Monday 30 December 2013

புத்தாண்டு நல் வாழ்த்துகள்-2014

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நாம்  அனைவரும்  2014-ல் மலரும் இனிய  புதிய ஆங்கில புத்தாண்டை இன்றே வரவழைப்போம்.
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்





Sunday 29 December 2013

நூற்றாண்டு காணும் பாம்பன் பாலம்

ஐந்து நாள் கொண்டாட்டம்


பாம்பன்


 டிச.28-
பாம்பன் ரயில்வே பாலத்திற்கு நூற்றாண்டு விழா 2014 பிப்ர வரி மாதம் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.பாம்பன் ரயில் பாலமானது, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு கடற்பகுதிகளில் இந்தியாவோடு இராமேஸ்வரம் தீவை இணைக்கிறது.
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. மேலும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலில் துறைமுக நகரமான தனுஷ்கோடி முற்றிலும் அழிந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தின் சில பகுதிகள் சேதம் மடைந்தன.அத்தருணத்தில் என்ஜினீயர் ஸ்ரீதரன் தலைமையில் அமைக்கப் பட்ட வல்லுனர் குழு சில மாதங் களிலேயே பாலத்தை சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.
பின்னர் 2006ம் ஆண்டு 92 ஆண்டுகள் கழித்து மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பாம்பன் பாலம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியது.இதனால் பாம்பன் பாலத் தில் ரயில் போக்குவரத்து ஒன்றரைஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட் டது.
பின்னர் மீண்டும் 2007ம் ஆண்டு அகல ரயில் பாதையாக பாம்பன் ரயில்வே பாலம் மாற்றப்பட்டு மீண்டும் ரயில்வே போக்கு வரத்து துவங்கியது. பாம்பன் பாலம் கட்டப்பட்டு 1914 ஆண்டுதனுஷ்கோடிக்கு ரயில் போக்கு வரத்து துவங்கப்பட்டது.
நூறாண்டுகள் : பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தெற்கு ரயில்வே பிப்ரவரி 24, 2014 அன்று பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா மண்டபம் மற்றும் பாம்பனில் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ரஸ்தோகி, நூற்றாண்டு விழா நடைபெற உள்ள மண்டபம் மற்றும் பாம்பன் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரம்பரியமான பாம்பன் ரயில்பாலம் பயன்பாட்டிற்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்திற்கு பிப்ரவரி 24, 2014 அன்று நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.பாம்பன் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு தபால் தலை வெளி யிடப்படும்.
மேலும் புகைப்பட கண்காட்சி, மருத்துவ முகாம் என ஐந்து நாட்கள் தொடர்ந்து விழா நடைபெறும்.இதில் பாம்பன் ரயில் பாலத்தை அகலப்பாதையாக மாற்ற முக்கிய காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 1964ல் தனுஷ்கோடியை தாக்கிய புயலில் பாம்பன் பாலம் சேதமடைந்த போது சிறப்பாக சீரமைத்துக் கொடுத்த இன்ஜினியர் ஸ்ரீதரனும் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தமிழக முதல்வரையும், மத்திய ரயில்வே அமைச்சரையும் விழாவிற்கு அழைத்துள்ளோம்.
எனவே பாம்பன் பாலம் நூற்றாண்டு விழா அன்று மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாம்பனில் நூற்றாண்டு நினைவுத் தூணின் அடிக்கல் நடப்படும் என்றார்.


இந்திய மொழி இலக்கியங்களுக்கு மரியாதை இல்லை: இந்திரா பார்த்தசாரதி வருத்தம்

இந்திய மொழி 

இந்திரா பார்த்தசாரதி.


ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியங்கள்தான் உலக அரங்கில் மதிக்கப்படுகிறது. இந்திய மொழி இலக்கியங்களுக்கு மரியாதை இல்லை, அதற்கு தமிழும் விதிவிலக்கல்ல. இதை தலைக்குனிவாகவே கருதுகிறேன் என்றார் முதுபெரும் இலக்கியவாதியும், தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவருமான இந்திரா பார்த்தசாரதி.
கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது:

இப்போது வாசிப்புத் தன்மை குறைந்துவிட்டது. இலக்கியத்துக்கு கடைக்கோடி மரியாதைதான் இருக்கிறது. உலகிலேயே இந்திய மொழிகளுக்கு இலக்கியத்தில் மரியாதையே இல்லை. இந்திய மொழிகளில் ஒரு நூல் அங்கீகாரம் பெறுவதென்றால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது. இந்திய மொழிகளிலும் தமிழ் எழுத்துக்கு உரிய மரியாதை இல்லை. எனக்கு இது ஒரு தலைகுனிவு.

