இந்தியாவில் இராணுவம் மற்றும் கடற்படையில் மட்டுமே செயல்படும் செயற்கைக்கோள் தொலைபேசிசேவையை சாதாரண மக்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. INMARSAT எனப்படும் INTERNATIONAL MOBILE SATELLITE ORGANISATION அமைப்புடன் இணைந்து நமது BSNL நிறுவனம் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை அளித்திட முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக இரயில்வே, இந்திய ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படைமற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைக்குழுக்கள் போன்றவற்றிற்கு சேவை வழங்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என நமது CMD தெரிவித்துள்ளார்.
தற்போதைய தொலைத்தொடர்பு சேவை செல்கோபுரங்களின் COVERAGE 25 முதல் 30 கிமீ வரையாகும், ஆனால் செயற்கைக்கோள் தொலைபேசிசேவையில் 38000 கிலோ மீட்டர் வரை SIGNALS கிடைக்கும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
No comments:
Post a Comment