Thursday, 16 July 2015

புனித ரமலான் வாழ்த்துக்கள்.18.07.2015

அனைத்து இசுலாமியச் சகோதரர்களுக்கும்  சகோதிரிகளுக்கும்  இனிய "ஈகைத்திருநாளின் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்". 
ஒருவருடைய குணங்கள் அவர் சாப்பிடும் உணவு வகைகளை பொருத்தும் காணப்படும் என்பர். நாம் சாப்பிடும் உணவு அளவோடும், கட்டுப்பாடோடும் இருக்கவேண்டும் என்பதாக தெரிகிறது. உணவுக் கட்டுப்பாடு என்பது ஒருவருடைய பழக்கத்தில் வந்தால் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த 'கட்டுப்பாடு' வருவதற்கு, விரதமிருத்தல் அவசியமாகும்.


மொழி, இன, மத வேறுபாடின்றி இந்த 'விரதம்' இருக்கும் பழக்கம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய சமூகத்தினரால் கடைபிடிக்கப் பட்டு வருவது, 'ரமலான்' மாதமாகும். இந்த ரமலான் நோன்பிருந்து, நாளை புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை இன்ப்பதிவின் மூலம் தெரிவித்துக்  கொள்கிறோம் .

தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது 



No comments:

Post a Comment