Thursday 19 December 2013

WFTU - அறைகூவல்

WFTU – அறைகூவல்

2013 அக்டோபர் 26 ஆம் தேதி மலேசிய நாட்டில் உள்ள போர்ட் டிக்சன் நகரில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் உலக சம்மேளனத்தின் (WFTU) ஆசிய பிராந்திய கூட்டம் பிரச்சாரம் நடத்தி தொழிலாளர்களை திரட்டி போராடி வெற்றி பெறுவதற்காக கீழ்கண்ட15 -அம்ச கோரிக்கைகளை வடித்தெடுத்துள்ளது.

15-அம்ச கோரிக்கையின் நோக்கம்:

1.வறுமையை ஒழிக்கும் நோக்கம்,குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

2.அனைத்து தொழிலாளர்களுக்கும் வரையறை இல்லாத தொழிற்சங்க உரிமைகள் வழங்க வழங்க வேண்டும்.

3.பொது சேவைகளை சீரழிப்பதையும் நிறுத்த வேண்டும்.

4.ஆட்குறைப்பை கைவிட வேண்டும்.

5.இறையாண்மை உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

6.சுய சார்பான பொருளாதார வளர்ச்சிகளையும் மதிக்க வேண்டும்.

7.பெண்களுக்கும் வேறுபாடின்றி சமவேலைக்கு சம ஊதியம் உறுதிப்படுத்த வேண்டும்.

8.இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

9.சமூக பாதுகாப்பிற்கான உறுதியான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

10.இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.

11.தொழிலாளர்களுக்கு மற்றும் சமுதாயத்திற்கு பணிபாதுகாப்பு,சுகாதாரம் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

12.வேலை பறிப்பு,

13.குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திட வேண்டும்.

14.மதவாதம் உழைக்கும் மக்களை பிரிக்கும் அதன் மோசமான முறைகளுக்கு    எதிராக போராட்டம் நடத்திட வேண்டும்.

15.தனது பாரபட்ச அணுகுமுறையை கைவிட வேண்டும்.


WFTU – அறைகூவலின் படி கீழ்கண்ட  தினங்களை கடைபிடிப்போம் :

2014- ஆம் ஆண்டு புதிய வருடத்தில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்த கீழ்கண்ட சர்வதேச தினங்களை கடைபிடிக்க இந்தக் கூட்டம் மேலும் அறைகூவல் விடுகிறது.

     *08.03.2014 – சர்வதேச பெண்கள் தினம்
     *01.05.2014 – சர்வதேச உழைப்பாளர் தினம்
     *12.06.2014 – குழந்தை தொழிலாளர் தினம்
     *03.10.2014 – சர்வதேச நடவடிக்கை தினம்
  *18.12.2014 -இடம் பெயர்ந்த தொழிலாளர்கலளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சர்வதே தினம்.

 WFTU-ஆசிய பிராந்திய கூட் ட த்தின் முடிவுகளை நாம்
அமுலாக்குவோம்,கடைபிடிப்போம்.


மாவட்ட செயலாளர்
தெ.சுப்ரமணியன்

No comments:

Post a Comment