தஞ்சை பெரியகோவிலில் பி.எஸ்.என்.எல். ‘வை-பை ’சேவை தொடக்கம் மாதத்திற்கு 3 முறை இலவசமாக பயன்படுத்தலாம்
வை-பை வசதி
டிஜிட்டல் இந்தியா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக பி.எஸ்.என்.எல். வை-பை வசதியை பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொலி காட்சிமூலம் புதுடெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த வை-பை வசதி தஞ்சை பெரியகோவிலிலும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருபவர்கள் அதிவேக வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பை பெறலாம். சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் அனைத்து பொதுமக்களும் தங்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போனில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்தலாம்.
தஞ்சை பெரியகோவிலுக்குள் எந்த இடத்தில் இருந்தும் பி.எஸ்.என்.எல். வைபை நெட்வொர்க்கில் இணைய முடியும். உபயோகிப்பாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை தங்கள் மொபைல் போனில் பெற்ற உடனேயே பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்த தொடங்கலாம்.
3 முறை இலவசம்
முதல் 30 நிமிடங்களுக்கான உபயோகம், கட்டணம் எதுவும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த இலவச உபயோகம் ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு மாதத்தில் 3 முறை வழங்கப்படும். 30 நிமிடங்களுக்கு மேல் உபயோகிக்க விரும்புபவர்கள் வை-பை சம்பவ இடத்திற்கு அருகில் கிடைக்கும் ரீசார்ஜ் கூப்பன்களை பயன்படுத்தியோ அல்லது ஆன்லைனில் தங்கள் கிரிடிட் கார்டை பயன்படுத்தியோ தொடர்ந்து வை-பை வசதியை பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 1800-425-5300 அல்லது 04362-272400 அல்லது 276700 என்ற எண்களையோ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ராஜூ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment