Thursday, 11 December 2014

மகாகவியின் பிறந்தநாள்.

மகாகவி பாரதியார் பிறந்தநாள் இன்று 11.012.2014
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழில் இருக்கும் ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை செய்திருக்கும் அற்புதம் இது.
புகைப்படம்: இன்று பாரதியார் பிறந்த நாள் ! 
பாரதியார் பிறந்த நாளை ஒட்டி பாரதியார் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களை வெளியிட வேண்டும்  என்று மதுரை பாரதியார் பேரவை மத்திய அரசிடம் 6  மாதத்திற்கு முன்னால் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு மத்திய அரசு  " பாரதியால் நமது தேசத்தில் எந்தவொரு சிறப்புநிகழ்வோ, திருப்புமுனையோ  ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. . ஆகவே  சிறப்பு நாணயம் வெளியிட அவருக்கு எந்த அருகதையும் இல்லை" என்று பதில்  அளித்திருந்தது. என்ன திமிர் இந்த மத்திய அரசுக்கு ! 

ரவீந்திரநாத் தாகூருக்கு நிகரான கவிஞன் அவன். தாகூருக்கு நாணயம் மட்டும் அல்ல, ரூபாய் நோட்டு, தபால் தலை என்றெல்லாம் வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு. ஆனால் பாரதியாருக்கு ஒன்றும் இல்லை. ஏன் இந்த நிலை. அவன் தமிழில் பாடினான் என்பதற்காகவா.. அன்றைய நாளில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளால் புறம் தள்ளப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்த தமிழை, தோண்டி எடுத்து வெளியில் கொண்டு வந்து போட்டான் என்பதற்காகவா.. பாரதி மேல் நமக்கு பெரிய கருத்து வேறுபாடு இருக்கிறான் , இந்த நாட்டை அவன் தன் பாடல்களில் 'ஆரிய தேசம்'என்று குறிப்பிட்டு இருக்கிறான். தன்னை பார்ப்பனன் என்று நெஞ்சின்  ஒரு ஓரத்தில் கொண்டாடியிருக்கிறான். இருந்தாலும் அவன் ஓரளவில்  பார்ப்பனியத்தை எதிர்த்து இருக்கிறான். தாழ்த்தப்பட்ட   சிறுவர்களுக்கு பூணூல் அணிவித்து மகிழ்ந்து இருக்கிறான். இந்த விஷயத்தில் அவன் தனது பூணூலை அறுத்து எறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் அவன் பார்ப்பனர்களை எதிர்த்து இருக்கிறான். இந்த விஷயங்களால் அவனை பார்ப்பனர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்றும் பார்ப்பனர்கள் தமது பிள்ளைகளுக்கு 'பாரதி' என்ற பெயரை சூட்டுவதிலை . இன்றளவும் அத்தனை வஞ்சம் வைத்து இருக்கிறார்கள் கவி பாரதி மேல் . பாரதி இறந்து அவனது சவஊர்வலம் தெருவில் வந்தபோது தங்கள் வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும்  அடைத்துக்  கொண்டு விட்டார்கள் மயிலாப்பூர் பார்ப்பனர்கள். அந்த மகா கவியின்  இறுதி யாத்திரையில் அவர்கள் கலந்துக் கொள்ளவேயில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் மக்கள் அவனை பின் தொடர்ந்துப் போனார்கள். அவன் முகத்தில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட அங்கே மக்கள் இல்லை. இப்படியாக அவன் கதை முடிந்தது.  நாம் தான் பாரதி என்கிற பெயரை நமது பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் வைத்து அழகு பார்க்கிறோம். அந்த அளவில் பாரதியை நாம் தமிழனாக ஏற்றுக் கொள்வோம். மத்திய அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்போம் !
இந்த வரிகளைப் பாருங்கள் :
வெள்ளை மலர்மிசை வேதக் 
கருப்பொரு ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன் .
 ‘எள்ளத்தனைப் பொழுதும் 
பயனின்றி இராதெந்தன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்….’ 
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம் சக்தி, ஓம்
நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி .
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்!

No comments:

Post a Comment