வேலூர் மாவட்டத்தில் 140 ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து 08-08-2014 அன்று மாவட்ட தலை நகர்களில் “பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”<<<Click Here>>>
BSNL நிர்வாகங்களின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து 08-08-2014 மாலை 4- மணியளவில் பாலாஜி நகர் தொலைபேசி பொது மேலாளர் அலுவலகத்தில் மாபெரும் "பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும். அனைத்து ஊழியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தோழா!
இன்றைய இலட்சியம் நாளைய சாதனை......இன்றைய அலட்சியம் நாளைய சோதனை......எழுந்திடு தோழா.... எழுந்திடு...
தோழா!
எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் உறங்கி கிடந்தால் சிலந்திவலையும் நம்மை சிறைபிடிக்கும் எழுந்திடு தோழா.... எழுந்திடு...
தோழா! எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோ
நிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலே
கண்ட கனா வாய் பலிக்காமல் போய்விடுமோ
இப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,
வறுமையோடு நித்தம் யுத்தம் புரிகின்றாய்
முடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுது
உன் கனவு.....,படியப்போகுது உன் நினைவு ...எழுந்திடு தோழா...
செங்கொடி என்றும் தாழ் ந்ததில்லை
செங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லை
போராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!! போராடுவோம்...வெற்றிபெறுவோம்....
செங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லை
போராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!! போராடுவோம்...வெற்றிபெறுவோம்....
வாழ்த்துகளுடன்....
தோழமையுள்ள
(D.சுப்ரமணியன்) (N.சத்தியவானந்தம்)
மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர்
BSNLEU TNTCWU
No comments:
Post a Comment