இந்திய
ஐடி நிறுவனங்களின் அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த
இந்தியாவையே அதிரவைத்துள்ள நிலையில், அரசு பணியிடங்களில் ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்து அரசு
ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர்
ஜித்தேந்திர சிங் உறுதிப்படுத்தினார்.
இந்த அறிவிப்பை வெளியிடும் முன்
மத்திய அரசு குரூப் ஏ பிரிவில் 24,000
ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,251
ஊழியர்களின்
செயல்திறனை ஆய்வு செய்து அதன் பின்னரே 129 ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தியுள்ளது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்