilise maximum number of regular employees in the rally. Let us make the March to Parliament a grand success. 
=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Saturday 21 January 2017

மத்திய மாநில அரசுகளே! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடு!!!

தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி! வெல்லட்டும் இளைஞர்களின் போராட்டம்!! ஆதரவுக் கரம் கொடுப்போம்!
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Friday 13 January 2017

அரசு விடுமுறை கட்டாயமல்ல

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது அரசு விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று மீண்டும் பொங்கலுக்கு கட்டாய விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களை குறிவைத்து ஒடுக்கும் விதமாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பொங்கள் பண்டிகைக்கு உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றே விடுப்பு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுக்கும் பட்சத்தில் கட்டாயமாக பணிக்கு செல்ல வேண்டும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு ரீதியான விழாவை இருட்டடிப்பு செய்வதாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தனது முடிவில் பின் வாங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இன்று மீண்டும் சேர்த்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Pongal Greetings

Pongal greetings 2017 jallikattu.jpg

Friday 6 January 2017

BSNL ஊழியர் சங்க அனைத்திந்திய நிர்வாகிகளின் பட்டியல்

2016 டிசம்பர் 31 முதல் 2017 ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியல்

தலைவர்                                 : தோழர். பலபீர்சிங், பஞ்சாப் 

பொதுச்செயலாளர்               : தோழர். P .அபிமன்யு , தமிழ்நாடு 

உதவி பொதுச்செயலாளர்  : தோழர் S. செல்லப்பா, தமிழ்நாடு 

பொருளாளர்                         : தோழர் கோகுல் போரா , அஸ்ஸாம்  

தோழர்கள்  பணி சிறக்க எங்கள் தஞ்சை சங்கத்தின் வாழ்த்துக்கள் 

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்