இலக்கியத்துக்கு கோபம் கூடாது, இயல்பு மனிதர்களின் சித்திரமாக இருக்க வேண்டும். அது தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளில் காணப்படுகிறது. கூனன் என்று ஒரு சிறுகதை. உலகப் பெருமை மிக்க சிறுகதையாகவே அதை உணர்ந்தேன். ஏழையைக் கண்டு வருந்துவதைவிட ஏழ்மை குறித்து வருந்துவது கூடுதல் சுமை ஏற்றக்கூடியது. அதுபோன்ற சிறுகதைகளை, நாவல்களை கவனிக்காமல் விட்டது நம் பிழையா?

விரும்பியோ, விரும்பாமலோ சிலரது படைப்புகள் அறியப்படாமலும், அறிமுகப்படுத்தப்படாமலேயும் போய்விடுகிறது. அப்படி கவனிக்கப்படாது நிற்கும் படைப்புகளையும், படைப்பாளிகளையும் இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள்
கவனித்து விஷ்ணுபுரம் விருதை அளிப்பது எனக்கு மட்டுமல்ல; தமிழ் படைப்புலகுக்கே பெருமை தரக்கூடியது.


இந்த விருது, தனிநபர் எழுதிய நாவலின் பெயரில் இருப்பது சிறப்பு. இந்த விருது இயக்கத்தையும், இந்த இலக்கிய வட்டத்தினர் செயல்படுத்தி வரும் வாசிப்பு இயக்கத்தையும் பார்க்கும்போது என் முடிவுக்கு முன்பே வாசிப்புப் பழக்கம் வந்துவிடும் என்று நம்புகிறேன் என்றார் பார்த்தசாரதி.

திறப்பு விழா




மார்ச் 9-ல் வெண்மணி நினைவாலயம் திறப்பு விழா 

 


டிச. 28

கூலிப்போராட்டத்தை மாபெரும்வர்க்கப்போராட்டமாக நடத்தி செங்கொடியை உறுதியுடன் உயர்த்திப்பிடித்த வெண்மணித் தியாகிகளின் மகத்தான தியாகத்தைப் போற்றும் வகையில் கீழவெண்மணி கிராமத்தில் பிரம்மாண்டமாக எழுந்து வரும் வெண்மணி நினைவாலயத்தின் திறப்பு விழாவை 2014, மார்ச் 9 அன்று பிரம்மாண்டமாக நடத்துவது என சிஐடியு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாநிலக்குழு கூட்டம் டிசம்பர் 27 அன்று மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் சென்னையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கரு மலையான், கே.திருச்செல்வன் உட்பட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வெண்மணி நினை வாலயத் திறப்பு விழா குறித்து மேற்கொள் ளப்பட்ட முடிவு வருமாறு;
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தில் நிலப்பிரபுத்துவ, பண்ணை அடி மைத்தனம் மேலாங்கி இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயக்கூலித்தொழிலாளர்களை, சங்க ரீதியாக திரட்டி செங்கொடி இயக்கம் அவர்களது உரிமைகளுக்காகப் போராடியது. அத்தகையப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வுக்காக போராடிய அப்பாவித் தொழிலாளர்களை கொடூரமாக படுகொலை செய்தனர்.
1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு நிலபிரபுக்களின் குண்டர்களால் விவசாயத் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் என 44 பேர் குடிசைக்குள் வைத்து தீயிட்டு கொல்லப்பட்டனர்.நெஞ்சம் பதறும் இந்தக் கொடுஞ்செயலை புரிந்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினர். ஆனால் தீக்கிரையாகிவிட்ட உழைப்பாளிகளின் தியாகம் தமிழக உழைப்பாளி மக்களின்மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் அந்த பகுதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. செங்கொடியின் கீழ் அணிதிரண்ட உழைப்பாளர் கூட்டத்திற்கு முன்னால் நிலப்பிரபுக்களின் கொட்டம் எடுபட வில்லை.
கூனிக்குறுகிக் கிடந்த மக்கள் செங்கொடிஏந்தி அடக்குமுறைக்கு எதிராகத் திரண்டனர். இந்த  ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உழைப் பாளிகளின் உயிர் தியாகம் என்றும் நிலைத்திருக்கும் வகையில் தமிழகத் தொழிலாளர் வர்க்கம் வெண்மணி நினைவாலயத்தை எழுப்பி வருகிறது.இந்த நினைவாலயத்தின் திறப்பு விழா மார்ச் 9 அன்று  நடத்துவது என்றும், இவ்விழாவில் மாநிலம் முழுவதுமிருந்து லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்டுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.










