Wednesday, 7 June 2017

6.6.2017 அன்று நடைபெற்ற தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்தமிழ் மாநில கவுன்சில் கூட்டம்சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில், 6.6.2017 அன்று  நடைபெற்றது.
பின்வரும் பிரச்னைகள் விவாதிக்கப் பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன :
1.     பரிவு அடிப்படையிலான நியமனங்கள் :
31.3.2016 வரை மாநில அலுவலகத்துக்குவந்த 135 மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு,  39 பேருக்கு நியமனங்கள்  ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன.  தர்மபுரியில் 2 பேருக்கும்வேலூரில் ஒருவருக்கும் விடுபட்டுள்ளது சுட்டிக் காட்டப் பட்டதுவிடுபட்ட பட்டியல் தந்தால் அவையும் பரிசீலிக்கப்படும் என்றும், 2016-17 ஆம் ஆண்டிற்கான  பரிவு அடிப்படையிலான  பணி நியமனத்திற்காக 1.4.2016 முதல் 31.3.2017 வரை மாவட்ட அலுவலகங்களுக்கு வந்துள்ள மனுக்கள் 20 நாட்களுக்குள் மாநில அலுவலகத்துக்கு அனுப்பப் பட வேண்டும் என தலைவர் முடிவு தெரிவித்தார்.
நாட்குறிப்பேடுடவல்டம்ளர் உள்ளிட்டவற்றுக்கான ரொக்கப் பணம் :
அனைத்து ஊழியர்களுக்கும் ரூ. 750 ஆக உயர்த்தப் படும் என முடிவு செய்யப் பட்டது.
3.    CYMN- இல், GSM எண்களில் 94 லெவல் :
94 லெவலில் சிம் பற்றாக்குறை உள்ளதால் புதிய 8300 லெவல் சிம்கார்ட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  எனினும் கடந்த இரண்டுமாதங்களில் 22,100 சிம்கார்ட்கள் 94 லெவல் சிம்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், FRANCHISEகளுக்கு 20,600 சிம் கார்ட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும்தெரிவிக்கப்பட்டது.
4.    சேல்ஸ் பிரிவு ஊழியர்களுக்கு ப்ரீ-பெய்ட் சிம்களில் பேசும் நேர அதிகரிப்பு :
விஜய் டீமில் உள்ள வர்களுக்கு 200 ரூபாய்களுக்கு கூடுதலாக 300 ரூபாய்கள் வழங்குவதற்கான உத்தரவு 02.03.2017 அன்று வெளியிட்டுள்ளதாகவும்அதனைமாவட்டங்களில் உடனடியாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.
5.    புதிய பதவி உயர்வு திட்ட அமலாக்கத்தில் திருத்தங்கள் :-
சேலம்நீலகிரி மாவட்டங்களில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.     ப்ராஜெக்ட் விஜய் திட்டத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியர்களுக்கு இன்செண்டிவ் வழங்குதல் :
மாவட்டங்களில் தவறான புரிதல் காரணமாக நிறுத்தப் பட்டிருந்தது. 01.10.2015 முதல் 30.09.2017 வரை இன்செண்டிவ் வழங்க ஏற்கனவே மாவட்டங்களுக்குவழிகாட்டுதல் வழங்கப் பட்டுள்ளது,
7.   விதி-8- இன் அடிப்படையில் தமிழ் மாநிலத்திற்குள் இடமாற்றல் மனுக்கள் ஒப்புதல் அளிக்கப் பட வேண்டும் :
திருச்சிகாரைக்குடிவேலூர்பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 14 மனுக்கள் குறிப்பாக முதுகுளத்தூரிலிருந்து தூத்துக்குடி மற்றும்கடலூரிலிருந்து பாண்டிச்சேரி உள்ளிட்ட இட மாற்றல் பிரச்னைகள் நிலுவையில் உள்ளது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது.  உடனடியாக தீர்க்கப் படவேண்டும் என முடிவு செய்யப் பட்டது.
8.  முந்தைய மாநில கவுன்சில் கூட்ட முடிவின்படிஅனைத்து ஊழியர்களுக்கும் BSNL   பைகள் வழங்குதல் :
நிதி நெருக்கடி காரணமாக பூர்த்தி செய்ய முடியவில்லைவிரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்.
