Saturday 28 December 2013

தேசிய போலீஸ் அகாடமியின் 28வது இயக்குநர்

போலீஸ் அகாடமியின்இயக்குநராக முதல் முறையாக பெண் தேர்வு
அருணா பகுகுணா 
புதுதில்லி, டிச. 27-தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக வரலாற்றில் முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் அதிகாரிகள் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பு வகிப்பார். கடந்த 1948ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அகாடமி இந்தியாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையங்களுக்கெல்லாம் தலையானதாக திகழ்கிறது. இதன் இயக்குநராக இருந்த சுபாஷ் கோஸ்வாமி கடந்த மாதம் இந்தியா - திபெத் எல்லை போலீஸ் படையினர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இப்பதவி ஆந்திராவைச் சேர்ந்த அருணா பகுகுணா (56) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1979ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த இவர் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான, மத்திய ரிசர்வ் படையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர், இப்பணியை வகித்து வரும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், ஆந்திர காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் விரைவில் தேசிய போலீஸ் அகாடமியின் 28வது இயக்குநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

No comments:

Post a Comment