Thursday 20 April 2017

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுப்பதன் மூலம் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவமதிக்கிறார்  .தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாயக் கடன்களை ரத்துச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரியும் தமிழக விவசாயிகள் குழுவினர் புதுதில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. ஒவ்வொரு நாளும் புதிய வடிவங்களில் அவர்கள் நடத்தும் போராட்டம் ஊடகங்களின் கவனத்தையும் மக்கள் கவனத்தையும் ஈர்த்தாலும், இதுவரையில் இவர்களோடு பேச பிரதமர் முன்வரவில்லை. இந்நிலையில் 37வது நாளாக, ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் சட்டைகளைக் கிழித்துக்கொள்ளும் போராட்டம் நடத்தினர்.  விவசாயிகளின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை, ஏற்கத்தக்கவை. கார்ப்பரேட்டுகளுக்கு சென்ற ஆண்டு மட்டும் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பிறகு ஏன் விவசாயிகளின் அரசு வங்கிக் கடன்களை ரத்துச் செய்ய முடியாதுவெளிநாடுகளுக்குப் பறந்து போகிற இடங்களில் சந்திக்கிறவர்களோடு செல்ஃபி படம் எடுத்துக்கொண்டு பதிவிடுகிற பிரதமரால் தலைநகரிலேயே போராடிக்கொண்டிருக்கிற தமிழக விவசாயிகளைச் சந்திக்க வரமுடியவில்லை. இதன் மூலம் விவசாயிகளை அவர் அவமதிக்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையிலேயே, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. உறுதியான, ஒன்றுபட்ட போராட்டமே இந்த அரசை அசையச் செய்யும். 

தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 25-04-2017 காலை 0930 மணி அளவில்  BSNLEU, NFTE, TEPU, SEWA சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Thursday 13 April 2017

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்!

மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல்விலையை நாள்தோறும் மாற்றியமைக்கப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.முதலில், நாட்டின் 5 நகரங்களில் மட்டும் இம்முறை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.இது மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் முன்பு மத்திய அரசிடம் இருந்தது. எண்ணெய் நிறுவனங்களும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களாகவே இருந்தன. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தபின், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டு, 50 சதவிகித எண்ணெய் உற்பத்தி, துரப்பன பணிகள் தனியார் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டன. அந்த நிறுவனங்கள் தங்களின் லாப வேட்கைக்காக, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை தாங்களேநிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை நெருக்கின. அதைத்தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கே மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், மே 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் விலையை மாற்றியமைப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. முதலில், புதுச்சேரி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ராஜஸ்தான் மாநிலம் உதாம்பூர், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என 5 நகரங்களில் மட்டும் இந்த விலைமாற்றத்தை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், பின்னர் நாடு முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளன. ‘நாள்தோறும் விலைகளை மாற்றம்செய்வது சாத்தியம்தான்’ என்றும், ‘அதனடிப்படையிலேயே சந்தை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் - டீசல் விலையில்மாற்றம் கொண்டு வர முடிவெடுத்துள்ளோம்’ என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி. அசோக் தெரிவித்துள்ளார். எண்ணெய் நிறுவனங்களின் இந்த திடீர் அறிவிப்பு, லாரிகள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த  தன் னிச்சையான அறிவிப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்; முன்புபோல அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பெட்ரோலியப் பொருட் களின் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் முடிவானது, வல்லுநர்களின் பரிந்துரை அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்ட விவகாரம் என்றும், மத்திய அரசு இதில் தலையிட எதுவும் இல்லை என்றும் மத்திய பெட் ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
முதலாளிகளுடன் கைகோர்த்து மக்களை சுரண்டும் மத்திய அரசு இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பனம் செய்யும் உரிமையை ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷேல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.அந்த நிறுவனங்கள் எண்ணெய் துரப்பனம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை லாபம் பெற்று வருகின்றன. அத்துடன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க ஒருபேரலுக்கு 15 அமெரிக்க டாலர்களை இந்த தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இவ்வளவும் போதாது என்றுதான்கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அன்றாடம் ஏற்படும் ஓரிரு டாலர் விலை மாற்றத்தைக் கூட ஈடுகட்டாமல், 15 நாட்களுக்கு ஒருமுறை விலைகளை ஏற்றி வந்தனர். தற்போது, 15 நாட்களெல்லாம் பொறுக்க முடியாது என்று கூறி அன்றன்றைக்கே விலையை உயர்த்தி லாபம் சம்பாதிக்கும் கொள்ளையில் இறங்கியுள்ளன. விலையை நிர்ணயிப்பது என்னவோஅரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் என்றாலும், அதனால் கிடைக்கும் கொள்ளை லாபம் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற எண்ணெய்நிறுவனங்களுக்கே செல்லப் போகின்றன. அதனால்தான் இவ்விஷயத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று மோடி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் கையை விரித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை 10 டாலராக குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை. காரணம், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அந்நிய முதலீடுகளை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்றால், தங்களுடைய நிறுவனங்களின் லாபத்தை பங்குச் சந்தையில் அதிகமாகக் காட்ட வேண்டும் என்ற லாபவெறிதான். மறுபுறம் மத்திய அரசும் தன்பங்குக்கு கலால் வரி மூலம் கொள்ளை வருவாய் ஈட்டுவதற்கு பெட்ரோலியப் பொருட்களை விட வேறு பெரிய வாய்ப்பில்லை. இதனால்தான் 2015-ல் கச்சா எண்ணெய் விலை, சரிந்துகொண்டே வந்தாலும் பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் கலால் வரியை மோடி அரசு உயர்த்தியது. 2014-ல் கலால் வரி மூலம் ரூ. 9,184 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியது. உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களின் மீது அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான்.

