Monday 16 October 2017

அனைத்து சங்கங்கள் சார்பாக 16.10.2017 அன்று நடந்த ஆர்ப்பாட்டம்.

01.01.2017 முதல் BSNLல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்தக் கோரியும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திடவும் BSNLல் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் சார்பாக 16.10.2017 அன்று தஞ்சை மாரீஸ் கார்னர்  தொலைபேசியகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்.

Monday 9 October 2017

ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய் 7000- போனஸ்சாக வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக ரூபாய்.3750- மட்டும் கொடுத்த ஒப்பந்தகாரரை மீத தொகையை வழங்க வற்புறுத்தியும், அதை பெற்று தரும்படி நிர்வாகத்தை வலியுறுத்தியும் 09-10-2017 மாலை தஞ்சை மாரீஸ் கார்னர்  தொலைபேசியகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம்

=மாவட்டச் செயலாளர், BSNLEU,  TNTCWU  தஞ்சாவூர் மாவட்டம்

Saturday 7 October 2017

தோழமையுடன் வரவேற்கிறோம்!!

சொந்த வேலை நிமித்தம் காரணமாக தமது 3 மாத கால வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் நமது மாநில தலைவர் தோழர் .எஸ்.செல்லப்பா அவர்களை தோழமையுடன் வரவேற்கிறோம்!!

BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

அனைத்து BSNL ஊழியர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின் முடிவுகள் விபரம்

1)இனி அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் /கூட்டமைப்புகள் ALL UNIONS and ASSOCIATIONS OF BSNL” என்ற பதாகையின் கீழ்செயல்பட்டு,பொதுப்பிரச்சனைகளான சம்பள உடன்பாடு , துணைடவர் நிறுவனம் அமைவதை தடுப்பது போன்ற பிரச்சனைகளுக்காக போராடும்.
2)அனைத்து பொதுச்செயலர்கள் விரைவில் நிர்வாகத்திற்கு போராட்ட அறைகூவலை ஒன்றுபட்டு வெளியிடுவார்கள்.
3)கீழ்க்கண்ட பிரச்சனைகள் உடனடி தீர்வுக்காக போராட்ட கோரிக்கையாக கண்டறியப்பட்டுள்ளன.
 01-01-2017 முதல் சம்பள மாற்றம் மற்றும் 2 வது ஊதிய உடன்பாட்டில் தீர்க்கபடாமல் உள்ள நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள்,  துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவது
4) கீழ்க்கண்ட போராட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அ)16-10-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆ)16-11-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு மனிதசங்கிலி  இயக்கம்
இ)15-11-2017 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்
ஈ)12 & 13-12-2017 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.
உ)காலவரையற்ற வேலை நிறுத்தம்- தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
5) அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று நடைபெறும்.

 போராட்ட ஆதரவு   கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்