Monday 28 September 2015

விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மன்னையில்

BSNL ஊழியர் சங்கம்  தஞ்சை மாவட்டம்  

30.09.2015 புதன் கிழமை 10.00 மணியளவில் மன்னார்குடி, M.N.S.மஹாலில் BSNLEU தஞ்சை மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெறும் .அனைத்து  தோழர்களும் தோழியர்களும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் .

                                                                                                       தோழமையுடன்,
                                                                             D.சுப்ரமணியன்
                                                                                 BSNLEU மாவட்ட செயலாளர் ,தஞ்சை

சுற்றறிக்கை எண்:68

தற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு<<<Click Here>>

Thursday 24 September 2015

பணி நிறைவு பாராட்டு விழா




     பணி நிறைவு பாராட்டு விழா
KR.BASKARAN.TM(O)-MNG
நாள் :30.09.2015 புதன் கிழமை  மாலை 3.30 மணி
இடம்: M.N.S. திருமண அரங்கம் மன்னார்குடி 


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே! வணக்கம்

                          நம்முடன் பணிபுரிந்த தோழர் KR.பாஸ்கரன் அவர்கள் கடந்த 40 ஆண்டுகாலமாக  தந்தி துறையிலும் ,BSNL துறையிலும் பணிபுரிந்து  ஓய்வு பெற்று உள்ளார் .அவர் நம் சங்கத்தில் தொடர்ந்து பல பொறுப்புகள் வகித்து அவரை நாம் அனைவரும் பாராட்டும் விதமாக 30.09.2015 புதன் கிழமை மாலை 3-30 மணியளவில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு அனைவரும் வருகைதந்து வழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்த்துகளுடன்....
தஞ்சை மாவட்ட BSNLEU சங்கம் 




Wednesday 23 September 2015

அனைவருக்கும் இனிய "ஈகை பெருநாள்" நல்வாழ்த்துக்கள்

அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதிரிகளுக்கும் ,  "பக்ரீத் பெருநாள்" வாழ்த்துக்கள் ....

தஞ்சை BSNLEU மாவட்ட செயலர் 
D.சுப்ரமணியன் 

Tuesday 22 September 2015

Monday 21 September 2015

"யூனியன் பேங்க் ஆப் இந்தியா"



அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
நமது BSNL ஊழியர்கள் நலன் கருதி

BSNL சொசைட்டி,கனரா வங்கி, மற்றும் இந்தியன் வங்கி , ஆகிய இடங்களில் பெற்றுருக்கும் கடன் தொகையை அடைப்பதற்கு ஒரு அறியவாய்ப்பாக தஞ்சாவூர் "யூனியன் பேங்க் ஆப் இந்தியா"முழு தொகையையும் கடன் தர முன்வந்துள்ளது. "யூனியன் பேங்க் ஆப் இந்தியா"AGM - அவர்களிடம் 18.09.2015 அன்று பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது தஞ்சை மாவட்டம் BSNLEU சங்கம் மனதார பாராட்டுகளை  தெரிவித்துகொள்கிறோம்.


குறிப்பு:பேங்க்மேனேஜர் அவர்களை அணுகும்போது அந்தமாதத்திற்கான PAY SLIP எடுத்து செல்லவும்

BSNLEUமாவட்ட செயலர்  D.சுப்ரமணியன். 

சுற்றறிக்கை எண்:67

JTO தேர்வு விதி திருத்தங்களுக்கு இயக்குனர் குழு ஒப்புதல் மற்றும் சில செய்திகள்<<<Click Here>>>

Saturday 19 September 2015

Tamilnadu BSNL LIFE TIME PLAN


"புதிய வசந்தம் பிளான் அறிமுகம் 17.09.2015முதல்" 

TAMILNADU BSNL "NEW VASANTHAM" LIFE TIME PLAN....

(Night 9PM to 7AM BSNL network call charges only @ 20paise/minute)<<<Click Here>>>

சுற்றறிக்கை எண் 66

மாநிலச் செயலக கூட்டம் 18.09.2015 அன்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்<<<Click Here>>>

Thursday 17 September 2015

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ....

விநாயகர் சதுர்த்தி....

பெரியார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தமிழகத்தில் தர்ணா-2

துணை டவர் நிறுவனம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தமிழகம் முழுவதும் 16.09.2015 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் ஒரு சில காட்சிகள்-2<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:65

கேரளாவில் இருந்து CSS ராவ் வெளியேற்றம்!!!<<<Click >>>

CGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா

சென்னை CGM அலுவலகத்தில் 16.09.2015 அன்று துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து FORUM சார்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள்.<<<Click Here>>>

தமிழகத்தில் தர்ணா

16.09.2015 அன்று துணை டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் ஒரு சில காட்சிகள்<<<Click Here>>>

Wednesday 16 September 2015

16.09.2015 - தஞ்சையில் இன்று ஒன்று இணைந்து மாபெரும் துணை டவர் நிறுவனம் அமைக்காதே.... தர்ணா...போராட்டம்

 தஞ்சை மேரீஸ் கார்னர்   CTMX அலுவலகத்தின் முன்பு நடைப்பெற்ற தர்ணா  போராட்டத்தில் சில காட்சிகள்









ஈரோடு நகரத்தின் வீட்டு வாடகைப்படி உயர்வு

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்காக நகரங்களை தரம் உயர்த்துவதற்கான உத்தரவை BSNL கார்ப்பரேட் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நமது தமிழகத்தில் உள்ள ஈரோடு நகரம் ‘Y’ பிரிவு நகரமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு நகரப் பகுதியில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி 01.04.2015 முதல் 20% ஆக உயர்ந்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுற்றறிக்கை எண்:64

JTO தேர்வு மற்றும் பயிற்சி தொடர்பாக….<<<Click Here>>>

சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கேரள மாநில BSNLல் நடைபெற்று வரும் காட்டாட்சி தர்பாரை கண்டித்து சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு BSNLEU, SNEA(I) மற்றும் TNTCWU மாநில சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டக் கூட்டத்தின் சில காட்சிகள்<<<Click Here>>>

Monday 14 September 2015

செப்டம்பர் 22-ல் ஆர்ப்பாட்டம்

சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,சொசைட்டி நிலத்தை நிலமாகவே பிரித்துத்தரக் கோரியும் செப்டம்பர் 15-ல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்…அகில இந்திய Forumத்தின் செப்டம்பர் 16 தார்ணா போராட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அனைத்து கிளைகளிலும் வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டுகிறோம்.<<<Click Here>>>

16.09.2015 - தஞ்சையில் ஒன்று இணைந்து மாபெரும் துணை டவர் நிறுவனம் அமைக்காதே.... தர்ணா...


அன்பார்ந்த தோழர்களே,தோழியர்களே!

                          தஞ்சையில் 16.09.2015 அன்று மாபெரும் தர்ணா காலை 10.00 மணியளவில்  மேரீஸ்  கார்னர் அலுவலகத்தில் நடைபெறும்.அணைத்து சங்கங்களும்  ஒன்று இணைந்து இந்த தர்ணாவை பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் அனைத்து தோழர்களையும் கேட்டுக்கொள்கிறது.

வாழ்த்துக்களுடன்,
தோழமையுடன் 
D.சுப்ரமணியன்
தஞ்சை BSNLEU மாவட்ட செயலர்  

BSNLEU-SNEA-AIBSNLEA-AIBSNLOA-SNATTA-TSOA-AIGETOA

Wednesday 9 September 2015

16.09.2015 - தர்ணா

Forum சார்பாக 16.09.2015 அன்று நடைபெற இருக்கிற மாபெரும் தர்ணா போராட்டத்திற்கான சுற்றறிக்கை<<<Click Here>>>

Saturday 5 September 2015

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கோகுலாஷ்டமி 

அன்னை தெரசா நினைவு நாள் 

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் 

Friday 4 September 2015

சென்னை சொசைட்டி

சென்னை சொசைட்டி  இன்று தனது சங்க கட்டுபாட்டுக்குள்  வந்து விட்டது என்று ஆணவத்தில் NFTE சங்கம் தனது வெப்சைட்டில்  10-லட்சம் கடன் என்றால் 8000 - பேர் கையெழுத்திடுவார்கள்  என்று அங்கத்தினர்களை  கேவலப்படுத்திருக்கிறது.

இந்தியாவில் பெரிய வங்கிகள் எல்லாம் தனது வட்டி விகிதத்தை 1/2 சதம் குறைத்தபோது சென்னை சொசைட்டியில் மட்டும் 1 -1/2 சதம் உயர்த்தியது  தவறு  என்பதை தான் நாம் சுட்டி காட்டினோம்  அதை எதிர்த்து இயக்கம் நடத்திகிறோம் அதை கொச்சை படுத்துவது மட்டுமல்லாமல்,இந்த கொள்ளையை நியாயப்படுத்துவது.வட்டி சதமானத்தை  அதிகரித்தால்தான்  உறுப்பினர்கள்  கடன் வாங்க மாட்டார்கள் என்று சொல்பவர்கள்  அந்த மனநிலைமையை  ஊழியர்கள் அடைவதற்கான முயற்ச்சி என்பதெல்லாம்  ஆடுநனைகின்றதே என்று  நரி கவலைப்பட்ட  கதை தான்” என்பது ஊழியர்கள்  உணர்வார்கள்.தஞ்சையில் மட்டும் இரண்டு  NFTEவெப்சைட்டுகளை வைத்துக்கொண்டு  இரு மாறுபட்ட கருத்தை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தொழிற் சங்க அழகைப்பற்றி எல்லாம் பேசுவது  சாத்தான் வேதம் ஓதும் கதைதான்.

D.சுப்ரமணியன் 
தஞ்சை BSNLEUமாவட்ட செயலர் 

Thursday 3 September 2015

BSNL IDA Rates of October 2015 going to Record a New Increase.

BSNL IDA Rates of October 2015 going to Record a New Increase.<<<Click Here>>>

பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் .

அன்பார்ந்த தோழர்கள் ! தோழியர்கள் !


                                                 தஞ்சை SSA-வில் 33-சதமான  ஊழியர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில்  பங்கு பெற்றனர் .  அதில் BSNLEU சங்கத்தை சேர்ந்தவர்கள்  95-சதமாகும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்களுக்கு BSNLEU சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .யாரோ போராடி அனைத்து சலுகைகளை பெற்று தருவார்கள் நாம் பலன்களை அடையலாம் என்று  நினைக்கும் தோழர்கள்  தோழியர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றி  வரும் காலங்களில் அனைத்து போரட்டங்களிலும் கலந்து கொள்ளுங்கள்அதுதான் இந்த துறையை  பாதுகாக்கும் ,மத்திய அரசு எடுக்கும்  முயற்ச்சியை  நமது போராட்டம்  வாயிலாகத்தான் பின்னுக்கு தள்ளமுடியும்  நோட்டீஸ் அடிப்பதால் மட்டுமே ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுவிடுவார்கள்  என்று நினைப்பது தவறு தொழிலாளிகளுக்கு உண்மையை எடுத்து கூறி போராட்டத்தில் பங்குபெற  தஞ்சை மாவட்டத்தில் உள்ள சங்க தலைமைகள்  முயற்ச்சி செய்யவேண்டும் .

D.சுப்ரமணியன்
 தஞ்சை BSNLEU மா.செயலர்

சுற்றறிக்கை எண்:63

பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி!!!!!!!<<<Click Here>>>

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...

இந்திய நாடு முழுவதும் உழைப்பாளி வர்க்கம் ஒன்று திரண்டு நடத்தும் செப்டம்பர் 2- அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடுவோம். நமது தேசத்தை பாதுகாப்போம். BSNLஐ பாதுகாப்போம்.<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:62

PLIகமிட்டி கூட்டமும் இதர மத்திய சங்க செய்திகளும்<<<Click Here>>>