Wednesday 22 March 2017

BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்

ஊழியர் நலனுக்காக BSNL நிறுவனம் காத்திட ..பொதுத்துறை காத்திட ..
16வது அமைப்பு தினம் காணும் BSNL ஊழியர் சங்கம் வாழ்கவே ! வாழ்கவே !! வாழ்கவே !!!

அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க 16வது அமைப்பு தின வாழ்த்துக்கள்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday 15 March 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று எல்லா கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். தஞ்சையில் மாரீஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகத்தில்  மாலை 05 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பங்கேற்கவும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Thursday 9 March 2017

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் மாற்றிஅமைக்கப்பட்டது.

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 19.01.2017 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம். அதனை தமிழகம் முழுவதும் அமலாக்க வேண்டும் என தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 07.03.2017 தேதியிட்ட கடித எண் ADMN(A)/C-L/Guidelines/2016-17/8 மூலம் அறிவித்துள்ளது. மாவட்ட சங்கங்கள், ஒப்பந்த ஊழியர் சங்கங்களுடன் இணைந்து இதனை முறையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday 8 March 2017

International Women’s Day

BSNLEU conveys best wishes and warm greetings to all the women employees of BSNL, on the occasion of International Women’s Day.
=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

நெடுவாசலில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்களும், அதிகாரிகளும்...

ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் தமிழக விளைநிலங்களை சுடுகாடாக மாற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் BSNLல் உள்ள BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA ஆகிய சங்கங்கள் இணைந்து அறைகூவல் விட்டதின் அடிப்படையில் 06.03.2017 அன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Monday 6 March 2017

மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கும் பேரணி 09-03-2017

1. BSNL ன் பங்குகளை விறகும் அரசின் முடிவுகளை எதிர்த்தும்
2.துணை டவர் கார்பொரேஷன் அமைப்பதை எதிர்த்தும்
3. BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்கப்படவேண்டும்
4. Reliance கம்பெனிக்கு ஆதரவான அரசின் நிலைபாட்டை எதிர்த்தும்

மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கும் பேரணி 09-03-2017
தஞ்சையில் அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெறும்

அனைவரும் கலந்துகொள்ளவும்

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday 1 March 2017

Wage revision from 01.01.2017 – Be prepared for struggle to get justice.

The 3rd PRC has already submitted it’s report to the government. The government in turn, has referred it to the secretaries of the concerned departments. It is reliably learnt that, according to the terms and conditions set by the 3rd PRC, it will be very difficult for BSNL employees to get wage revision. Hence, the entire Non-Executives and Executives have to gear up for struggle, for getting justice in the next wage revision.   
 =A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR