Tuesday, 20 September 2016

Monday, 19 September 2016

PLI குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யூ, NFTE யின் பொதுச் செயலர் தோழர் சண்டேஸ்வர்சிங் ஆகியோர் CMD திரு அனுபம் ஸ்ரீவத்சவ் அவர்களைச் சந்தித்து PLI தொடர்பாக கலந்தாலோசித்தார்கள்.

CMD அவர்கள் 2014-15ஆம் ஆண்டிற்கான PLI ஆக ரூ. 3000 தர ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கான கோப்பு மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…
என்றபோதிலும்…
கோரிக்கைகள் 24ல் ஒன்றின் ஒரு பகுதிக்காக போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.

மூன்றாம் கட்டப் போராட்டமான
உண்ணாவிரதம்
நாளை (20-09-2016)
திட்டமிட்டபடி நடைபெறும்.
D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
     தஞ்சை மாவட்டம்  

Thursday, 1 September 2016

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்.

      விலை வாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/தனியார் மயமாக்காதே, குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- நிர்ணயம் செய்துவிடு என்பது உள்ளிட்ட இந்திய நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் தேசம் தழுவிய தேச பக்த போராட்டமான செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் பெரு வாரியாக பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

சுற்றறிக்கை எண்:125

ஊதிய பேச்சு வார்த்தையும் இதர செய்திகளும்…<<<Click Here>>>