Saturday 28 December 2013

தேசிய போலீஸ் அகாடமியின் 28வது இயக்குநர்

போலீஸ் அகாடமியின்இயக்குநராக முதல் முறையாக பெண் தேர்வு
அருணா பகுகுணா 
புதுதில்லி, டிச. 27-தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக வரலாற்றில் முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் அதிகாரிகள் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பு வகிப்பார். கடந்த 1948ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அகாடமி இந்தியாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையங்களுக்கெல்லாம் தலையானதாக திகழ்கிறது. இதன் இயக்குநராக இருந்த சுபாஷ் கோஸ்வாமி கடந்த மாதம் இந்தியா - திபெத் எல்லை போலீஸ் படையினர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இப்பதவி ஆந்திராவைச் சேர்ந்த அருணா பகுகுணா (56) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1979ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த இவர் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான, மத்திய ரிசர்வ் படையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர், இப்பணியை வகித்து வரும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், ஆந்திர காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் விரைவில் தேசிய போலீஸ் அகாடமியின் 28வது இயக்குநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

தோழர் TSR மறைந்தார்

முதுபெரும் தோழர்   டி.எஸ்.ஆர்  மறைந்தார்

கண்ணீர் அஞ்சலி<<<Click Here>>>

மாவட்ட செயர்குழு கூட்டம்

மாவட்ட செயர்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
 எதிர்வரும் புதிய ஆண்டு ஜனவரி மாதம் காலை (04.01.2014) 10.00 மணிக்கு மாவட்ட செயர்குழு கூட்டம் நமது தொழிற்சங்க அலுவலகத்தில் பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெறவுள்ளது.அனைத்துதோழர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளைச்செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


மாவட்ட செயலர்-தஞ்சாவூர்

MTNL ஊழியர்களுக்கு அரசு ஓய்வூதியம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுற்றறிக்கை எண்:103<<<Click Here>>>

Friday 27 December 2013

முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் - சிறப்பு பகிர்வு

 முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் டிசம்பர் 27 இன்று 
                                                                  தோழர் தாகூர்

தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்ட இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம் .உண்மையில் இதை எழுதிய காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது .அந்த வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை  இயற்றினார் . ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை 'god save the queen' என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள்.தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத'ஸ்டேட்ஸ்மேன்’, 'இங்கிலிஷ்மேன்போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டன.அந்த  கூட்டத்தில் தாகூரே கம்பீரமாக அதைப்பாடினார் .(தாகூர் சிறந்த கவிஞர் மட்டும் அல்ல நல்ல இசை வல்லுனரும் கூட !அவரின் பாடல்கள் இன்று வரை ரவீந்திர சங்கீதத்தில் இசைக்க பட்டு வருகின்றன !). அந்த பாடல் வங்காளி மொழியில் எழுதப்பட்டாலும் சாது பாஷா எனும் சமஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயின்று வருகிற நடையில் அப்பாடல் எழுதப்பட்டது .இந்த பாடலை பாடியவாறே விடுதலை போராட்ட வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் ! அதனால் , இந்த பாடலை பாடுவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது . இந்த பாடலை 1919 இல் ஜேம்ஸ் கசின்ஸ் எனும் ஐரிஷ் கவிஞர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளி பெசன்ட் தியோசபிக்கல்  கல்லூரியில் பாடினார்.அதை தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் பிரார்த்தனை பாடலாக பட ஆரம்பித்து விட,தாகூர் அந்த பாடலை தானே ஆங்கிலத்தில் "The Morning song of india "என்கிற பெயரில் மொழிபெயர்த்து ,ஜேம்ஸ் கசின்சின் மனைவுடன் இணைந்து இசையும் அமைத்தார் .தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட  இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது .ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமானது .




சுனாமி: கற்றதும், பெற்றதும்

இதயத்தின் ஆழத்தில் பதிந்த சோகதினம் டிசம்பர்-26


இந்த மலர்களுக்குஅனைவராலும் ஏற்றப்பட்ட கடற்கரை தீபம் ஒளி
















பிஞ்சு குழந்தையின் தவிப்பு முகம்

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பூகம்பத்தால் உண்டான சுனாமி, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. சுனாமியின் மூலம் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்ன, பெற்றிருக்கும் விஷயங்கள் என்ன?

