Monday, 9 November 2015

மத்திய சங்க செய்திகள்

இந்த மாத GPF மற்றும் Festival Advanceபட்டுவாடாவிற்குதேவையான நிதியை உடனடியாக வழங்க, GM (CA ) அவர்களை 04.11.2015 அன்று, நேரில் சந்தித்து நமது பொது செயலர்,தோழர். P . அபிமன்யூ வலியுறித்தியுள்ளார்.

விடுபட்ட Casual Labourers தோழர்களை நிரந்தர படுத்த வலியுறுத்தி, BSNLEU - BSNLCCWF சங்கங்கள் சார்பாக கூட்டாக, நமது தலைவர்கள் CMD ஐ, 04.11.2015 அன்று நேரில் சந்தித்து வலியுறித்தியுள்னர்.

பதவிகள் பெயர் மாற்ற உத்தரவை விரைந்து வெளியிட, 04.11.2015 அன்று GM (Restg) அவர்களை நேரில் சந்தித்து நமது பொது செயலர் வலியுறித்தியுள்ளார். 
குறிப்பாக TTA தோழர்களுக்கு JE பெயர் வழங்க தேவையான ஆவணங்கள், ஆதாரங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார். 
அதே போல்,  NE11சம்பள விகிதத்திற்கு கிழ் உள்ள  Sr.TOA தோழர்களின் பெயர் மாற்றத்திலும் சிறு அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, 03.11.2015 அன்று CMD அவர்களையும் சந்தித்து இதே கோரிக்கையை முன் வைத்தார். CMD சாதக முடிவு எடுப்பதாக உறுதி கூறி உள்ளார்.

திரு.ராகேஷ் குமார் மிட்டல் புதிய Director (CM ) ஆக நியமிக்க பட்டுள்ளார். BSNL புத்தாக்கத்திற்கு, இந்த நியமனம் உதவும் என நாம் நம்புகிறோம்.

NEPP பதவி உயர்வில், 01.10.2000 முதல் 01.10.2004 வரை வழங்கபட்ட TM , TTA போன்ற பதவி அடிப்படையிலான பதவி உயர்வை, NEPP பதவி உயர்வாக கருத கூடாது என  வலியுறுத்தி மனிதவள இயக்குனருக்கு 03.11.2015 அன்று  நமது மத்திய சங்கம் கடிதம் மீண்டும் எழுதியுள்ளது. 

JAO ஆளெடுப்பு விதியில் நாம் கடுமையாக வலியுறுத்தி வந்த சேவை காலம் குறைப்பு கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 
ஆம், 30.10.2015 அன்று வெளியிடப்பட்ட, திருத்த விதிகளில், 10 வருட சேவை காலம் என்பது 5 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம், 5 வருடம் Gr .C சேவை முடித்த தோழர்கள் JAO இலாக்கா போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

BSNL கேபிள்களை நாடு முழுவதும் NHAI, PWD, EB போன்ற அரசு நிறுவனங்கள் சேத படுத்துவதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் SC / ST / OBC பிரிவுகளில் காலியாக உள்ள TTA நேரடி நியமன   பணியிடங்களை நிரப்ப கார்ப்ரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. SC - 25, ST - 77, OBC 45 என மொத்தம் 147 இடங்கள் உள்ளது. 
தமிழ் மாநிலத்தில் காலி இடங்கள் இல்லை. ஆனால், சென்னை தொலைபேசி மாநில செங்கல்பட்டு மாவட்டத்தில் OBC பிரிவில் 4 இடங்கள் உள்ளது. 




தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU 

No comments:

Post a Comment