இனிய தமிழ் புத்தாண்டு/Good Friday/Dr.Ambedkar B'day நல்வாழ்த்துக்கள்

Good Friday, also known as "Holy Friday," is the Friday immediately preceding Easter Sunday. It is celebrated traditionally as the day on which Jesus was crucified.    

 இனிய  தமிழ்  புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்
Iniya Tamizh Puthaandu Nalvazhthukkal
“I wish you a life of auspiciousness, filled with prosperity and happiness” 

       
BHARAT RATNA DR.B.R.AMBEDKAR 126TH BIRTHDAY WISHES 
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்                                                  

Friday 7 April 2017

GM Thanjavur Appreciation letter to our Union

From
C.V. VINOD, ITS
General Manager
BHARAT SANCHAR NIGAM LIMITED
Thanajavur-613007

([)ate: 04/04/2017

Dear Shri lrudayaraj,
As a part of the commitment to work one hour extra, I wish to peace on
record my appreciation for all. the members of your 'Union in making this
Programme a successful one. Based on the feedback received from the public, I
am very much happy to inform you that most of the public have expressed their
surprise and appreciated efforts of BSNL in doing 'Umbrella Marketing and
thus improve our visibility.  This has been a wonderful opportunity to meet
customers directly, interact and work with renewed enthusiasm.

Thanking you for all the cooperation extended.

                                                                                                            Yours sincerely,
                                                                       -SD-            
                                                                C.V.VINOD        
Shri A. Irudayaraj,                                                                                              General Manager Telecom
District Secretary,                                                                                                      Thanjavur-613007
BSNL Employees Union,
'Ihanjavur-613007..

