பயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்
புதுதில்லி, மார்ச் 3-ரயில் பயணத்தில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களின் பயணச்சீட்டு,உறுதி செய்யப்படும்போது குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தும் வசதியை ரயில்வே துறை திங்களன்று அறிமுகம் செய்துள்ளது.ரயில்களில் பயணிப்போர் பெரும்பாலும் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்துகொள்கின்றனர். இதில் அதிகம் பேர் டிக்கெட் பதிவு செய்யும்போது, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும். காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளின் பயணச்சீட்டுகள், ஆர்.ஏ.சி அல்லது உறுதி செய்யப்படும் போது அதுகுறித்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த புதிய எ.எம்.எஸ் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளதுரயில் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். அதேசமயம், பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment