Thursday, 2 July 2015

எம்.என்.பி. வசதியை இனி நாடு முழுவதும்

புதுடெல்லி,

செல்போன் நம்பரை மாற்றாமல் சேவையை வழங்கிவரும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியான மொபைல் நம்பர் போர்டபிலிட்டி எனும் எம்.என்.பி. வசதியை இனி நாடு முழுவதும் எந்த சர்க்கிளில் இருந்து வேண்டுமானாலும் பெறலாம்.

வலுவான சிக்னல், கட்டண சலுகை ஆஃபர்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்காக தாங்கள் பயன்படுத்தி வரும் செல்போன் நிறுவனத்தில் இருந்து மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த இந்த எம்.என்.பி. வசதி நாடு முழுவதும் நாளை முதல் பரவலாக்கப்படுகிறது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, மொபைல் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்வொர்க் சேவை நிறுவனத்தை ஒரே சர்க்கிளுக்குள் மட்டுமே எம்.என்.பி. வசதி மூலம் மாற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, தமிழ்நாடு டெலிகாம் சர்க்கிளுக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் இங்கு மட்டுமே எம்.என்.பி. வசதியின் வாயிலாக சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், நாளை முதல் வரவுள்ள புதிய விதிமுறைகளின்படி, இனி இந்தியா முழுவதுமுள்ள எந்த சர்க்கிளில் இருந்தும் எம்.என்.பி. வசதியை பெற முடியும். குறிப்பாக, பல்வேறு மாநிலங்களின் சர்க்கிள்களுக்கிடையே சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே, இந்த வசதி கடந்த மே 3-ந்தேதி அமலுக்கு வரவிருந்தது. ஆனால், இந்த வசதியை கொண்டு வர சில தொழில்நுட்ப வசதிகளை டெலிகாம் நிறுவனங்கள் முன்னேற்பாடாக செய்ய வேண்டியிருந்ததால் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கால அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து, 2 மாத காலம் தாமதமாக நாளை முதல் வருகிறது.

இந்த தகவலை மத்திய தொலைதொடர்பு துறை செயலாளரும், டெலிகாம் கமிஷனின் தலைவருமான ராகேஷ் கார்க் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment