Monday 18 August 2014

மாவீரன் நினைவு நாள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள்


இளமையில் சுபாஷ் சந்திர போஸ்


நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 [3]) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர்நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டிஇந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில்இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல்இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.[4] ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிறப்புஜனவரி 231897
கட்டாக்மேற்கு வங்கம்இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 1985
உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நேதாஜி
படித்த கல்வி நிறுவனங்கள்கல்கத்தா பல்கலைக்கழகம்,
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டத்தில்ஈடுபாடு, இரண்டாம் உலகப் போரின் போதுஇந்தியத் தேசிய இராணுவத்தைஉருவாக்கியமை.
பட்டம்அசாத் இந்து தலைவர்
இந்தியத் தேசிய இராணுவத்தின்சம்பிரதாயத் தலைவர்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசுபார்வார்டு பிளாக்கு
சமயம்இந்து
பெற்றோர்ஜானகிநாத் போசு
பிரபாவதி தேவி
வாழ்க்கைத் துணைஎமிலி செங்கல்[1]
பிள்ளைகள்அனிதா போஸ்[2]

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியர்களின் கவுரவத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவர்களின் உத்தமத் தலைவரின் வாழ்க்கை! காந்தியை யூஸ்லெஸ் என்று தைரியமாகச் சாடிய நேர்மையாளர். கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்று வீரமுழக்கமிட்ட நெஞ்சுரத்துக்குச் சொந்தக்காரர். மக்கள் மத்தியில் விடுதலை நெருப்பைப் பற்றவைத்த மாபெரும் புரட்சிக்காரர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்தியர்களின் கவுரவத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவர்களின் உத்தமத் தலைவரின்  வாழ்க்கை!

காந்தியை யூஸ்லெஸ் என்று தைரியமாகச் சாடிய நேர்மையாளர். கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்று வீரமுழக்கமிட்ட நெஞ்சுரத்துக்குச் சொந்தக்காரர். மக்கள் மத்தியில் விடுதலை நெருப்பைப் பற்றவைத்த மாபெரும் புரட்சிக்காரர்.

No comments:

Post a Comment