Friday, 10 January 2014

1961 - கோவா விடுதலையான நாள்

டிசம்பர் 19, 1961 - கோவா விடுதலையான நாள்

இன்றைய கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் சுமார் 450 ஆண்டுகளாக இருந்தது. இடையில் 1812-1815 காலகட்டத்தில் பிரிட்டிஸாரால் கைப்பற்றப்பட்டது. 1961-ல் இதே நாளில்தான் இந்தியாவோடு இணைந்தது.

1947-ல்இந்தியா பிரிட்டிஸாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்குப் பிறகும் போர்ச்சு கல் நாடு இந்தியாவில், தான் பிடித்து வைத்திருந்த பகுதிகளிலிருந்து வெளி யேற மறுத்தது.

அதனால், இந்தியா 1961 டிசம்பர் 12-ல் ஆபரேஷன் விஜய்எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. கோவா,டாமன் மற்றும் டையூவை போர்ச்சு கீசியர்களின் பிடியில் இருந்து மீட்டது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. டாமன் மற்றும் டையூ இரண்டும் யூனியன் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.
360 கோடி ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த கடினப் பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6 சதவீதப் பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது

சுற்றுலாதான் கோவாவின் முக்கியமான தொழில். இந்தி யாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 12 சதவீதம் பேர் விரும்பி கோவாவுக்குச் செல்கின்றனர். 2004-ல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனராம். இவர்களில் 4லட்சம் பேர் வெளிநாட்டினர்.


No comments:

Post a Comment