ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகங்கள்<<<Click Here>>>
Wednesday, 22 July 2015
Tuesday, 21 July 2015
BSNL அறிவித்த விலையில்லா திட்டங்களை பயன்படுத்துவீர்... பயன்பெறுவீர்....
பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்<<<Click Here>>>
Monday, 20 July 2015
ஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15,000/- கோரி 29.07.2015ல் பேரணி
தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச கூலியை 15,000 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி தமிழகத்தில் 7 மையங்களில் பேரணி<<<Click Here>>>
Sunday, 19 July 2015
Saturday, 18 July 2015
Thursday, 16 July 2015
புனித ரமலான் வாழ்த்துக்கள்.18.07.2015
அனைத்து இசுலாமியச் சகோதரர்களுக்கும் சகோதிரிகளுக்கும் இனிய "ஈகைத்திருநாளின் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்".
ஒருவருடைய குணங்கள் அவர் சாப்பிடும் உணவு வகைகளை பொருத்தும் காணப்படும் என்பர். நாம் சாப்பிடும் உணவு அளவோடும், கட்டுப்பாடோடும் இருக்கவேண்டும் என்பதாக தெரிகிறது. உணவுக் கட்டுப்பாடு என்பது ஒருவருடைய பழக்கத்தில் வந்தால் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த 'கட்டுப்பாடு' வருவதற்கு, விரதமிருத்தல் அவசியமாகும்.
மொழி, இன, மத வேறுபாடின்றி இந்த 'விரதம்' இருக்கும் பழக்கம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய சமூகத்தினரால் கடைபிடிக்கப் பட்டு வருவது, 'ரமலான்' மாதமாகும். இந்த ரமலான் நோன்பிருந்து, நாளை புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை இன்ப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் .
Tuesday, 14 July 2015
திருத்துறைபூண்டியில் BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது
தஞ்சை BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் திருத்துறைபூண்டியில் மிக சிறப்பாக நடைபெற்றது
நமது மாவட்ட செயற்குழுவை தோழர் .A .இருதயராஜ் அவர்கள். BSNLEU மாவட்டசங்க தலைவர் துவக்கிவைத்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர் நமது சங்ககொடியை ஏற்றிவைத்து தொடக்க உரை ஆற்றினார்கள்.
வரவேற்ப்பு உரையை தோழர்.Dசுப்ரமணியன்அவர்கள்.BSNLEU மாவட்ட செயலர் உரையாற்றினார்.
பின்னர் கிளை செயலர் மற்றும் மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்களுடைய உரையை எழுச்சிமிகு ஆற்றினார்கள் . சங்கத்தின் வளர்சியைபற்றியும் நாட்டின் ஒற்றுமை பற்றியும் கடைமைகள் பற்றியும் அனைவரும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக:
1.கிளை மட்ட பிரச்சனைகள் மற்றும் பல நமது சங்கத்தின் வழிகாட்டுதலுடன் தோழர்களை நமது சங்கத்திள் இணைப்பது இன்னும் பல முடிவுகள் பற்றியும்
2.தஞ்சையில் மாநிலசெயற்குழு நடத்துவது பற்றியும்
3.வருகின்ற நமது சங்கத்தின் தேர்தல் பற்றியும்
4.நாட்டில் உள்ள நிகழ்வுகள் பற்றியும்
மிக சிறப்பாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தனர்
![]() |
| சங்ககொடியை தோழர்.A . பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர் ஏற்றிவைத்தார் |
![]() |
| சங்ககொடியை தோழர்.D . சுப்ரமணியன் அவர்கள்.BSNLEU மாவட்ட செயலர் ஏற்றிவைத்தார் |
![]() |
| தோழர் .A .இருதயராஜ் அவர்கள். BSNLEU மாவட்ட தலைவர் |
![]() |
| தோழர்.Dசுப்ரமணியன்அவர்கள்.BSNLEU மாவட்ட செயலர் |
![]() |
| தோழர்.A . பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர் |
![]() |
| தோழர் .கரிகாலன் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர் .நெப்போலியன் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர் .மாணிக்கம் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர் .பன்னீர் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர் .சத்தியவானன் அவர்கள்.BSNLEU ஒப்பந்த உழியர் மாவட்ட செயலர் |
![]() |
| தோழர் .கரிகாலன் அவர்கள்.BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் |
![]() |
| தோழர். யாசின் BSNLEU உதவி செயலர் |
![]() |
| தோழர் .ஜெயகுமார் அவர்கள்.BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர் .பன்னீர் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர்.கர்ணன் அவர்கள்.BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழர்.நாகராஜன் அவர்கள்.BSNLEU மாவட்ட துணை தலைவர் |
![]() |
| தோழர்.துரைராஜ் அவர்கள்.BSNLEU கிளை செயலர் |
![]() |
| தோழியர்.தினமணி அவர்கள்.BSNLEU மாவட்ட துணை தலைவர் |
![]() |
| தோழர்.KT .முருகையன் அவர்கள்.BSNLEU |
![]() |
| தோழர்.ரமேஷ் அவர்கள்.BSNLEU மாவட்டதுணை செயலர் |
![]() |
| தோழர்.ரமணன் அவர்கள்.BSNLEU மாவட்டபொருளாளர் |
BSNLEUதஞ்சை மாவட்டம்
கண்ணீர் அஞ்சலி
FNTOBEA சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் P.ஆண்டியப்பன் அவர்கள் 12.07.2015 அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். தோழர் ஆண்டியப்பன் அவர்கள் தந்தி பிரிவில் பணியாற்றினாலும் கூட ஊழியர் பிரச்சனைகளில் கவனம் கொண்டு தீர்ப்பதற்கு முயற்சி எடுத்தவர். தந்திப் பகுதியின் FNTO மாநிலச் செயலராக பல ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க தோழர். BSNL ஊழியர் சங்கத்துடன் இணைந்து செயலாற்ற FNTOBEA சங்கத்தை உருவாக்கி தனது இறுதி மூச்சு வரை இணைந்து செயலாற்றியவர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பல ஆண்டுகளுக்கு முன் செய்த பின்னரும் இயக்கப் பணியை விடாது ஆற்றிய அவரது உறுதி நம்மை வியக்க வைக்கிறது. தோழர் ஆண்டியப்பன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இயக்க தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் கண்ணீரோடு அஞ்சலியை செலுத்துகிறது.
Friday, 10 July 2015
பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.
01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.
(DPE issued order for IDA increase w.e.f. 01.07.2015.)<<<Click Here>>>
Wednesday, 8 July 2015
தமிழ் மாநில தலைமைப் பொது மேலாளாருடன் சந்திப்பு…
மாநிலத் தலைவர் (AGS) தோழர் S.செல்லப்பா மற்றும் மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் ஆகியோர் இன்று (08.07.2015) தலைமைப் பொது மேலாளரை சந்தித்தனர். JTO காலிப்பணியிடங்களை உடனடியாக மறு கணக்கீடு செய்து கார்ப்பரேட் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நமது தலைவர்கள் கோரினர். JTO காலிப்பணியிடங்கள் மறுகணக்கீடு செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில் கார்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று தலைமைப் பொது மேலாளர் உறுதி கூறினார். எனினும் இதில் ஏற்பட்ட கால தாமதம் என்பது கவலைக்குறியது என குறிப்பிட்டோம். தலைமைப் பொது மேலாளர் அவர்கள் நமது உணர்வினை புரிந்துகொண்டு இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள BSNL சலுகைகள் சம்பந்தமாக மாவட்ட அளவில் செய்யவேண்டிய பணிகளை விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது. மாவட்ட மட்டங்களில் நிர்வாகம் இதை விளம்பரப்படுத்துவதிலும் புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதிலும், நாகர்கோவில் நீங்கலாக எங்கும் வேகமாக செயல்படுவதில்லை என்ற ஆதங்கத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளோம். CGM அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.
National MNP successfully implemented.
It is certainly a proud moment for India that National Mobile
Number Portability is implemented from 3rd July. The Department of Telecom has
successfully rolled out the NMNP, involving 175 networks, across 22 circles.
This allows customers to retain their mobile numbers, even if they move from
one circle/state to another. Introduction of NMNP will surely increase customer
satisfaction. BSNL has to improve it’s quality of service, to retain it’s
customers.
BSNL Launches SpeedPay Mobile Wallet: How Can You Use It?
BSNL
launches mobile wallet with cash withdrawal option.
BSNL
launched a pre-paid card linked mobile wallet service, which would
allow its customers to transfer money, pay for services as well as withdraw
cash of up to Rs 1 lakh. The wallet service, Speed Pay, allows a customer to
load money even if he does not have a bank account. The money loaded in
the mobile wallet can be transferred to a bank account and even withdrawn at
bank branches or at BSNL outlets. "Loading money into wallet
from a bank account is an option. BSNL customers, who don't have bank accounts,
can also load money by visiting any BSNL retail outlet and ask the retailer to
recharge their mobile wallet account and pay for various services," BSNL
Chairman and Managing Director Anupam Shrivastava said. <<<Click Here>>>
Tuesday, 7 July 2015
Sunday, 5 July 2015
டெலிகாம் கூட்டுறவு சோசைட்டி, சென்னை.
டெலிகாம் கூட்டுறவு சோசைட்டி, சென்னை. கடந்த15ஜூன் நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சாதாரண கடனுக்கான (O L ) வட்டியை 14.5%லிருந்து 16%சதமாக உயர்த்தியது உறுப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை / கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடிர் வட்டி உயர்வு மிகுந்த சுமையை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாகும்.
சாதாரண கடனை 6 லட்சமாக உயர்த்தியதை காரணம் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல!! இந்த வட்டிஉயர்வை உடனடியாக கைவிட வேண்டும். தெ .சுப்ரமணியன்,மாவட்ட செயலர்.
திடிர் வட்டி உயர்வு மிகுந்த சுமையை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாகும்.
சாதாரண கடனை 6 லட்சமாக உயர்த்தியதை காரணம் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல!! இந்த வட்டிஉயர்வை உடனடியாக கைவிட வேண்டும். தெ .சுப்ரமணியன்,மாவட்ட செயலர்.
Friday, 3 July 2015
வெற்றிக்கு நரகமே வழி
சொர்க்கத்திற்கு செல்ல வழி
ஒன்று இருக்குமேயானால்.!
அது நரகத்தை கடந்து செல்லும்
வழியாகவே இருக்கும்.!
வெற்றியின் பாதையும்
தோல்வியை கடந்து
செல்லும் பாதையே.!!
சொர்க்கத்தை விரும்புவோர்கள்
நரகத்தை புறக்கணிக்க முயலாதீர்கள்
அதை எதிர்கொள்ள முயலுங்கள்.!
வெற்றி உங்கள் வாசல் வரும்.
D.சுப்ரமணியன்
மாவட்ட செயலர்
Subscribe to:
Posts (Atom)




























