Saturday, 4 January 2014

04.01.2014அன்று தஞ்சைமாவட்ட BSNLEU செயற்குழு கூட்டம் நடை பெற்றது

அன்புள்ள தோழர்களே  ! தோழியர்களே ! வணக்கம்


04.01.2014 அன்று தஞ்சை மாவட்ட BSNLEU செயற்குழு கூட்டம் தலைவர் தோழர் A.இருதயராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.


செயற்குழுவை தோழர் மா.பழனியப்பன். மாவட்ட துனை தலைவர் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட சங்க செயல்பாடு,கிளைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் மாநில சங்க செய்திகள் அகில இந்திய சங்க செய்திகளை விரிவாக பேசினார்.

செயற்குழுவில் கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட  24 தோழர்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள் விவாதத்திற்க்கு பிறகு மாவட்ட செயலர் தொகுப்பு உரை வழங்கினார்.

கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

* கிளைக் கூட்டங்கள் மாதா மாதம் நடத்தப்பட வேண்டும்.

* தொழிற்சங்க வகுப்பு நடத்தப்பட வேண்டும்.

*ஜனவரி 7-ல் சென்னையில் நடைப்பெறும் BSNL கன்வென்ஷனில் தஞ்சை மாவட்டத்திலிருந்து அனைத்து தோழர்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.

* CUSTOMER CARE -ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய பிளான் பற்றி தகுந்த  பயிற்ச்சி அளிக்க வேண்டும்.

*தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்டவர்களும் சரியான பராமரிப்பு இல்லாததால்  டவர்சிக்னல் கிடைபதில் தாமதம் ஏற்படுகிறது  இதை நிர்வாகத்தை வலியுருத்தி சரிசெய்ய வைப்பது.

*தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து CSC யிலும் வேலை நேரம் பற்றிய அறிவிப்பு பலகை வைப்பதற்க்கு நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கும்தெரியப்படுத்தவேண்டும்.

*ஒப்பந்த ஊழியர்களை புதிதாக சேர்பதை நிறுத்த வேண்டும்.

தோழர் மாவட்ட பொருளர் எஸ்.என்.செல்வராஜ் நன்றி கூறி முடித்து வைத்தார்.

                         


வாழ்த்துகளுடன்!
                                                                                                                 தோழமையுடன்
                                                                                                                    தெ.சுப்ரமணியன்
                                                                                          தஞ்சைBSNLEU மாவட்ட செயலர்

No comments:

Post a Comment