Friday, 14 February 2014

ஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா



திருவாரூர், பிப். 13 -
பிஎஸ்என்எல்இயு அமைப்புடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களின் அமைப்பு தினம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்றது.சங்கத்தின் கொடியை கே.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்தார்.
பிஎஸ்என்எல்இயு  நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.நெப்போலியன் வாழ்த்துரை வழங்கினார். ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள் டி.தாமரைச்செல்வன் மற்றும் எம்.பழனியப்பன், ஆர்.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.பிஎஸ்என்எல் நிர்வாகம் அடிப்படை ஊழியர்களை கடுமையாக வேலைவாங்கிக்கொண்டு குறைந்த ஊதியம் கொடுப்பதை கண்டித்தும் குறைந்தபட்சமாக மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. குருமூர்த்தி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment