Wednesday 28 June 2017

அனைத்து சங்கங்களின் அறைகூவல்

நமது நியாயமான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து நிர்வாகத்திற்கு கொடுத்து வந்த ஒத்துழைப்பை 01.07.2017 முதல் நிறுத்துவோம்! அனைத்து சங்கங்களின் அறைகூவல்  <<<Click Here>>>

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Friday 23 June 2017

22/6/2017 CMD க்கு BSNLEU பொதுசெயலர் கடிதம்

MANAGEMENT COMMITTEE  ஒப்புதல் அளித்த மூன்று கோரிக்கைகளை
BSNL BOARD ல் உடன்டியாக ஒப்புதல் பெற்று தரவேண்டும் என்று

CMD க்கு BSNLEU பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்
.

1) NON-EXECUTIVE களூக்கு NEPPல்  E1 சம்பளவிகிதம் அமுல்படுத்தவேண்டும்
.

2) விடுபட்ட SR.TOA, RM கேடர்களுக்கு கூடுதல் ஒரு இன்கிரிமெண்ட்
வழங்கவேண்டும்.

3) கேசுவல் லேபர்களுக்கும் கீராஜூவிட்டி வழங்கவேண்டும்.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Thursday 22 June 2017

தர்ணா போராட்டம் வெற்றி

20.06.2017  நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தஞ்சையில் 100 பேர், கலந்து கொண்டனர். நாடு முழுவதும் தர்ணா போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இனியும் நிர்வாகம்  கோரிக்கைகளின் மீது தீர்வு கானவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் மூலம் நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளோம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி.


13-07-2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

 27-07-2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.

 இயக்கங்கள் நடத்தி வெற்றி பெறுவோம்!!

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Tuesday 20 June 2017

ஊதிய மாற்றம் கோரி தஞ்சையில் 20.06.2017 நடைபெற்ற தர்ணா போராட்டம்


அகில இந்திய அளவில் அனைத்து சங்கங்களின் அறைகூவலை ஏற்று தஞ்சையில் 20.06.2017 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டங்களின் ஒரு சில காட்சிகள்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Monday 19 June 2017

மாபெரும் தர்ணா - 20-6-2017

1) 1/1/2017 முதல் BSNL ஊழியர்களூக்கு ஊதியதிருத்தம் செய்யவேண்டும்

2) 1/1/2017 முதல் ஓய்வுதிய மாற்றம் செய்யவேண்டும்


3)நேரடிநியம ஊழியர்களூக்கு 30% ஓய்வூதியபலன்கள் வழங்கவேண்டும்


4)ஓய்வூதியபங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்றாற்போல் 
இருக்கவேண்டும்

5) BSNLல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் கார்ப்பரேட் உத்தரவை
ரத்து 
செய்யவேண்டும்.

20-6-2017 காலை 10.00 மணி முதல்  
தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில்  BSNLEU, SNEA, SNATTA, AIBSNLOA, TSOA,  AIGETOA   சங்கங்கள் சார்பாக தர்ணா நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்.

BSNLEU--&--SNEA--&--SNATTA  தஞ்சை மாவட்டசங்கங்கள்

Friday 16 June 2017

ஊதிய மாற்றம் எங்கள் உரிமை

ஊதிய மாற்றத்தை அடைந்திட அனைத்து அகில இந்திய சங்கங்களின் அறைகூவலை தமிழகத்தில் அமலாக்கிட தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல்  <Click Here>

Monday 12 June 2017

ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!

நமது BSNL நிறுவனத்தின் பணத்தை...! வீண் செலவு செய்வதைக் கண்டித்து...! அனைத்து சங்கங்களின் சார்பாக... ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!

தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 12-06-2017  காலை 0930மணி அளவில்  BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA,TEPU, SEWA, AIGETOA  சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Thursday 8 June 2017

போராட்ட திட்டங்கள் அறிவிப்பு.

02.06.2017 டெல்லியில் கூடிய BSNL ஊழியர்  மற்றும் அதிகாரிகளின் சங்கத் தலைவர்கள் ஏக மனதாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத் திட்டங்களை வடிவமைத்தனர். மேலும் BSNL அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்ட நடவடிக்கைகளை தடைசெய்ய டெல்லி பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் BSNL கார்ப்போரேட் நிர்வாகம் கடந்த 06.05.2017 அன்று தடைஆணை பெற்று அனைத்து மாநில பொது மேலாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக கடந்த 08.05.2017 வெளியிட்ட கடிதத்தையும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. 

கோரிக்கைகள்:-

1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி……


இயக்கங்கள் :-     

 A) 20-06-2017  நாடு தழுவிய தார்ணா.

B) 13-07-2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

C) 27-07-2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.

   இயக்கங்களை வெற்றிகரமாக்கி ஊதிய மாற்றம் பெற்றிட கரம் கோர்ப்போம் ! களம் காண்போம் !!

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

 

Wednesday 7 June 2017

6.6.2017 அன்று நடைபெற்ற தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்தமிழ் மாநில கவுன்சில் கூட்டம்சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில், 6.6.2017 அன்று  நடைபெற்றது.
பின்வரும் பிரச்னைகள் விவாதிக்கப் பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன :
1.     பரிவு அடிப்படையிலான நியமனங்கள் :
31.3.2016 வரை மாநில அலுவலகத்துக்குவந்த 135 மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு,  39 பேருக்கு நியமனங்கள்  ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன.  தர்மபுரியில் 2 பேருக்கும்வேலூரில் ஒருவருக்கும் விடுபட்டுள்ளது சுட்டிக் காட்டப் பட்டதுவிடுபட்ட பட்டியல் தந்தால் அவையும் பரிசீலிக்கப்படும் என்றும், 2016-17 ஆம் ஆண்டிற்கான  பரிவு அடிப்படையிலான  பணி நியமனத்திற்காக 1.4.2016 முதல் 31.3.2017 வரை மாவட்ட அலுவலகங்களுக்கு வந்துள்ள மனுக்கள் 20 நாட்களுக்குள் மாநில அலுவலகத்துக்கு அனுப்பப் பட வேண்டும் என தலைவர் முடிவு தெரிவித்தார்.
நாட்குறிப்பேடுடவல்டம்ளர் உள்ளிட்டவற்றுக்கான ரொக்கப் பணம் :
அனைத்து ஊழியர்களுக்கும் ரூ. 750 ஆக உயர்த்தப் படும் என முடிவு செய்யப் பட்டது.
3.    CYMN- இல், GSM எண்களில் 94 லெவல் :
94 லெவலில் சிம் பற்றாக்குறை உள்ளதால் புதிய 8300 லெவல் சிம்கார்ட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  எனினும் கடந்த இரண்டுமாதங்களில் 22,100 சிம்கார்ட்கள் 94 லெவல் சிம்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், FRANCHISEகளுக்கு 20,600 சிம் கார்ட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும்தெரிவிக்கப்பட்டது.
4.    சேல்ஸ் பிரிவு ஊழியர்களுக்கு ப்ரீ-பெய்ட் சிம்களில் பேசும் நேர அதிகரிப்பு :
விஜய் டீமில் உள்ள வர்களுக்கு 200 ரூபாய்களுக்கு கூடுதலாக 300 ரூபாய்கள் வழங்குவதற்கான உத்தரவு 02.03.2017 அன்று வெளியிட்டுள்ளதாகவும்அதனைமாவட்டங்களில் உடனடியாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.
5.    புதிய பதவி உயர்வு திட்ட அமலாக்கத்தில் திருத்தங்கள் :-
சேலம்நீலகிரி மாவட்டங்களில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.     ப்ராஜெக்ட் விஜய் திட்டத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியர்களுக்கு இன்செண்டிவ் வழங்குதல் :
மாவட்டங்களில் தவறான புரிதல் காரணமாக நிறுத்தப் பட்டிருந்தது. 01.10.2015 முதல் 30.09.2017 வரை இன்செண்டிவ் வழங்க ஏற்கனவே மாவட்டங்களுக்குவழிகாட்டுதல் வழங்கப் பட்டுள்ளது,
7.   விதி-8- இன் அடிப்படையில் தமிழ் மாநிலத்திற்குள் இடமாற்றல் மனுக்கள் ஒப்புதல் அளிக்கப் பட வேண்டும் :
திருச்சிகாரைக்குடிவேலூர்பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 14 மனுக்கள் குறிப்பாக முதுகுளத்தூரிலிருந்து தூத்துக்குடி மற்றும்கடலூரிலிருந்து பாண்டிச்சேரி உள்ளிட்ட இட மாற்றல் பிரச்னைகள் நிலுவையில் உள்ளது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது.  உடனடியாக தீர்க்கப் படவேண்டும் என முடிவு செய்யப் பட்டது.
8.  முந்தைய மாநில கவுன்சில் கூட்ட முடிவின்படிஅனைத்து ஊழியர்களுக்கும் BSNL   பைகள் வழங்குதல் :
நிதி நெருக்கடி காரணமாக பூர்த்தி செய்ய முடியவில்லைவிரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்.
9.  தமிழகம் முழுவதும்அலுவலகம்தொலைபேசியகம்குடியிருப்புஆய்வு குடியிருப்பு கட்டிடங்கள் 
      பராமரிக்கப் படுதல் :
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.  3.6 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது.   விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்.
1  0. இம்யூனிட்டி இடமாற்றல்கள் தாமதமின்றி அமுலாக்கம் :
அனைத்து இம்யூனிட்டி இடமாற்றல்களும் அமுலாக்கப் பட்டுள்ளன.
11.  மெடிக்கல் கமிட்டி :
மெடிக்கல் பில்கள் தாமதம்கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் குறித்து உடனடி நடவடிக்கை 
எடுக்க மெடிக்கல் கமிட்டி பின்வரும் உறுப்பினர்களைக்கொண்டு அமைக்கப் பட்டுள்ளது :
DGM (ADMN), DGM(FIN), AO(PENSION CELL), AGM(SR&WLF)  ஆகிய அதிகாரிகள்      மற்றும் BSNL ஊழியர் சங்கத்திலிருந்தும், NFTE சங்கத்திலிருந்தும் தலா 2 பிரதிநிதிகள்
    12.  COAXIAL REPEATER STATION- களைக் கையகப் படுத்துதல் :-
STRலிருந்து மாநிலத்திற்கு வழங்கப்பட்ட இடங்கள் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
13ஊழியர்கள் MOU வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தொகை தருவதில் தாமதம் ஏற்பட்டதால் 
      பிடிக்கப்படும் அபராத வட்டி:-
கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று 
தெரிவிக்கப்பட்டது.  இதனால் ஏற்படும்இழப்பை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என ஊழியர் தரப்பில் 
தெரிவிக்கப்பட்டதால் இந்த பிரச்சனையை அகில இந்திய கவுன்சிலுக்கு பரிந்துரைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
14. TSM தோழர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரை அமலாக்கம்:-
இது தொடர்பாக கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அமலாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டதுஊழியர்  தரப்பில் இவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்பரிந்துரையினை அமலாக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. கார்ப்பரேட் அலுவலகத்தில் விளக்கம் கேட்டு அமலாக்க உறுதி   அளிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு   மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பள பட்டுவாடா செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
15. ஊழியர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்ட பணத்தை திரும்ப பிடிப்பதை நிறுத்துவது:-
இது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.    கார்ப்பரேட் அலுவலக உத்தரவை சுட்டிக்காட்டி விரைவில் அனுப்பவேண்டும் என ஊழியர் தரப்பில்   வலியுறுத்தப்பட்டது.     விரைவில் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்ப உறுதி அளிக்கப்பட்டது.
16ப்ராஜக்ட் சஞ்சய் தமிழகத்தில் அமலாக்கம்:-
தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்திலும் ப்ராஜக்ட் சஞ்சய் அமலாக்கப்பட்டதை  சுட்டிக்காட்டி மாவட்டங்களில் விடுபட்ட இடங்களிலும் இதனைவிரைவில் டெண்டர் காலம்   முடிவடைந்தவுடன் அமலாக்க வழிகாட்டியுள்ளார்.
17.  விடுபட்ட பகுதிகளுக்கு HRA:-
இது தொடர்பான 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் மாநில நிர்வாகத்திற்கு ஊழியர்  தரப்பில் வழங்கப்பட்டது.  கார்ப்பரேட் அலுவலகத்தில் விளக்கம்கேட்டு அமலாக்கப்படும் என   தெரிவிக்கப்பட்டது.
18.  உரிய தேதியிலிருந்து NEPP பதவி உயர்வு:-
தோழர் N.ராமசாமி SSS(O) சென்னை அவர்களின் பிரச்சனையை நிதி மற்றும் நிர்வாக அதிகாரிகள்   இணைந்து விரைவில் தீர்வு காண வழிகாட்டப்பட்டுள்ளது.
19. கவுன்சிலில் எடுக்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றான தலமட்டங்களில் WORK COMMITTEE மற்றும் LOCAL COUNCIL கூட்டங்கள் விரைவாகவும்உரிய காலஇடைவெளியிலும் நடத்த மாவட்ட பொது மேலாளர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.