உழைக்கும் போராளிக்கு உன்மையாக உழைக்கும் எழுச்சியுள்ள எங்கள் அன்பு தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்
நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ப.அபிமன்யு அவர்களின் பணிநிறைவுப் பாராட்டுவிழா புகைப்படம்-1 பார்க்க:<<<Click Here>>>, புகைப்படம்-2<<<Click Here>>>
07-01-2014 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் பொதுச்
செயலர் பாசமிகு அன்புதோழர் ,ப.அபிமன்யு அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவும் மிக சிறப்பாக நடைப் பெற்றது நமது தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட
அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்
நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
கருத்தரங்கத்தின் பேசிய திரு.A.N.ராய் இயக்குனர்(மனிதவளம்) அவர்கள் ஆங்கிலத்தில் உரை ஆற்றினார் அதை நமது பொதுச் செயலாளர் தோழர் ப.அபி அவர்கள் தமிழில் எடுத்துரைத்தார் |
கருத்தரங்கத்தின் உருக்கமாக பேசிய BSNLEU அகில இந்திய பொதுச் செயலாளர் ப.அபி அவர்கள் |
நடைபெற்ற கருத்தரங்கத்தில் நமது பி. எஸ். என். எல் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் திரு
A N .ராய் , இயக்குனர் (மனித வளம் ), திரு அஸ்ரப்கான், தலைமை பொது மேலாளர்
, தமிழகம் , பாலசுப்ரமணியம் , பொது மேலாளர் ,சென்னை வட்டம் ஆகியோர் கலந்து
கொண்டனர் திரு
A .N . ராய், இயக்குனர்( மனிதவள மேம்பாடு), அவர்கள் பேசிய போது
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வாடிக்கையாளர் அனைவர்க்கும் திருப்தியான சேவை செய்ய
வேண்டியதின் அவசியத்தையும் நிறுவனத்தை மீட்டு எடுக்க வேலையின் தன்மையில்
மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் கூறினார் .
நமது பொது செயலர் பேசும் போது வேலை கலாச்சாரம் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டி காட்டினார் .பின்
நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது பொது செயலரின் பல்வேறு கால
கட்டங்களில் நடைபெற்ற தொழிற் சங்க பணிகள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் V
.A .N .நம்பூதிரி ,CITU அகில இந்திய தலைவர் A .K .பத்மநாபன் , தமிழ் மாநில
செயலர் செல்லப்பா ,சென்னை தொலைபேசி மாநில செயலர் கோவிந்தராஜன் ,P .சம்பத்
,தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தோழர் M .முருகையா , ஒப்பந்த ஊழியர் சங்க
மாநில தலைவர் SNEA கோபிநாதன் , வள்ளிநாயகம் (FNTO ),சேவா BSNL ரவீந்திரன்
NFTE சங்க R .கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் நினைவு கூர்ந்தனர் .நமது பொது செயலர் தோழர் ப.அபி அவர்கள் பயணித்த தடங்களில் நாம் அனைவரும் எலுச்சியுடன் பயணம் செய்வதே நாம் தோழர்அவர்களுக்கு அளிக்கும் வாழ்த்து செய்தியாகும் .
வாழ்த்துகளுடன்.....
தஞ்சை BSNLEU மாவட்டசங்கம்
No comments:
Post a Comment