தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
புதுடில்லி: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 1995ன் கீழ், மாதந்தோறும், குறைந்தபட்சம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.
இது குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், ஆஸ்கர் பெர்னாண்டஸ், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 95ஐ, தொழிலாளர் வருங்காலை வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது. தொழிலாளர்கள், ஓய்வூதிய பங்களிப்பை அளிக்க தேவையில்லை. தொழிலாளர் ஒருவரின், அடிப்படை சம்பளம் மற்றம் அகவிலைப்படி சேர்ந்த தொகையில், 8.33 சதவீதத்தை, அவர் சார்ந்துள்ள நிறுவனம் அளிக்கிறது. இதில், 1.16 சதவீதம் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்கிறது. இதில் இருந்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாக அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து, அரசு விரிவாக ஆலோசனை செய்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இத்திட்டத்தை அமல்படுத்தினால், தொழிலாளரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 0.63 சதவீதம் தேவைப்படுகிறது. இவற்றை வழங்க, நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை, அரசே ஏற்க வேண்டும் என, தொழிலாளர்கள் கூறிவருகின்றனர். இவ்வாறு, குறைந்தபட்ச ஓய்வூதியும், 1,000 ரூபாய் ஆக்கப்பட்டால், 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவர். வரவிருக்கும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment