மேதின வாழ்த்துக்கள்....
மேதின மலர்கள் மேதினி நுகர
தீதிலா வகையில் திக்கெலாம் புகழ்மணம்
மலர்ந்தது வறண்ட மண்ணு மோங்கியே
புலர்ந்தது வியர்வைப் பூக்களின் மணங்களால்
படித்தவர் அறிவும் பாமரர் உழைப்புமே
வடித்திடும் திறனால் வையகம் சுழலுதே
உழைப்பு நல்லதாம் உறுதியாய் நம்புக
அழைக்கும் நாள்வரை அயரா துழைத்தால் .
நம்பியே குடும்பமும் நலமுடன் வளமாம்
வெம்பியே மடிந்தால் வேதனை வளரும்
வானம் மாரியை வழங்கிடும் நமக்கு .
தானம் வாரியே தருவதை யுணர்ந்து.
ஏரைப் பூட்டி ஏற்றமுடன் உழைத்தால்
பாரோர் வாழ்ந்திட பசியைப் போக்கும்
உன்னதம் தெரிய உலகமே நினைக்கும்
மன்மத வருடமும் மகிமையைத் தருமே !.
தோழமையுடன்
BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம்
BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம்