Sunday 29 December 2013

திறப்பு விழா




மார்ச் 9-ல் வெண்மணி நினைவாலயம் திறப்பு விழா 

 


டிச. 28

கூலிப்போராட்டத்தை மாபெரும்வர்க்கப்போராட்டமாக நடத்தி செங்கொடியை உறுதியுடன் உயர்த்திப்பிடித்த வெண்மணித் தியாகிகளின் மகத்தான தியாகத்தைப் போற்றும் வகையில் கீழவெண்மணி கிராமத்தில் பிரம்மாண்டமாக எழுந்து வரும் வெண்மணி நினைவாலயத்தின் திறப்பு விழாவை 2014, மார்ச் 9 அன்று பிரம்மாண்டமாக நடத்துவது என சிஐடியு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாநிலக்குழு கூட்டம் டிசம்பர் 27 அன்று மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் சென்னையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கரு மலையான், கே.திருச்செல்வன் உட்பட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வெண்மணி நினை வாலயத் திறப்பு விழா குறித்து மேற்கொள் ளப்பட்ட முடிவு வருமாறு;
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தில் நிலப்பிரபுத்துவ, பண்ணை அடி மைத்தனம் மேலாங்கி இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயக்கூலித்தொழிலாளர்களை, சங்க ரீதியாக திரட்டி செங்கொடி இயக்கம் அவர்களது உரிமைகளுக்காகப் போராடியது. அத்தகையப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வுக்காக போராடிய அப்பாவித் தொழிலாளர்களை கொடூரமாக படுகொலை செய்தனர்.
1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு நிலபிரபுக்களின் குண்டர்களால் விவசாயத் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் என 44 பேர் குடிசைக்குள் வைத்து தீயிட்டு கொல்லப்பட்டனர்.நெஞ்சம் பதறும் இந்தக் கொடுஞ்செயலை புரிந்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினர். ஆனால் தீக்கிரையாகிவிட்ட உழைப்பாளிகளின் தியாகம் தமிழக உழைப்பாளி மக்களின்மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் அந்த பகுதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. செங்கொடியின் கீழ் அணிதிரண்ட உழைப்பாளர் கூட்டத்திற்கு முன்னால் நிலப்பிரபுக்களின் கொட்டம் எடுபட வில்லை.
கூனிக்குறுகிக் கிடந்த மக்கள் செங்கொடிஏந்தி அடக்குமுறைக்கு எதிராகத் திரண்டனர். இந்த  ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உழைப் பாளிகளின் உயிர் தியாகம் என்றும் நிலைத்திருக்கும் வகையில் தமிழகத் தொழிலாளர் வர்க்கம் வெண்மணி நினைவாலயத்தை எழுப்பி வருகிறது.இந்த நினைவாலயத்தின் திறப்பு விழா மார்ச் 9 அன்று  நடத்துவது என்றும், இவ்விழாவில் மாநிலம் முழுவதுமிருந்து லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்டுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.










No comments:

Post a Comment