Saturday 25 January 2014

ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம்


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, அடுத்த மாதம் 10ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்க என்எல்சி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. நெய்வேலியில் தொமுச தலைவர் திருமாவளவன் தலைமையில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொமுச, ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், தொவிமு, யுடியுசி தொழிற்சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து இதுவரை 11 சுற்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் இதுவரை அமல்படுத்த வில்லை.இது தொடர்பாக மீண்டும் வரும் பிப்ரவரி 11ம் தேதி சமரச அதிகாரி முன்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில், 10ம் தேதியே வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அளிப்பது, ஒட்டு மொத்த தொழிலாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இந்த முறை பணி நிரந்தரத்தில் எவ்வித சமரசமும் இல்லாமல் எங்களது போராட்டம் தொடரும், அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து தொழிற்சங்கங்களும் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment