Thursday 23 January 2014

Reserve bank announcement


ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும்; ஏப்ரல் 1ந் தேதிக்கு பிறகு வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்
புதுடெல்லி,கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.ஆண்டு எண் கடந்த 2005–ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால், 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.ரிசர்வ் வங்கி அறிவிப்பு இந்நிலையில், புழக்கத்தில் உள்ள, ஆண்டு எண் அச்சிடப்படாத அனைத்து வகை ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதன்படி, 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூ.500, ரூ.1,000 உள்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும், வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு வாபஸ் பெறப்படுகின்றன.
Use Standard Mobile Phones: சிறுவன் கையில் இருந்த 700 ரூபாய் செல்போன் வெடித்தது; கேம் விளையாடியபோது விபரிதம்
இந்தூர்,: மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டடம் பாக்லி கிராமத்தை சேர்ந்த சிறுவன் அர்யான் சிவாடே. அவன் தனது தந்தையின் செல்போனில் கேம் விளையாடியுள்ளான். அப்போது செல்போனில் சார்ஜ் ஏறியுள்ளது. இருந்தாலும் சிறுவன் கேம் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக போன் வெடித்துவிட்டது. இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான். அவனது முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.அவனது கையை மருத்துவர்கள் பாதுகாத்துவிட்டனர். சிறுவனில் ஆள்காட்டி விரல் துண்டிக்கப்படாலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாங்கள் எங்களால் முடிந்த வரை அவரது விரலை துண்டிக்காமல் இருக்க முயற்சி செய்வோம். ஆனால் தேவைபட்டால் அதனை நாங்கள் செய்யவேண்டியதிருக்கும் என்று மருத்துவர் அஷிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவனது தந்தை பேசுகையில் மகேஷ் சந்திரா சிவாடே தனக்கு எந்த நிறுவனம் இதனை தயாரித்தது என்று தெரியாது என்று கூறியுள்ளார்.  நான் இந்த போனை லோக்கல் மார்க்கெட்டில் ரூ. 700க்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் அர்யானுக்கு ரூ. 50 ஆயிரம் வரையில் மருத்துவ செலவு ஆகியுள்ளது. ஒரு ஐபோன் வாங்கும் பணம் அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.  சார்ஜ் ஏறிகொண்டிருந்த போது கேம் விளையாடியதால் பேட்ரி கோளாறு காரணமாக வெடித்துள்ளது என்று தொழிற்நுட்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. வலைப்பூவை தொடர்ந்து அற்புதமாக மலரச் செய்கின்ற தஞ்சை மாவட்டத் தோழர்களுக்கு விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete