வேலுர் SSA-வில் பணிநீக்கம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு (05-08-2014)அன்று மாலை 4 – மணி அளவில் GM அலுவலகத்தில் சக்திமிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலூரில் தொடர் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் BSNL ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்
தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம். தொடங்கிய தொடர்உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
தமிழ் மாநிலம் சங்கம் வழிகாட்டுதல் அதன் அடிப்படையில் பணியில் இருந்து விலக்கி
வைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிகளில் அமர்த்த
வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தஞ்சையில் BSNLEUமாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.50 க்கு மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் ஒப்பந்த
ஊழியர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்..
நமது போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் என்ற சபதத்தை ஏற்று கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம் மனதார பாரட்டுகின்றது.....
தோழர்களே! பதிலடி கொடுப்போம்.. அநீதி களைவோம்...
அதிகாரத்தின் துணையோடு தொழிலாளர்களின்
அடிவயிற்றில் கை வைக்க நினைபவரின் வன்முறையை நமது போராட்டத்தின் வாயிலாக அநீதிகளை
ஆர்ப்பரிப்போம்... வெற்றிபெறுவோம்....
தோழமையுள்ள,
(D.சுப்ரமணியன்) (N.சத்தியவானந்தம்)
மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர்
BSNLEU TNTCWU
No comments:
Post a Comment