BSNL நிறுவனத்தின் உயிர் நாடியாம் மொபைல் டவர்களை BSNLல் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கும்
மத்திய அரசின் முயற்சியினை எதிர்த்து BSNLல் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அனைத்து சங்கங்களும்
விடுத்த 15.12.2016 ஒரு நாள் வேலை நிறுத்தம் மிக
பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும்
மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் முழுமையாக
பங்கேற்று இந்த வேலை நிறுத்தத்தை பிரமாண்டமான வெற்றியாக மாற்றியுள்ளார்கள்.
தமிழகத்திலும் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட
ஊழியர்களும் அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். BSNLஐ காப்பாற்ற நடைபெற்ற இந்த பிரமாண்டமான தேச பக்த வேலை நிறுத்தத்தில்
பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும்
தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற உழைத்திட்ட அனைத்து சங்க
தலைவர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நமது வாழ்த்துக்கள். நமது கண்ணின் மணியாம் BSNL நிறுவனத்தை பாதுகாக்க அயராது உழைத்திடுவோம். அரசின் தனியார்மய
முயற்சிகளை தடுத்திடுவோம்!!
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர்
மாவட்டம்
No comments:
Post a Comment