Wednesday 28 December 2016

BSNLEU கோரிக்கை சம்பள மாறுதல் சம்பந்தமாக கூட்டு கமிட்டீ அமைத்திடுக

இன்று Com.Swapan Chakraborty, Dy.GS,அவர்கள்   ms. Sujata Ray, Director(HR) ஐ சந்தித்து நிர்வாகத்தரப்பில் அமைக்க பட்டுள்ள சம்பள மாறுதல்கமிட்டீ எந்த பலனும் இருக்காது தொழிற் சங்க பிரதிநிதிகளை கொண்ட கூட்டு கமிட்டீ அமைத்திடுக என்று வலியுறுத்த பட்டது.Director(HR) பரிசீலிப்பதக உறுதி கூறினார். 

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Saturday 17 December 2016

நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் பிரமாண்டமான வெற்றி!!!

BSNL நிறுவனத்தின் உயிர் நாடியாம் மொபைல் டவர்களை BSNLல் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியினை எதிர்த்து BSNLல் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் விடுத்த 15.12.2016 ஒரு நாள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்று இந்த வேலை நிறுத்தத்தை பிரமாண்டமான வெற்றியாக மாற்றியுள்ளார்கள். தமிழகத்திலும் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். BSNLஐ காப்பாற்ற நடைபெற்ற இந்த பிரமாண்டமான தேச பக்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற உழைத்திட்ட அனைத்து சங்க தலைவர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நமது வாழ்த்துக்கள். நமது கண்ணின் மணியாம் BSNL நிறுவனத்தை பாதுகாக்க அயராது உழைத்திடுவோம். அரசின் தனியார்மய முயற்சிகளை தடுத்திடுவோம்!!

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Monday 12 December 2016

Friday 9 December 2016

BSNL அதிகாரிகள் சங்க தேர்தல்

தஞ்சை மாவட்ட அதிகாரிகள் சங்க தேர்தலின் பதிவான ஓட்டுக்கள்
மொத்தம் = 113
AIBSNLEA  = 55
SNEA           = 51
AIBSNLOA =   6
BASE           =   1
அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 


Thursday 8 December 2016

நாகை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி

1974-ல் தொடங்கிய காவிரி நீர்ப் பிரச்சனையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் தொடர்ச்சியான-வலிமையான போராட்டங்களால், இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்திருந்த தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.நடுவர் மன்றம் மூலம் கர்நாடகம், தமிழ்நாடு,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் காவிரிப் பாசன விவசாயிகளின் நியாயமான தண்ணீர்த் தேவையை அறிந்து, 1992-ல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டு, 2007-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், உடனடியாக மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியும், மத்திய பாஜக அரசு, அரசியல் காரணங்களுக்காக மறுத்து வருகிறது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையும் இதுவரை பெய்யாமல் காவிரி டெல்டா விவசாயிகள், ஏழை எளிய விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் கருகி வருவதைக் கண்டு, அதிர்ச்சியுற்று, மனமுடைந்து மாரடைப்பாலும் தற்கொலை செய்துகொண்டும் மாண்டு போகிறார்கள்.

இயற்கைச் சீற்றங்கள், வெள்ளம் வந்தாலும் வறட்சி வந்தாலும் புயல் வந்தாலும் சுனாமி வந்தாலும் கொள்ளை நோய்கள் வந்தாலும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய-மாநில அரசுகள், வாய்மூடி மௌனிகளாக இருப்பது நியாயமானது இல்லை.இதுவரை நாகை மாவட்டத்தில் மட்டும் ஏழை எளிய விவசாயிகள் 10 பேர் மாண்டுள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. குடும்பத் தலைவரை, தலைவியை இழந்து வாடும் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம், சாகுபடி செய்த நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கி விவசாயிகளைப் பாதுகாத்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

திருச்சி கருத்தரங்கம்

BSNL ஊழியர் சங்கம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் திறந்தவெளி கருத்தரங்கம் 17.12.2016 மாலை 0430 மணிக்கு PGM அலுவலகம்திருச்சியில் நடைபெறும் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளவும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Tuesday 6 December 2016

08.12.2016 திறந்தவெளி கருத்தரங்கம்

BSNL ஊழியர் சங்கம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் திறந்தவெளி கருத்தரங்கம் அடுத்தவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேதி அறிவிக்கப்படும் 

 08.12.2016காலை அனைத்து கிளைகளிலும் கொடியேற்ற வேண்டும்


A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

தமிழக முதல்வர் செல்வி J.ஜெயலலிதா மரணம்

உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முதல்வர் டாக்டர் J.ஜெயலலிதா அவர்கள் நேற்று (05.12.2016) காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு MGR மூலமாக அரசியலுக்கு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர், அ.இ.அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர். MGR அவர்களின் மறைவிற்கு பின் அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கி செயல்பட்டவர். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளார். அவரது மறைவிற்கு தஞ்சாவூர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தஞ்சாவூர் மாவட்ட  சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

A .இருதயராஜ், மாவட்ட செயலாளர், தஞ்சாவூர் மாவட்டம்  

Monday 5 December 2016

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 60th Anniversary



மகாத்மா காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்தின் ஒப்பற்ற தலைவர் அவரே என்பது பெருவாரியான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரை ஒரு தலித் சமுதாய தலைவராக, பிரதிநிதியாகப் பார்க்கக் கூடாது என்றும், அவர் இந்த நாட்டைக் கட்டமைத்த ஒப்பற்ற சிற்பி என்பதை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Sunday 4 December 2016

டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்!!!

15.12.2016அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும் என மாநில, மாவட்ட சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் அனைத்து சங்கங்களின் தலைவர்களை அணுகி விவாதிக்கப்பட்டது. அனைத்து சங்கங்களின் சார்பாக ஒரு சுற்றறிக்கையும், சுவரொட்டியும் தயாராகிக் கொண்டுள்ளது. அது விரைவில் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில் BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்திட வேண்டும். தல மட்டங்களில் அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தத்திற்கான பணிகளை கூட்டாக செய்திட வேண்டும். அனைத்து அதிகாரிகள் சங்கங்களும், ஊழியர் சங்கங்களும் இருப்பதால் இந்த வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெற்று விடும் என்று அசிரத்தையாக இருந்து விடக்கூடாது. மற்றவர்கள் முன்கையெடுப்பார்கள் என்றும் நாம் இருந்து விடக்கூடாது. BSNL ஊழியர் சங்கம் தான் முன்கையெடுக்க வேண்டும். பலமானதொரு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு பலமான ஒன்று பட்ட போராட்டத்தின் மூலமாகவே துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்த முடியும். எனவே நூறு சதவிகித ஊழியர்களின் பங்கேற்பை வேலை நிறுத்தத்தில் உறுதி செய்ய வேண்டும். வேலை நிறுத்தம் நடைபெற குறுகிய கால அவகாசமே உள்ளது. அனைத்து சங்க உறுப்பினர்களையும் ஒன்றாக திரட்டி தலமட்டங்களிலே வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டங்களை நடத்திட வேண்டும். சுற்றறிக்கை எண்.141 என தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள மத்திய சங்கத்தின் சுற்றறிக்கையில் உள்ள விஷயங்களை பயன்படுத்தி மாவட்ட மட்டங்களில் தேவையான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும். ஊழியர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் பணியிடங்களுக்கே சென்று, தேவைப்பட்டால் அவரகளின் இல்லங்களுக்கும் சென்று சந்தித்து கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதன் மூலம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Monday 28 November 2016

தஞ்சை பொது மேலாளர் உடன் சந்திப்பு

நாளை 29-11-2016 மதியம்  0200 மணிக்கு  தஞ்சை பொது மேலாளர் அவர்களை சந்தித்து புதிய நிர்வாகி பட்டியலை சமர்ப்பித்து அறிமுகம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நாடு தழுவிய கண்டன நாள் தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களிடமிருக்கும் ஆயிரம், இரண்டாயிரம் பணத்தையும் பறித்து, அம்பானி,அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தரும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் திங்களன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகின்றன.மேற்குவங்கம், கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் போராட் டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம் எல்)-லிபரேசன், எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் பங்கேற்கின்றனர். இதேபோல, மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுஎன்று பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். அன்றிலிருந்து கடந்த 20 நாட்களுக்காக, அன்றாட செலவுக்கே பணமில்லாமல் ஏழை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட முடியாமல் முடங்கி விட்டன. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை. மக்கள் கையில் பணமில்லாததால், சிறு கடைகள் மட்டுமன்றி பெரிய வர்த்தக நிறுவனங்களும் கூட முடங்கியுள்ளன.

Sunday 27 November 2016

Prepare for the one day strike to be held on 15.12.2016

The dharna held on 25.11.2016 against formation of the Subsidiary Tower Company,  the preparation for the one day strike, to be held on 15.12.2016. Hence, Branch unions are requested to mobilise maximum number of Non-Executives and Executives, so that it will be a grand success of  one day strike. The massive success of strike should send the right message to the government also.. 

