15.12.2016அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும் என மாநில, மாவட்ட சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் அனைத்து சங்கங்களின் தலைவர்களை அணுகி விவாதிக்கப்பட்டது. அனைத்து சங்கங்களின் சார்பாக ஒரு சுற்றறிக்கையும், சுவரொட்டியும் தயாராகிக் கொண்டுள்ளது. அது விரைவில் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில் BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்திட வேண்டும். தல மட்டங்களில் அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தத்திற்கான பணிகளை கூட்டாக செய்திட வேண்டும். அனைத்து அதிகாரிகள் சங்கங்களும், ஊழியர் சங்கங்களும் இருப்பதால் இந்த வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெற்று விடும் என்று அசிரத்தையாக இருந்து விடக்கூடாது. மற்றவர்கள் முன்கையெடுப்பார்கள் என்றும் நாம் இருந்து விடக்கூடாது. BSNL ஊழியர் சங்கம் தான் முன்கையெடுக்க வேண்டும். பலமானதொரு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு பலமான ஒன்று பட்ட போராட்டத்தின் மூலமாகவே துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்த முடியும். எனவே நூறு சதவிகித ஊழியர்களின் பங்கேற்பை வேலை நிறுத்தத்தில் உறுதி செய்ய வேண்டும். வேலை நிறுத்தம் நடைபெற குறுகிய கால அவகாசமே உள்ளது. அனைத்து சங்க உறுப்பினர்களையும் ஒன்றாக திரட்டி தலமட்டங்களிலே வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டங்களை நடத்திட வேண்டும். சுற்றறிக்கை எண்.141 என தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள மத்திய சங்கத்தின் சுற்றறிக்கையில் உள்ள விஷயங்களை பயன்படுத்தி மாவட்ட மட்டங்களில் தேவையான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும். ஊழியர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் பணியிடங்களுக்கே சென்று, தேவைப்பட்டால் அவரகளின் இல்லங்களுக்கும் சென்று சந்தித்து கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதன் மூலம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR
No comments:
Post a Comment