ஐக்கிய நாடுகளின் உலக பேரி டர் தடுப்பு மையம், சுனாமியை எதிர்கொள்வதற்கான 10 அம்ச திட்டங்களை அறிவுறுத்தியிருக் கின்றது. அவை வருமாறு:

12 நாடுகளை நேரடியாக தாக்கியது. 39 நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற மக்களும் சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். இயற்கைப் பேரிடர் உலகின் எந்தப் பகுதியில் நிகழ்ந்தாலும் அதன் விளைவுகள், கண்டங்களைத் தாண்டி பரவக்கூடியதாக இருக்கின் றன.

கடலோரப் பகுதிகளை பாதுகாப் பதில் இன்னமும் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. 300 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் கடலோரப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர். அரசு இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறதோ அந்த அளவுக்கு உயிர்ச்சேதம் குறையும்.

தாய்லாந்தில் கடல் திடீரென்று உள்வாங்கியதைப் பார்த்த, பழங்குடி இனத்தின் தலைவர், அவரது இனமக்களை மலையின் உச்சிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக் கிறார். இதனால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1800 பேர் உயிர் பிழைத்தனர். இதேபோல் இன்னொரு சம்பவமும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தி லிருந்து 100 சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். இவர்களில் பத்து வயதுச் சிறுமியும் ஒருவர். அவர் தன்னுடைய புவியியல் பாடத்தில் படித்ததைக் கொண்டு, சுனாமி ஏற்படுவதற்கு முன், கடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டிருக்கிறாள். ஏதோ அசம்பா விதம் ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்து தன்னுடன் வந்திருந்தவர்களை எச்சரித்தி ருக்கிறாள். அதனால் அந்த 100 சுற்றுலாப் பயணிகள் உயிர் பிழைத்திருக்கின்றனர்.

பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கருவி களை இந்தியப் பெருங்கடல் பகுதியில் பொருத்தியிருந்தால், இந்தப் பேரழிவின் கோரத்தை குறைத்தி ருக்கலாமோ என்ற எண்ணம், அதன்பின்தான் எழுந்தது.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அண்டை நாடுகள் தாராளமாக உதவிக் கரம் நீட்டு கின்றன. இது ஆரோக்கியமான செயல்தான். அதேசமயத்தில் பேரிடர் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் விஷயத்திலும் அண்டை நாடுகள் பெரிய மனதோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஞ்ஞானிகள், அரசியல் தலை வர்கள், தன்னார்வ அமைப்பினர், பத்திரிகை, ஊடகவியலாளர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும்.

கடற்கரை ஓரங்களில் பொழுது போக்கு பூங்காக்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை அமைப்ப தற்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது. அரசு இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் பெருமளவு உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கலாம்.

உலகம் முழுவதும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி) சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக்காக வழங்கப் பட்டன. இதில் 10 சதவீதமாவது பேரிடர் கண்காணிப்புச் சாதனங்க ளைப் பொருத்துவதற்காக செல விடப்பட்டால், எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர்களைத் தவிர்க்க லாம்.

பேரிடர் செலவுகள், பேரிடர் மேலாண்மைக்கான நிதிகளை ஒவ்வொரு நாட்டு அரசும் அதன் ஆண்டு நிதிநிலை அறிக்கையி லேயே ஒதுக்க வேண்டும். அரசு அமைப்புகளையும் தன்னார்வ அமைப்புகளையும் இதற்கான பணிகளில் ஒருங்கே இடம்பெறச் செய்யவேண்டும்.
பேரிடர் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு குறித்தும் மக்கள் தொடர்புச் சாதனங்களின் வழியாக அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளி லேயே பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த பாடங்களும், வகுப்புகளும் செய்முறைப் பயிற்சிகளும் இடம்பெறவேண்டும்.


