’SERVICE WITH A SMILE’ (SWAS)- வெற்றிகரமாக்குவோம் 100 நாள் திட்டத்தை...<<<Click Here>>>
Thursday 31 December 2015
Wednesday 30 December 2015
2016- புத்தாண்டு வாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை
தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை
Tuesday 29 December 2015
மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி
24-12-2015 அன்று மறைந்த குஜராத் மாநில முன்னாள் செயலாளர் தோழர்A.C.ஷா, 23.12.2015 அன்று மறைந்த கர்நாடக மாநில CITU பொது செயலாளர் தோழர் பிரசன்ன குமார் மற்றும் 27.12.2015 அன்று மறைந்த BSNL ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் தோழர் P.ஜேசுதுரை ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலி.<<<Click Here>>>
தினமணி செய்தி
வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்: 20 நாள்களில் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை<<<Click Here>>>
சுற்றறிக்கை எண்:87
மத்திய அரசே ஓய்வூதியதாரர்க்கு 78.2% IDA இணைப்பை உடனே வழங்கு! தமிழகம் முழுவதும் சக்தியான ஆர்ப்பாட்டம்.<<<Click Here>>>
Wednesday 23 December 2015
அனைவர்க்கும் BSNLEU தஞ்சை மாவட்ட சங்கத்தின் மிலாடி நபி மற்றும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை
Sunday 20 December 2015
Saturday 19 December 2015
புகைப்படங்கள்-2
விழுப்புரம் மாவட்டம் T.குமாரமங்கலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..<<<Click Here>>>
புகைப்படங்கள்-1
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..<<<Click Here>>>
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி நமது மத்திய சங்கம்
தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நமது பொது செயலாளர் CMD BSNLக்கு எழுதிய கடித்த்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது<<<Click Here>>>
Thursday 17 December 2015
FORUM முடிவுகள்
ஓய்வூதியதாரர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் BSNLஐ பலப்படுத்த "SERVICE WITH SMILE" என்கின்ற 100 நாட்கள் திட்டம்- அகில இந்திய FORUM முடிவு.<<<Click Here>>>
சமூக கடமையில் நாம் ……
தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..<<<Click Here>>>
Tuesday 15 December 2015
Friday 11 December 2015
சுற்றறிக்கை எண்:81
புதுடில்லி – 24-25, நவம்பர் 2015 – மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள்<<<Click Here>>>
Wednesday 9 December 2015
சென்னை வெள்ளத்தில் BSNL ஊழியர் மரணம்
சென்னை தொலைபேசி, கணேஷ் நகர் தொலைபேசியக BSNL ஊழியர் சங்க கிளைத் தலைவர் தோழர். ஜி. தெய்வசிகாமணி TM சென்னை வெள்ளத்தால் மரணமடைந்தார்.<<<Click Here>>>
CMD BSNL உடன் தமிழ் மாநில FORUM தலைவர்கள் அளித்த மனு
09.12.2015 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் CMD BSNL அவர்களிடம் தமிழக FORUM சார்பாக வழங்கிய மனு<<<Click Here>>>
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு .....
சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு நிவாரணம், வெள்ள முன்பணம், GPF மற்றும் சிறப்பு விடுப்பு கோரி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு FORUM சார்பாக கொடுக்கப்பட்டகடிதம்<<<ClickHere>>>
கடலூரில் உதவிகரம் புரிந்த தஞ்சை BSNL சக.... தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் நெஞ்சம் நிரைந்த நன்றிகள் வார்த்தைகள் இல்லை .....
மழை ,வெள்ளம் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள்...
பொதுத்துறை BSNL வழக்கம்போல் தன்னுடைய சேவையை தொடர்ந்து தந்தது,நான் வசிக்கும் தெருவில் தொடர்பில் இருந்த,மற்றவர்களை தொடர்பில் வைத்திருக்க,கிட்டதட்ட 15குடும்பம் தினசரி என் வீட்டிற்க்கு வந்து அவர்களது சொந்த பந்தங்களுடன் பேசவும்,என் குடும்பத்துடன் மேலும் நெருக்கமாகவும்,வெள்ள நிவாரண பணிகளை தண்ணீர் சூழ விட்டில் இருந்தபடி ஒருங்கினைக்க பேருதவியாக இருந்த, இருக்கும் BSNL வாழ்க!!!
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் சேவைகள் மிக மோசமாக உள்ளது: தனியார் டெலிகாம் நிறுவனங்கள் குறித்து அரசு அதிருப்தி
Ravi shankar prasad Telecom Minister |
Tuesday 8 December 2015
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே
சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான இக்கட்டான நேரத்தில் தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது BSNL<<<Click Here>>>
Monday 7 December 2015
Saturday 5 December 2015
Dr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள்
வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றுக் காலமாகவே விளங்குகிறார் அம்பேத்கர்.அன்னாரின் 125 வது பிறந்த நாள்.
Thursday 3 December 2015
IDA
01/01/2016 முதல் IDA உயர்வு 3.5% இல் இருந்து 5% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Tuesday 1 December 2015
BSNL to provide Wi-Fi services at all 125 airports.
The Airports Authority of India has decided to permit BSNL to provide Wi-Fi service in all its 125 airports. The installation of Wi-Fi services is a major shift by AAI as majority of airports presently do not provide Wi-Fi services. In the first stage, BSNL will be allowed to provide Wi-Fi service at those airports where presently there are no Wi-Fi services. With respect to Wi-Fi rates, BSNL will be asked to charge the rates provided by ministry of civil aviation (MoCA).
Monday 30 November 2015
Thursday 26 November 2015
Saturday 21 November 2015
Thursday 19 November 2015
Wednesday 18 November 2015
Tuesday 17 November 2015
மனித நேயத்துடன் உதவிட மாநில சங்க வேண்டுகோள்
சமீபத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, உடைமைகளைஇழந்துதவிப்பதைஅனைவரும்அறிவோம். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .
மனித நேயத்துடன், துயர் துடைக்க,நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு விரைந்து அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது .
கிளைச் சங்கங்கள் உடனடியாக இந்த பணியை செய்திட வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிகிறேன்.
மனித நேயத்துடன், துயர் துடைக்க,நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு விரைந்து அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது .
கிளைச் சங்கங்கள் உடனடியாக இந்த பணியை செய்திட வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிகிறேன்.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Monday 16 November 2015
Friday 13 November 2015
Wednesday 11 November 2015
Monday 9 November 2015
மத்திய சங்க செய்திகள்
இந்த மாத GPF மற்றும் Festival Advanceபட்டுவாடாவிற்குதேவையான நிதியை உடனடியாக வழங்க, GM (CA ) அவர்களை 04.11.2015 அன்று, நேரில் சந்தித்து நமது பொது செயலர்,தோழர். P . அபிமன்யூ வலியுறித்தியுள்ளார்.
விடுபட்ட Casual Labourers தோழர்களை நிரந்தர படுத்த வலியுறுத்தி, BSNLEU - BSNLCCWF சங்கங்கள் சார்பாக கூட்டாக, நமது தலைவர்கள் CMD ஐ, 04.11.2015 அன்று நேரில் சந்தித்து வலியுறித்தியுள்னர்.
பதவிகள் பெயர் மாற்ற உத்தரவை விரைந்து வெளியிட, 04.11.2015 அன்று GM (Restg) அவர்களை நேரில் சந்தித்து நமது பொது செயலர் வலியுறித்தியுள்ளார்.
குறிப்பாக TTA தோழர்களுக்கு JE பெயர் வழங்க தேவையான ஆவணங்கள், ஆதாரங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.
அதே போல், NE11சம்பள விகிதத்திற்கு கிழ் உள்ள Sr.TOA தோழர்களின் பெயர் மாற்றத்திலும் சிறு அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, 03.11.2015 அன்று CMD அவர்களையும் சந்தித்து இதே கோரிக்கையை முன் வைத்தார். CMD சாதக முடிவு எடுப்பதாக உறுதி கூறி உள்ளார்.
திரு.ராகேஷ் குமார் மிட்டல் புதிய Director (CM ) ஆக நியமிக்க பட்டுள்ளார். BSNL புத்தாக்கத்திற்கு, இந்த நியமனம் உதவும் என நாம் நம்புகிறோம்.
NEPP பதவி உயர்வில், 01.10.2000 முதல் 01.10.2004 வரை வழங்கபட்ட TM , TTA போன்ற பதவி அடிப்படையிலான பதவி உயர்வை, NEPP பதவி உயர்வாக கருத கூடாது என வலியுறுத்தி மனிதவள இயக்குனருக்கு 03.11.2015 அன்று நமது மத்திய சங்கம் கடிதம் மீண்டும் எழுதியுள்ளது.
JAO ஆளெடுப்பு விதியில் நாம் கடுமையாக வலியுறுத்தி வந்த சேவை காலம் குறைப்பு கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
ஆம், 30.10.2015 அன்று வெளியிடப்பட்ட, திருத்த விதிகளில், 10 வருட சேவை காலம் என்பது 5 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 5 வருடம் Gr .C சேவை முடித்த தோழர்கள் JAO இலாக்கா போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.