9.  தமிழகம் முழுவதும்அலுவலகம்தொலைபேசியகம்குடியிருப்புஆய்வு குடியிருப்பு கட்டிடங்கள் 
      பராமரிக்கப் படுதல் :
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.  3.6 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது.   விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்.
1  0. இம்யூனிட்டி இடமாற்றல்கள் தாமதமின்றி அமுலாக்கம் :
அனைத்து இம்யூனிட்டி இடமாற்றல்களும் அமுலாக்கப் பட்டுள்ளன.
11.  மெடிக்கல் கமிட்டி :
மெடிக்கல் பில்கள் தாமதம்கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் குறித்து உடனடி நடவடிக்கை 
எடுக்க மெடிக்கல் கமிட்டி பின்வரும் உறுப்பினர்களைக்கொண்டு அமைக்கப் பட்டுள்ளது :
DGM (ADMN), DGM(FIN), AO(PENSION CELL), AGM(SR&WLF)  ஆகிய அதிகாரிகள்      மற்றும் BSNL ஊழியர் சங்கத்திலிருந்தும், NFTE சங்கத்திலிருந்தும் தலா 2 பிரதிநிதிகள்
    12.  COAXIAL REPEATER STATION- களைக் கையகப் படுத்துதல் :-
STRலிருந்து மாநிலத்திற்கு வழங்கப்பட்ட இடங்கள் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
13ஊழியர்கள் MOU வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தொகை தருவதில் தாமதம் ஏற்பட்டதால் 
      பிடிக்கப்படும் அபராத வட்டி:-
கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று 
தெரிவிக்கப்பட்டது.  இதனால் ஏற்படும்இழப்பை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என ஊழியர் தரப்பில் 
தெரிவிக்கப்பட்டதால் இந்த பிரச்சனையை அகில இந்திய கவுன்சிலுக்கு பரிந்துரைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
14. TSM தோழர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரை அமலாக்கம்:-
இது தொடர்பாக கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அமலாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டதுஊழியர்  தரப்பில் இவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்பரிந்துரையினை அமலாக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. கார்ப்பரேட் அலுவலகத்தில் விளக்கம் கேட்டு அமலாக்க உறுதி   அளிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு   மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பள பட்டுவாடா செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
15. ஊழியர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்ட பணத்தை திரும்ப பிடிப்பதை நிறுத்துவது:-
இது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.    கார்ப்பரேட் அலுவலக உத்தரவை சுட்டிக்காட்டி விரைவில் அனுப்பவேண்டும் என ஊழியர் தரப்பில்   வலியுறுத்தப்பட்டது.     விரைவில் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்ப உறுதி அளிக்கப்பட்டது.
16ப்ராஜக்ட் சஞ்சய் தமிழகத்தில் அமலாக்கம்:-
தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்திலும் ப்ராஜக்ட் சஞ்சய் அமலாக்கப்பட்டதை  சுட்டிக்காட்டி மாவட்டங்களில் விடுபட்ட இடங்களிலும் இதனைவிரைவில் டெண்டர் காலம்   முடிவடைந்தவுடன் அமலாக்க வழிகாட்டியுள்ளார்.
17.  விடுபட்ட பகுதிகளுக்கு HRA:-
இது தொடர்பான 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் மாநில நிர்வாகத்திற்கு ஊழியர்  தரப்பில் வழங்கப்பட்டது.  கார்ப்பரேட் அலுவலகத்தில் விளக்கம்கேட்டு அமலாக்கப்படும் என   தெரிவிக்கப்பட்டது.
18.  உரிய தேதியிலிருந்து NEPP பதவி உயர்வு:-
தோழர் N.ராமசாமி SSS(O) சென்னை அவர்களின் பிரச்சனையை நிதி மற்றும் நிர்வாக அதிகாரிகள்   இணைந்து விரைவில் தீர்வு காண வழிகாட்டப்பட்டுள்ளது.
19. கவுன்சிலில் எடுக்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றான தலமட்டங்களில் WORK COMMITTEE மற்றும் LOCAL COUNCIL கூட்டங்கள் விரைவாகவும்உரிய காலஇடைவெளியிலும் நடத்த மாவட்ட பொது மேலாளர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment