Thursday 26 December 2013

தஞ்சை மாவட்டத்தின் வீர வணக்கம்

45ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தின் வீர வணக்கம் 





ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் வீரத் தியாக பூமி யாம் கீழவெண்மணியில் நிலச்சுவான்தார்களுக்கு எதிராகச் செங்கொடி ஏந்திப் போரா டிய தலித் விவசாயத் தொழி லாளர்கள் 44 பேர், 1968 ஆம் ஆண்டு, டிசம்பர் 25 ஆம் நாள், ஆதிக்கக் கொடியவர்களால் ஒரே குடிசையில் வைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.
அந்த வீரத் தியாகிகளின் 45ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதன்கிழமை காலை 10 மணிக்கு, வெண்மணிதியாகிகள் நினைவுத் திடலில் அஞ்சலி நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்றன. தலை வர்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.நிகழ்ச்சிகளுக்கு சி.பி.எம்.மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வாழ்த்துமுழக்கங்கள் ஓங்கி ஒலிக்க,கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபியில், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழுஉறுப்பினர்கள் கே.பாலகிருஷ் ணன்,எம்.எல்.ஏ., அ.சவுந்தரரா சன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர்,எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.மணி, சி.ஐ.டி.யு. மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,வி.தொ.ச.அகில இந்தியத் துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரி முத்து, நாகைமாலி,எம்.எல்.ஏ., திருவாரூர் மாவட்டச் செயலா ளர் ஐ.வி.நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சி.பி.ஐ.மாநிலத் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினரும் சி.பி.ஐ. நாகை மாவட்டச் செயலாளருமான எம்.செல்வராஜ், சி.பி.ஐ. திருவா ரூர் மாவட்டச் செயலாளர் வெ.வீரசேனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தலைவர் கள் தியாகிகள் நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத் தினர்.நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சார்பில் ஏராள மானோர் வீர வணக்கம் செலுத் தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்பட ஏராளமான மாணவர்கள் மற்றும் இளை ஞர்களும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.காத்தமுத்து நன்றி கூறினார். (ந.நி)



No comments:

Post a Comment