BSNLEU THANJAVUR DIST CONFERENCE AT TIRUTHURAIPOONDI ON 25/11/2016

President               :        Com D.Subramanian, Thanjavur
Vice President             :    1.       Com K.Pitchaikannu, Mannargudi
                                  :    2.        Com K.Sundaramoorthi, Tiruvarur
                                  :    3.        Com M.Kalaiselvi, Pattukottai
                                  :    4.        Com N.Nagarajan, Tiruthuraipoondi
Secretary               :       Com A.Irudayaraj, Thanjavur
Asst Secretary             :    1.        Com R.Ramanan, Thanjavur
                                  :    2.        Com J.Ramesh, Thanjavur
                                  :    3.        Com K.S.Balasubramanian, Thanjavur
                                  :    4.        Com K.T.Murugaiyan, Tiruthuraipoondi
Treasurer              :       Com P.Manickam, Papanasam
Asst Treasurer            :    1.  Com D.Asokan, Pattukottai
Organizing Secretary :   1.  Com R.Sundararajan, Peravurani
                                :    2.  Com K.Karikalan, Pattukottai
                                :    3.  Com K.Durairajan, Papanasam
                                :    4.  Com K.Vethamani, Thanjavur
                                :    5.  Com U.Panneerselvam, Tiruvarur
                                :    6.  Com T.Kalimuthu, Thanjavur
                                :    7.  Com R.Mythili, Thanjavur

Auditor                      :       Com M.Mohamed Yasin, Mannargudi



Wednesday 5 October 2016

BSNL அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தஞ்சை SSA வில் இருந்து மன்னை கிளை தோழர் விமல்ராஜ் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று நமது மாவட்டத்திற்கும் BSNLEU சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு தஞ்சை மாவட்ட BSNLEU சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம் 

Tuesday 20 September 2016

Monday 19 September 2016

PLI குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யூ, NFTE யின் பொதுச் செயலர் தோழர் சண்டேஸ்வர்சிங் ஆகியோர் CMD திரு அனுபம் ஸ்ரீவத்சவ் அவர்களைச் சந்தித்து PLI தொடர்பாக கலந்தாலோசித்தார்கள்.

CMD அவர்கள் 2014-15ஆம் ஆண்டிற்கான PLI ஆக ரூ. 3000 தர ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கான கோப்பு மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…
என்றபோதிலும்…
கோரிக்கைகள் 24ல் ஒன்றின் ஒரு பகுதிக்காக போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.

மூன்றாம் கட்டப் போராட்டமான
உண்ணாவிரதம்
நாளை (20-09-2016)
திட்டமிட்டபடி நடைபெறும்.
D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
     தஞ்சை மாவட்டம்  

Thursday 1 September 2016

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்.

      விலை வாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/தனியார் மயமாக்காதே, குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- நிர்ணயம் செய்துவிடு என்பது உள்ளிட்ட இந்திய நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் தேசம் தழுவிய தேச பக்த போராட்டமான செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் பெரு வாரியாக பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

சுற்றறிக்கை எண்:125

ஊதிய பேச்சு வார்த்தையும் இதர செய்திகளும்…<<<Click Here>>>

Wednesday 31 August 2016

களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்

செப்.2: களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள். கட்டுரையாளர்: தோழர்.ஏ. பாபு ராதாகிருஷ்ணன் தமிழ் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.<<<Click Here>>>

Saturday 27 August 2016

Saturday 6 August 2016

GPF மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

கடந்த ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம்,  தமிழ் மாநிலத்திற்கு GPF நிதி ஒதுக்கீடு செய்யாததால் GPF விண்ணப்பித்தவர்களுக்கு, GPF payment, பட்டுவாடா செய்யப்படவில்லை. எனவே, ஜூலை மாதம் விண்ணப்பித்தவர்கள், தங்களது பழைய விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும், புதியதாக  5-ந் தேதி அல்லது அதற்கு பின் விண்ணப்பிக்க வேண்டும். 

 D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
     தஞ்சை மாவட்ட சங்கம் 

சுற்றறிக்கை எண்:122

BSNLஐ தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம்-03.08.2016 ஆர்ப்பாட்டம்<<<Click Here>>>

Thursday 4 August 2016

செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம்

மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மட்ட சிறப்புக்கூட்டங்களுக்கு மாநில நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.<<<Click Here>>>

Wednesday 3 August 2016

தமிழக FORUM முடிவுகள்

ஆகஸ்ட் 3 மற்றும் 10ஆம் தேதி இயக்கங்கள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தமிழக FORUM முடிவுகள்<<<Click Here>>>

Friday 22 July 2016

சுற்றறிக்கை எண்:120

மத்திய செயற்குழு முடிவுகள் மற்றும் நிர்வாகத்துடன் சந்திப்பு<<<Click Here>>>

Wednesday 20 July 2016

சுற்றறிக்கை எண்:119

மத்திய சங்கம் நடத்திய ”டாக்டர் B.R.அம்பேத்கார்-125” கருத்தரங்கம்”<<<Click Here>>> 

DoT issues order

DoT issues order for revision of pension based on 78.2% IDA merger.<<<Click Here>>>

முதல் வெற்றி!

நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:118

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை உடனே துவங்குக மற்றும் சில செய்திகள்<<<Click Here>>>

IDA உயர்வு- BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டது

விலை வாசி புள்ளிகள் உயர்ந்துள்ளதை ஒட்டி, BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் IDA, 01.07.2016 முதல் 114.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதற்கான உத்தரவினை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. BSNL கார்ப்பரேட் அலுவலக உத்தரவு எண்:-14-1/2012-PAT(BSNL) Dated 13.07.2016.

Thursday 14 July 2016

FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திப்பு

FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திக்கும் புகைப்படங்கள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:117

மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் CMD BSNL உடன் FORUM தலைவர்கள் சந்திப்பு<<<Click Here>>>

Wednesday 13 July 2016

சுற்றறிக்கை எண்:116


BSNL ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி<<<Click Here>>>

சுற்றறிக்கை எண் 115

புதிய தொலை தொடர்பு அமைச்சராக திரு.மனோஜ் சின்ஹா,மற்றும் இதர செய்திகள்<<<Click Here>>>

Thursday 7 July 2016

சுற்றறிக்கை எண்:114

ஓய்வூதியதாரர்க்கு 78.2% பஞ்சப்படி இணைப்பு ம8ற்றும் இதர செய்திகள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:113

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் மத்திய பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கருத்தரங்கம் முடிவு<<<Click Here>>>

Wednesday 6 July 2016

சுற்றறிக்கை எண்:112


ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிப்பு மற்றும் சில செய்திகள்<<<Click Here>>>

Thursday 30 June 2016

எழுச்சிமிகு தர்ணா..

சென்னை சொசைட்டியின் முறைகேடுகளை கண்டித்து எழுச்சிமிகு தர்ணா.<<<Click Here>>>

Wednesday 29 June 2016

Monday 20 June 2016

சுற்றறிக்கை எண்:109

NLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்திகள்<<<Click Here>>>

மைசூரில்AIBSLEA 5வது All India Confernce

 நமது BSNLEU சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர்.P.அபிமன்யு 
  மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 





D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம்

Saturday 18 June 2016

ஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்...

D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம்

Wednesday 15 June 2016

சுற்றறிக்கை எண்:108

ஊழியர் பிரச்சனைகளை இழுத்தடிக்காதீர்- இயக்குனர் குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் இதர மத்திய சங்க செய்திகளும்<<<Click Here>>>

Tuesday 14 June 2016

சுற்றறிக்கை எண்:107

ஊதிய மாற்றமும் இதர மத்திய சங்க செய்திகளும் <<<Click Here>>>

Monday 13 June 2016

வெற்றி விழாக் கூட்டம்

10.06.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் DOUBLE HATRICK வெற்றிவிழாக் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:-106

தூத்துக்குடியில் நடைபெற்ற முப்பெரும் விழா- விரிவடைந்த மாநில செயற்குழு- அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு- வெற்றி விழா<<<Click Here>>>

தூத்துக்குடி விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்கள்

விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழுவின் புகைப்படங்கள்<<<Click Here>>>

Friday 3 June 2016

சுற்றறிக்கை எண்:105

JTO LICEமுடிவுகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் மற்றும் இதர செய்திகள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:104

FORUMத்தின் CORE கமிட்டி கூட்ட முடிவும் டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தின விழாவும்<<<Click Here>>>

Wednesday 1 June 2016

சுற்றறிக்கை எண்:103

NO VRS-BSNL சேவைகளின் முன்னேற்றம்- BSNL CMD அறிவிப்பு மற்றும் சில மத்திய சங்க செய்திகள்<<<Click Here>>

Wednesday 25 May 2016

சுற்றறிக்கை எண்:102

மீண்டும் வேதாளம்……. BSNL நிறுவனத்தை லாபமடையச் செய்ய VRS திட்டம் அவசியமாம்- CMD BSNL<<<Click Here>>>

Friday 20 May 2016

BSNLEU granted the status of Main Recognised Representative Union.

Based on the results of the 7th Membership Verification, held on 10th May, 2016, BSNLEU is once again granted with the status of the Main Recognised Representative Union. BSNLEU will have this status for a period of three years from today, i.e., 19th May, 2016 to 18th May, 2019. CHQ wishes hearty congrats to all the comrades.<<<Click Here>>>

Granting of facilities to the Recognised Unions.

BSNLEU வெற்றி பெற்று  6-வது முறை அங்கீகாரம். அனைத்து வசதியும் முதன்மை சங்கத்திற்கு வழங்கபடுகிறது .

BSNLEU is recognised as the Main Recognised Representative Union of BSNL. Consequent to this, BSNLEU is granted with facilities, as envisaged in the Recognition Rules.<<<Click Here>>>

Wednesday 18 May 2016

உலக தொலைத் தொடர்பு தின நாள் 17.மே. 2016

D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம்