23-11-17 மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற மனித சங்கிலியில் BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA---SEWABSNL----TEPU---BEABSNL சங்கங்களின் சார்பாக 400 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர். தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையம் வாயில் துவங்கி வினோதகன் மருத்துவமனை
வரை சுமார் ஒரு கி.மீ தூரம் கைகோர்த்தனர். தஞ்சை, பாபநாசம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தோழர்கள் திரண்டு
வந்திருந்தனர். போராட்டக் குழுவின் தலைவர் தோழர் பழனியப்பன் துவக்கிவைத்து உரையாற்றினார். இறுதியில் போராட்டக் குழுவின் கன்வீனர் தோழர்.
உதயன் அவர்கள்அடுத்தகட்டப் போராட்டத்தை விளக்கியும் அதற்கு அனைவரும்
பங்கேற்க வேண்டுகோள் விடுத்தார், BSNL ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர்.இருதயராஜ்
வந்திருந்த அனைவருக்கும் நன்றியைக் கூறி
போராட்டத்தை நிறைவு செய்தார்.





No comments:
Post a Comment