Thursday 6 April 2017

BSNL ஊழியர் சங்கத்தின் 8வது தமிழ் மாநில மாநாடு

BSNL ஊழியர் சங்கத்தின் 8வது தமிழ் மாநில மாநாடு ஈரோட்டில் 2017, மே மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள சார்பாளர்களை கிளைச் சங்கங்கள் உடனடியாக கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த மாநில மாநாட்டிற்காக அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் நிதிக் கோட்டா போடப்பட்டுள்ளது. இதனை ஏப்ரல் முதல் வாரத்தில் முடிப்பது என்பது நமது மாவட்ட செயற்குழுவின் முடிவு. இதனை கிளை செயலாளர்கள் நிறைவேற்றிட வேண்டும். மாவட்ட சங்க நிர்வாகிகள் இதற்கான உதவியினை கிளை சங்கங்களுக்கு செய்திட வேண்டும். இந்த மாநில மாநாட்டில் முன்வைக்க உள்ள அறிக்கையினை இறுதி செய்வதற்கான தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் 02.05.2017 அன்று நடைபெற உள்ளது. முறையான அறிவிப்பு இன்னமும் சில தினங்களில் வெளியிடப்படும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday 5 April 2017

JTO இலாக்காத் தேர்வு முடிவுகள்

JTO இலாக்காத் தேர்வு முடிவுகள் 
 03/04/17 வெளியிடப்பட்டுள்ளன. 
தமிழகம் மற்றும் சென்னையைச் சேர்த்து 
294 தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர். 
தஞ்சை மாவட்டத்தில் 10 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

1.   Smt.D.Joyshankari
2.   Smt.R.Nithya
3.   Smt R.Ilavarasi 
4.   Smt B.Vinu
5.   Smt A.Jeeviavathy  
6    Shri.M.Karthik
7.   Shri.R.Jagajeevan                      
8.   Shri.S.Vishnukumar                   
9.   Shri.G.Gunalan
10. Shri.L.Gopikrishnan          
                               

தஞ்சை   மாவட்டத்தில் தேர்ச்சியுற்ற அனைவருக்கும்
BSNLEU  வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்
 A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Tuesday 4 April 2017

ஒப்பந்ததொழிலாளர்கள் நிரந்தரம் வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக‌(TNCTWU)
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களையும்,
தஞ்சையில் 2 பேர்களை 18.01.2002 முதல் நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று தீர்ப்புவந்துள்ளது
 ID 385/2004              தோழர்.R.ராஜேந்திரன்  
          ID 386/2004           தோழர்.S.Gopalakrishnan
 
 இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

கவன ஈர்ப்பு தினம்- 05.04.2017

15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளில் மாவட்ட/கிளை செயலாளர்கள் செய்து வருகின்றனர். ஒன்று பட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம்.!!

கோரிக்கைகள் :-

1)BSNL ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு 1.1.2017 முதல் ஊதியமாற்றம் செய்திடுக!
2) 1.1.2017 முதல் ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்திடுக!
3)நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமலாக்கிடுக!
4)வாங்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை கணக்கிடுக !

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Saturday 1 April 2017

2வது மாவட்ட செயற்குழு கூட்டம்

31-03-2017 அன்று திருத்துறைப்பூண்டி வசந்த் மஹால் மண்டபத்தில் காலை 1000 மணி முதல் மதியம் 0330 மணிவரை தஞ்சை மாவட்ட BSNL ஊழியர் சங்க 2வது மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர தோழர் D.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கிளை செயலாளர்களும் கலந்து கொண்டு ஆய்படும்   பொருள் மீது விவாதம் நடத்தினர். மாவட்ட செயலர் தோழர். A.இருதயராஜ் தொகுப்புரை வழங்கினார். மாநில செயலர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார் .

மாலை 0500 மணி அளவில்  திருத்துறைப்பூண்டி கிளை செயலாளர் தோழர்.K.காளிதாஸ் பணிநிறைவு பாராட்டுவிழா தோழர் K.T.முருகையன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாநில செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன், மாநில உதவி பொருளர் தோழர்.R.ஹேந்திரன், BSNLEU, NFTE  மற்றும் அதிகாரிகள் சங்க மாவட்ட, கிளை  உறுப்பினர்களும், கோட்ட பொறியாளர் திரு. ராதாகிருஷ்ணன், துணை கோட்ட பொறியாளர் திரு.ராமச்சந்திரன் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள், உறவினர்கள்,  நண்பர்கள்  அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறபித்தனர்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்