தொடர்புடையவை



Special CL For Seminar on 07-01-2014

சிறப்பு கருத்தரங்கம் விடுப்பிற்கான உத்தரவு:-<<<Click Here>>>

Thursday 26 December 2013

தஞ்சை மாவட்டத்தின் வீர வணக்கம்

45ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தின் வீர வணக்கம் 





ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் வீரத் தியாக பூமி யாம் கீழவெண்மணியில் நிலச்சுவான்தார்களுக்கு எதிராகச் செங்கொடி ஏந்திப் போரா டிய தலித் விவசாயத் தொழி லாளர்கள் 44 பேர், 1968 ஆம் ஆண்டு, டிசம்பர் 25 ஆம் நாள், ஆதிக்கக் கொடியவர்களால் ஒரே குடிசையில் வைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.
அந்த வீரத் தியாகிகளின் 45ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதன்கிழமை காலை 10 மணிக்கு, வெண்மணிதியாகிகள் நினைவுத் திடலில் அஞ்சலி நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்றன. தலை வர்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.நிகழ்ச்சிகளுக்கு சி.பி.எம்.மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வாழ்த்துமுழக்கங்கள் ஓங்கி ஒலிக்க,கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபியில், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழுஉறுப்பினர்கள் கே.பாலகிருஷ் ணன்,எம்.எல்.ஏ., அ.சவுந்தரரா சன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர்,எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.மணி, சி.ஐ.டி.யு. மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,வி.தொ.ச.அகில இந்தியத் துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரி முத்து, நாகைமாலி,எம்.எல்.ஏ., திருவாரூர் மாவட்டச் செயலா ளர் ஐ.வி.நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சி.பி.ஐ.மாநிலத் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினரும் சி.பி.ஐ. நாகை மாவட்டச் செயலாளருமான எம்.செல்வராஜ், சி.பி.ஐ. திருவா ரூர் மாவட்டச் செயலாளர் வெ.வீரசேனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தலைவர் கள் தியாகிகள் நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத் தினர்.நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சார்பில் ஏராள மானோர் வீர வணக்கம் செலுத் தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்பட ஏராளமான மாணவர்கள் மற்றும் இளை ஞர்களும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.காத்தமுத்து நன்றி கூறினார். (ந.நி)



Wednesday 25 December 2013

வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்!வெண்மணி தியாகிகள்

வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்!


டிசம்பர் 25, 2013. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டத்தில், குறிப்பாக கிழக்கு தஞ்சையில் பெரும்பகுதியாக இருந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவான்தாரர்களால் விலங்கு களிலும் இழிவாக நடத்தப்பட்டனர்.
சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. செங்கொடி இயக்கம்தான் அவர்களை தலைநிமிர வைத்தது. தோழர் பி.சீனிவாசராவ் உள்ளிட்ட பொதுவுடமை இயக்க தலைவர்கள் வலுவான போராட்டங்களை நடத்தினர். கூலி உயர்வுக்காக மட்டுமின்றி, சமூக நீதிக்காகவும் சமரசமற்ற போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் வயல்களில் குனிந்தே கிடந்த சேற்று மனிதர்கள் தலைநிமிர்ந்தார்கள். ஆனால் இதனை ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்திருந்தனர்.அவர்கள் நடத்திய கோரத் தாண்டவம்தான் இன்றளவும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் வெண்மணியில் பற்றவைக்கப்பட்ட நெருப்பாகும்.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர் பகுதிகளில்) விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்தலைமையில் போராடினார்கள்.
பேச்சு வார்த்தை மூலம் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் (நிலச்சுவான்தார்கள் சங்கம்) குண்டர்கள் வெண்மணி கிராமத்திலுள்ள விவசாயத்தொழிலாளர்/தலித் மக்களை கொடூரமாகத் தாக்கினர். தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத 44 தலித் மக் கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராமையாவின் குடிசைக்குள் நுழைந்தனர். நிலச் சுவான்தாரின் குண்டர்கள் அந்த குடிசைக்கு வெளியில் தாளிட்டு, குடிசைக்கு தீயிட்டு 44 பேரையும் கோரமாக உயிரோடு கொளுத்தினர். அந்த நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெண்மணி வீரவணக்க நாளாக அனுஷ்டித்து வருகிறது. வெண்மணியில் தலித் மக்களை தாக்குகிற போது, இங்கு பறந்து கொண்டிருக்கும் செங்கொடியை இறக்கி விட்டு நெல் உற்பத்தி யாளர்கள் சங்கக்கொடியை ஏற்றினால் நீங்கள் கேட்கும் கூலியைத் தருகிறோம் என நிலச்சுவான்தார்களின் குண்டர்கள் மிரட் டினார்கள்.
எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை தலித் மக்கள் மனிதர்களாக நிமிர்ந்து வாழ, தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராடிய இந்த செங்கொடியை இறக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லைஎன தலித் மக்கள் உறுதியாக நின்றனர். இதற்குப் பிறகுதான் அந்த கோரச் சம்பவத்தை கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நிலச்சுவான்தார்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் அரங்கேற் றினார்கள். வெண்மணி கிராமம் உள்ளிட்டு, நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அக்காலத்தில் நடந்த போராட்டம் கூலி உயர்வுக்காக மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவச்சுரண்டலுக்கும், தீண்டாமை ஒழிப்புக்குமான போராட்டமாகத்தான் அது நடந்தது. நிலச்சுவான்தார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தையும் அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தோழர் மைதிலி சிவராமன் 1970-ஆம் ஆண்டு கீழத்தஞ்சையில் தலித் விவ சாயத் தொழிலாளர்களையும், சில மிராசு தாரர்களையும் பேட்டி கண்டு எழுதிய கட்டு ரையில் வெண்மணி தலித் மக்கள் மீது நிலச்சுவான்தார்கள் தொடுத்த தாக்குதலின் பின்னணியை தெளிவாகக் கொண்டு வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் அமைதியாக இருந்தது. விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாகத்தான் உழைத்து வந்தார்கள். என் வீட்டிற்கு கொல்லைப்புறமாக வந்து எங்களோடு அச்சத்தோடு பேசி வந்த விவசாயத் தொழிலாளர்கள் தற்போது செருப்பணிந்து வீட்டிற்கு முன் புறமாக வந்து நிற்கிறார்கள். சரியாக மாலை 5 1/2 மணிக்கு எங்கள் தலைவர் பேசுகிறார், கூட்டம் நடைபெறுகிறது, நாங்கள் செல்கிறோம் என்று சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள்.என்னுடைய வீட்டிற்கு அருகாமையிலேயே செங் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கூட்டம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஆணவம் வந்து விட்டது. எங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான்” - என தோழர் மைதிலி சிவராமனிடம் வெண்மணிக்கு அருகிலுள்ள ஆலத்தம்பாடி கிராமத்தைச் சார்ந்த ஒரு மிராசுதாரர் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
ஆணவம் தலித் மக்களுக்கு அல்ல, நிலச் சுவான்தார்களுக்குதான் என்பது மேற்கண்ட பேட்டியில் தெளிவாகிறது.மேற்கண்ட நிலச்சுவான்தார் அளித்த பேட்டியிலிருந்தே வெண்மணி மக்கள் மீதான தாக்குதலுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். 1940-களில் துவங்கி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒட்டுமொத்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடி வருகிறது. சாதிக் கொடுமைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற வீரமிக்க இயக்கத்தை ஒடுக்க வேண்டுமென்பதே நிலச்சுவான்தார்களின் நோக்கம். நிலச்சுவான்தார்களின் நலன் களுக்கு ஆதரவாக நின்ற அன்றைய மாநில அரசு, இத்தகைய தாக்குதலைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கவில்லை. வெண்மணியில் தலித் மக்களை தாக்கி உயிரோடு கொளுத்தினால் செங் கொடி இயக்கம் அழிந்து விடும் என நிலச் சுவான்தார்கள் மனப்பால் குடித்தார்கள்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், செங்கொடி இயக்கமும் முன்பைவிட முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வெண் மணித் தீயில் வெந்த அந்த 44 கண்மணிகள் தீண்டாமை ஒழிப்புக்கான/ நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் தியாகிகள் ஆனார்கள். இன்றும் தமிழகத்தில் ஏன் நாடு முழுவதும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், தீண்டாமைக் கொடுமையும் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன.தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து போராடியதால்தான் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் ஓரளவு உரிமைகளை பெற முடிந்தது. வர்க்க ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டதால்தான் அது சாத்தியமானது. ஆனால் இன்றைக்கு தலித் மக்களுக்கு எதிராக சில சாதி சங்கத்தலைவர்கள் அணிதிரளும் அவலக் காட் சியை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக, எளியமக்களை சாதியின் பெயரால் மோத விடும் சதி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
கிராமப்புறங்களில் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. விவசாயம் நலிந்து ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புக்காக நகரங் களை நோக்கி குடிபெயர்ந்து செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்து மக் கள் தொகையில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களில் பாதிப்பேர் தலித் மக்கள். மீதி பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதி வித்தியாசம் இல்லாமல் விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தீண்டாமை ஒழிப்புக்காக, நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக போராட வெண்மணி தினத்தில் சூளுரைப்போம்.
நன்றி தீக்கதிர்





சுற்றறிக்கை எண்:102

மாறியுள்ள சூழ்நிலையில் தேசிய கவுன்சில்<<<Click Here>>>