BSNL கேபிள்களை நாடு முழுவதும் NHAI, PWD, EB போன்ற அரசு நிறுவனங்கள் சேத படுத்துவதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் SC / ST / OBC பிரிவுகளில் காலியாக உள்ள TTA நேரடி நியமன பணியிடங்களை நிரப்ப கார்ப்ரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. SC - 25, ST - 77, OBC 45 என மொத்தம் 147 இடங்கள் உள்ளது.
தமிழ் மாநிலத்தில் காலி இடங்கள் இல்லை. ஆனால், சென்னை தொலைபேசி மாநில செங்கல்பட்டு மாவட்டத்தில் OBC பிரிவில் 4 இடங்கள் உள்ளது.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Saturday 7 November 2015
Friday 6 November 2015
ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் ஆர்ப்பாட்டம் 07.11.2015
*** போனஸ் ஆர்ப்பாட்டம்***
TNTCWU தஞ்சை மாவட்டம்
|
தோழர்களே ! தோழியர்களே !
ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் ஆர்ப்பாட்டம் 07.11.2015 அன்று காலை 10.00 மணியளவில் பாலாஜி நகர் GM அலுவலகம் முன்பு நடைபெறும் அணைத்து தோழர்களும் தோழியர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
TNTCWU BSNLEU
ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர்
தஞ்சை
Tuesday 3 November 2015
Monday 2 November 2015
மத்திய சங்க செய்திகள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஒப்பந்ததாரர் மூலம் அடையாள அட்டை, EPF அட்டை, ESI மருத்துவ அட்டை போன்றவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, டில்லி தலைமையகம், அனைத்து மாநில பொது மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா வங்கி அல்லது காசோலை மூலம் தான் செய்ய பட வேண்டும் என வலியுறுத்தி, மாநில நிர்வாகங்களுக்கு கார்பரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், ஊழியர் பிரிதிநிதி சங்கம் சார்பாக பங்கு பெறுவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை நிர்வாகம் பிறப்பித்தது. இதை நமது மத்திய சங்கம் கடுமையாக எதிர்த்தது . நமது எதிர்ப்புக்கு அடி பனிந்து விதிகளை தளர்த்தி 23.10.2015 அன்று கார்ப்ரேட் நிர்வாகம் மறுஉத்தரவு வெளியிட்டுள்ளது.
TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும் கார்ப்ரேட்அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கருணை அடிப்படையிலான பனி நியமன விண்ணப்பங்களை பரிசிலிக்கும் போது , இலாக்கா பனி விபத்துகளால் உயிர் நீத்த தோழர்களின் விண்ணப்பங்களை புள்ளி அடிப்படையில் நிராகரிக்க கூடாது என மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Saturday 31 October 2015
Friday 30 October 2015
TH தேதிகள் மாற்றம்
தீபாவளி மற்றும் மிலாடி நபி ஆகிய பண்டிகை நாட்களுக்கான விடுமுறை தேதிகள் மாற்றப்பட்டுள்ளன<<<Click Here>>>
Thursday 29 October 2015
மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
மனதைப் புரிந்து கொள் | மகிழ்ச்சியாக வாழ்
ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.
“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்
“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்
“அப்படியா சொல்கிறீர்கள்?“
“ஆமாம்!”
“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”
“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”
“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -
“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,
இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.
எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”
ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.
“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்
“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்
“அப்படியா சொல்கிறீர்கள்?“
“ஆமாம்!”
“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”
“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”
“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -
“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,
இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.
எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”
Wednesday 28 October 2015
மத்திய சங்க செய்திகள்
1.மாறுதல் கொள்கையில்(TransferPolicy) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம் .
2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாகவிடுப்புஎடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .இந்தமாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது .
3. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது செப்டம்பர் மாதம் 1 லட்சம்சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .
4. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக வழங்கவேண்டும் என நமது பொதுசெயலர் தோழர்அபிமன்யுஅவர்கள் GM(T&BFCI),அவர்களை சந்தித்து பேசியுள்ளார் .உரிய நிதி ஒதுக்கீடு தமிழ்மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .
5. ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாதஊதியத்தை ரூ.10,000 லிருந்துரூ.21,000மாக உயர்த்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும்.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Tuesday 27 October 2015
GPF பட்டுவாடா
நமது மத்திய, மாநில சங்கங்களின் தொடர் முயற்சியின்பலனாக, GPF பட்டுவாடா 27/10/2015 அன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடுமையான முயற்சிகள் செய்த மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது நன்றிகள்.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Subscribe to:
Posts (Atom)